பிரியங்கா நல்லா விளையாடுறாங்க.. பாராட்டி சேவ் பண்ண ரசிகை.. கடைசி இடத்தில் சிபி.. பாவனி எங்கே பாஸ்?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 91வது நாளுக்கான 3வது புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 2nd January 2022 - Promo 2 | Raju-வை சீண்டும் Niroop

டிக்கெட் டு ஃபினாலேவுடன் வரும் வாரம் மட்டுமின்றி அதற்கு அடுத்தவாரத்திற்குள்ளும் அமீர் முதல் நபராக உள்ளே நுழைந்து விட்டார்.

அமீரை தொடர்ந்து ராஜு ஜெயமோகன் மக்கள் ஓட்டுக்கள் மூலமாக முதல் நபராக சேவ் ஆன நிலையில், அடுத்த அடுத்த போட்டியாளர்களை இந்த முறை வித்தியசமான முறையில் சேவ் செய்தார் கமல்.

எப்பவுமே ஃபர்ஸ்ட்

எப்பவுமே ஃபர்ஸ்ட்

எனக்கு இந்த நாமினேஷனில் சேவ் ஆவது, டிக்கெட் டு ஃபினாலே எல்லாம் தேவை இல்லை என ஓப்பனாகவே முடிவை சொல்லிவிட்டு முதல் நபராக தொடர்ந்து சேவ் ஆகி வருகிறார் ராஜு ஜெயமோகன். மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டிய வேலையை நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து நிறையவே செய்த நிலையில், ஆடாம ஜெயிப்போமடா என்ற மோடுக்கு வந்து விட்டார்.

சேவ் செய்த மக்கள்

சேவ் செய்த மக்கள்

வழக்கம் போல போட்டியாளர்களை சேவ் செய்யும் விதமும் அதன் ஆர்டரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் ரொம்பவும் முக்கியமானது. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நேரடியாக கண்டு களிக்கும் ரசிகர்களே பிரியங்கா உள்ளிட்ட போட்டியாளர்களை சேவ் பண்ணது சிறப்பான விஷயம். ஒவ்வொரு வாரமும் ஓட்டுப் போட்டு அவங்க தான ஜெயிக்க வைக்கிறாங்க..

பிரியங்கா நல்லா விளையாடுறாங்க

பிரியங்கா நல்லா விளையாடுறாங்க

பிரியங்கா நிறைய பேசினாலும் இந்த கேமை நல்லா விளையாடுறாங்க சார் என ஒரு ரசிகை எழுந்து நின்று அவரை பாராட்டிய பின்னர் சேவ் செய்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் இடம்பிடித்துள்ளது. பிரியங்காவும் அவருக்கு நன்றி கூறினார்.

பிரியங்காவுக்கு அடுத்து நிரூப்

பிரியங்காவுக்கு அடுத்து நிரூப்

ராஜுவுக்கு முன்னாடி தான் சேவ் ஆவேன் என பகல் கனவு கண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து கொண்டே தாமரையிடம் பேசுவதை போலவே வெளியே இருக்கும் மக்களை இன்ஃப்ளூயன்ஸ் செய்ய பார்த்தார் நிரூப். ஆனால், ராஜு, பிரியங்காவுக்கு அடுத்து தான் நீங்க என சேவிங் ஆர்டரில் நிரூப்பை சேவ் செய்துள்ளனர்.

தாமரையை சேவ் செய்றேன்

தாமரையை சேவ் செய்றேன்

நிரூப் சேவ் ஆன பிறகு அடுத்ததாக தாமரையை சேவ் செய்றேன் என இன்னொரு ரசிகை எழுந்து சொல்ல பட்டைப் போட்டு பக்தி மையமாக இருக்கும் தாமரை செல்வி எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கிறார். சொர்ண்ணாக்கா மோடுக்கு நாளை மாறிவிடுவார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

நல்ல வேளை டபுள் எவிக்‌ஷன் இல்லை

நல்ல வேளை டபுள் எவிக்‌ஷன் இல்லை

இந்த வாரமும் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்‌ஷன் இருக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில், கடைசி வரை போராடிய சிபி இந்த வாரமே வெளியே போய்விடுவாரோ என ஏகப்பட்ட ரசிகர்கள் அஞ்சினர். அதன் காரணமாகவோ என்னவோ இந்த வாரம் சிபி சேவ் ஆகி சஞ்சீவ் வெளியேறுகிறார்.

பாவனியை காட்டவே இல்லை

பாவனியை காட்டவே இல்லை

பிரியங்கா, நிரூப் மற்றும் தாமரை சேவ் ஆனதை காட்டிய பிக் பாஸ் எடிட்டர் பாவனி சேவ் ஆன சீனையே காட்டவில்லை. பாவனிக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகள், சர்ச்சை காட்சிகள் வந்தால் காட்ட மட்டுமே இந்த சீசனில் அவரை பிக் பாஸ் டீம் பயன்படுத்தி வருகிறதா? என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் கேட்டு விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X