For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அடேய் நீங்களே கலாய்ச்சிட்டா.. அப்புறம் நாங்க என்ன பண்றது.. புரமோவை பார்த்து பொங்கும் ஃபேன்ஸ்!

  |

  சென்னை: ஒய் பிளட்.. சேம் பிளட், அடேய் நீங்களே கலாய்ச்சிட்டா.. அப்புறம் நாங்க என்ன பண்றது என இன்று வெளியான 3வது பிக் பாஸ் புரமோவை பார்த்து ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.

  பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து, அவங்க ஓவரா நடிக்கிறாங்க, அழுது டார்ச்சர் பண்றாங்கன்னு வெளியே இருக்க ஆடியன்ஸ் தான் கலாய்ச்சி மீம்களாக போடுவது வழக்கம்.

  ஆனால், இந்த சீசனில் எல்லாமே செம உல்ட்டாவாக நடப்பதை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

  அப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா? பரபரக்கும் கோலிவுட்!

  கமலுக்கு வேலை இல்லை

  கமலுக்கு வேலை இல்லை

  பிக் பாஸ் வீட்டில் வாரம் ஆனால் சண்டை வருவதும், வார இறுதியில் அதை பஞ்சாயத்து பண்ணி, சேர்த்து வைக்க கமல் வருவதும் தான் இதுவரை வழக்கம். இந்த வாரம் அர்ச்சனாவுக்கும் பாலாவுக்கும் செம சண்டை இருக்கும் அதை கமல் வந்து சேர்த்து வைப்பாருன்னு பார்த்தா, அவங்களே கட்டிப் பிடித்துக் கொண்டு, மடியில் படுக்க வைத்துக் கொண்டும் பாசத்தை பிழிந்து கமலுக்கு வேலை இல்லாமல் செய்து விட்டனர்.

  யோவ் பிக் பாசு

  யோவ் பிக் பாசு

  ஏற்கனவே ஒரு முறை சொந்தக் கதை சோகக் கதை டாஸ்க் வைத்து அழுகாச்சி சீரியலை நடத்திய பிக் பாஸ் இயக்குநருக்கு, புதுசா ஸ்க்ரிப்ட் எழுத தெரியவில்லையா? என்றும் யோவ் பிக்பாசு.. எத்தனை முறைதான் அவங்க சொந்தக் கதை சோகக் கதையை அழுதுகிட்டே சொல்ல சொல்லுவ.. சத்தியமா முடியல என மீம் போட்டு கதறி வருகின்றனர்.

  பைத்தியமா அலைய வேண்டியதுதான்

  பைத்தியமா அலைய வேண்டியதுதான்

  "எலே பெரியபாசு!... உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?... இனி எல்லோரும் துணியை கிழிச்சுகிட்டு பைத்தியமா அலைய வேண்டியது தான்!... நிறுத்துயா இந்த அழுகாச்சி நாடகத்தை!" என எல்லை மீறி நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

  விக்ரமன் சார் படம்

  விக்ரமன் சார் படம்

  தாத்தா பேத்தி சென்டிமென்ட், அக்கா தம்பி பாசம், அம்மா புள்ளை பாசம் என ஒரே சென்டிமென்ட்டை வச்சே இந்த சீசனை பிக் பாஸ் நிகழ்ச்சி ஓட்டியதை பார்த்து காண்டான ரசிகர்கள், இது வீடு இல்லை விக்ரமன் சார் படம் என மரண ட்ரோல் செய்து ஓட்டி வருகின்றனர். இன்னும் என்னலாம் கருமத்தை பார்க்க போகிறோமோ என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

  எடிட்டன் குசும்பன்

  எடிட்டன் குசும்பன்

  பிக் பாஸ் இயக்குநரை பாராட்டுகிறார்களோ இல்லையோ, பிக் பாஸ் எடிட்டர் ரசிகர்கள் மத்தியில் நல்லாவே பிரபலமாகி விட்டார். நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இல்லை என்றாலும், புரமோ கட்களை சுவாரஸ்யமாக போட்டு ரசிகர்களை எப்படியாவது பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வைத்து விடுகிறார். அனிதா அழும் போது ஹவுஸ்மேட்ஸ் சிரிப்பது அந்த சீனுக்குத்தானா? எடிட்டர் குசும்பன் என இந்த நெட்டிசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

  மொக்கை ஸ்க்ரிப்ட்

  மொக்கை ஸ்க்ரிப்ட்

  "ஒருத்தர் அழும் போது அதை பார்த்து சிரிக்கிற ஒரு கூட்டம் இருக்கு பாருங்க அதான் சார் ஸ்கிரிப்ட்டு...": என இந்த நெட்டிசன் இதே போல சொல்லிக் கொண்டே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு புரமோவை கூட விடாமல் பார்த்து கமெண்ட் செய்து வருவது.. அதான் சார் அவரோட பொழப்பு.

  சரியான செருப்படி

  சரியான செருப்படி

  முன்னாள் மாடல் அழகி சம்யுக்தா மட்டும் அவங்க கணவர் கார்த்தி பத்தி பேசி ஃபீல் பண்ணலாம். அனிதா சம்பத் அவங்களோட கணவர் பத்தி பேசி ஃபீல் பண்ணக் கூடாதா? என அனிதா சம்பத் ஆர்மியினர், சம்யுக்தாவின் கேவலமான அந்த ஆட்டிட்யூடுக்கு சரியான செருப்படி கொடுத்துள்ளனர்.

  கன்னித்தீவு 2

  கன்னித்தீவு 2

  "எழுதி கொடுத்ததை மட்டும் பேசுவியா.. அதை விட்டுட்டு கன்னித்தீவு 2க்கு போற" என இந்த பிக் பாஸ் ரசிகரும் அனிதாவின் கதறலை கிண்டல் செய்துள்ளனர். நீங்களே உங்க ஷோவை கலாய்ச்சிட்டா அப்புறம் கமல் சார் மாதிரி எங்களுக்கும் வேலை இல்லாமல் போயிடுமே என ரசிகர்களும் மீம் கிரியேட்டர்கள் புலம்பி வருகின்றனர்.

  English summary
  Bigg Boss Tamil 4 fans and netizens hilarious reactions for Samyuktha teases Anitha cries in Promo 3 was such a outstanding troll.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X