தனலட்சுமிக்கு ஒரு குறும்படத்தை பார்சல் பண்ண பிக் பாஸ் ரசிகர்கள்.. அடுத்த ஜூலியா இருப்பாரோ!
சென்னை: ஜிபி முத்துவை மரியாதை குறைவாக தான் பேசவில்லை என வாதிட்டு வரும் தனலட்சுமிக்கு தற்போது ரசிகர்கள் ஒரு குறும்படத்தை பார்சல் செய்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கி வெற்றிகரமாக ஒரு வாரத்தை கடக்க உள்ளது.
முதல் வாரத்திலேயே சுணங்கி விட்டால் யாரும் நிகழ்ச்சியை பார்க்க மாட்டார்கள் என போட்டியாளர்கள் நல்லாவே சவுண்டு போட்டு விளையாடி வருகின்றனர்.

டிஆர்பிக்கு உதவிய தனலட்சுமி
மக்கள் போட்டியாளர் என்கிற அங்கீகாரத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த டிக் டாக் பிரபலம் தனலட்சுமி 3வது நாளிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க செமையா விளையாடி வருகிறார். பல ஆண் போட்டியாளர்கள் ஷிவானியை விட அதிகமாக மிக்சர் தின்னுட்டு இருக்க, இறங்கி அடித்து விளையாடிய தனலட்சுமிக்கு எதிராக ஜிபி முத்து ஆர்மி திரண்டு விட்டது.

இரிடேட் ஆன ரசிகர்கள்
முதல் சீசனில் ஜூலியை பார்த்து ரசிகர்கள் எப்படி இரிடேட் ஆனார்களோ, கடந்த சீசனில் அபிஷேக் ராஜாவை பார்த்ததும் எப்படி இரிடேட் ஆனார்களோ அதே போல தற்போது தனலட்சுமியை பார்த்ததும் இரிடேட் ஆகி வருகின்றனர். ஆனால், மற்ற போட்டியாளர்களை போல அமைதியாக இல்லாமல், இப்படி விளையாடினால் தான் நிகழ்ச்சி இண்ட்ரஸ்டிங்காக மாறும் என விளையாடி வரும் தனலட்சுமிக்கும் ஆதரவு கிடைக்க ஆரம்பித்துள்ளது.

ஜனனிக்கு சபாஷ்
பிக் பாஸ் வீட்டுக்கு வந்து விட்டால், அனைவரும் போட்டியாளர்கள் தான் என்றாலும், ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா, தம்பி, அண்ணன், அக்கா என இருப்பதை போலத்தான் இங்கேயும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு வயதிலும் போட்டியாளர்களை அனுப்பு கின்றனர். ஆனால், நீங்க அப்பா மாதிரி இருக்கும் ஜிபி முத்துவை இப்படி மரியாதை இல்லாமல் பேசலாமா என ஜனனி கேட்க மேலும், அவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
தனலட்சுமிக்கு குறும்படம்
உடனடியாக அவன் இவன் என்றோ ஜிபி முத்துவை பற்றி மரியாதைக் குறைவாக ஒரு வார்த்தை கூட தான் பேசவில்லை என வாதம் செய்த தனலட்சுமிக்கு ரசிகர்கள் வெயிட் எ மினிட் என சூப்பரான ஒரு குறும்படத்தை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

ஜிபி முத்துவை திட்டிய தனலட்சுமி
ஜிபி முத்து பற்றி பேசும் போது அது கிடக்குது லூசுன்னு தனலட்சுமி பேசிய வீடியோ க்ளிப்பை எடிட் செய்து குறும்படமாக ரசிகர்களே போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர். இப்படியே பிரச்சனை முத்திப் போய் முதல் வாரத்திலேயே தனலட்சுமியை வெளியேற வைத்து விடுவார்களோ என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

கமலுக்கு வேட்டை
முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு பஞ்சாயத்தும் இல்லை என்றால் கமல் எபிசோடு போர் அடித்து விடும். ஆனால், ஜிபி முத்து - தனலட்சுமி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிறு எபிசோடில் கமலுக்கு சரியான வேட்டை தான் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











