கையை புடிக்கிறது என்ன.. கட்டித் தழுவுறது என்ன.. சிங்கப்பூர் மாடலுடன் அசல் செய்யும் காதல் கோளாறுகள்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருப்பவர்களே அசலுக்கும் நிவாவுக்கும் இடையே காதல் மலர்ந்து விட்டது என பேச ஆரம்பித்து விட்டனர்.

நிவாஷினியை தனியாக அழைத்து ஆயிஷா இப்படியெல்லாம் பேசுறாங்க, கொஞ்சம் ஒதுங்கி இரு என ஃப்ரீ அட்வைஸ் கொடுக்க அவரை நிவாஷினி நாமினேட்டே செய்து விட்டார்.

மேலும், அசலையும், தனலட்சுமியையும் பாத்ரூம் டீமில் குயின்ஸி போட உடனடியாக நான் ஸ்வாப் பண்ணிக்கிறேன் என அசலுக்காக நிவாஷினி போட்ட டிராமாக்கள் எல்லாம் இருவரது காதல் டிராக்கையும் உறுதிபடுத்தி விட்டது.

சான்ஸ் கிடைச்சா

சான்ஸ் கிடைச்சா

எல்லா பெண்களிடமும் கடலை போட்டுப் பார்க்கலாம்.. யார் செட் ஆகுறாங்களோ அவங்களை காதலிக்க ஆரம்பித்து விடலாம் என்பதற்காகவே இந்த பிக் பாஸ் வீட்டுக்கு அசல் கோலார் வந்திருக்கிறார் போல என பிக் பாஸ் ரசிகர்கள் ஆர்ம்பத்தில் இருந்தே கலாய்த்து வருகின்றனர். தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி உள்ளிட்ட போட்டியாளர்களிடம் முயற்சித்து ஒர்க்கவுட் ஆகாத நிலையில், கடைசியாக அசலின் வலையில் நிவாஷினி சிக்கி விட்டார் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

சிங்கப்பூர் மாடல் சிக்கிட்டாங்க

சிங்கப்பூர் மாடல் சிக்கிட்டாங்க

சிங்கப்பூர் மாடலான நிவாஷினியும் பிக் பாஸ் வீட்டில் சரியான துணையைத் தேடியே வந்திருப்பார் என்றும் யாருமே அவருடன் பேசாத நிலையில், படு ஜாலியாக பேசி பாட்டுப் பாடி வரும் அசல் கோலாரை அவர் காதலிக்க ஆரம்பித்து விட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கட்டிப்புடி கட்டிப்புடிடா

கட்டிப்புடி கட்டிப்புடிடா

அசல் கோலார் மற்றும் நிவாஷினி இருவரும் கொஞ்சிக் கொள்ளும் காட்சிகள் தான் தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டிரெண்டிங்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இருவரும் நெருக்கமாக கட்டிப்புடித்துக் கொண்டும், உரசிக் கொண்டும் இருக்கும் ஏகப்பட்ட காட்சிகளை நெட்டிசன்கள் ஒன்றாக கோர்த்து எடிட் செய்து போட்டு இரு காதல் புறாக்களையும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

வாங்கிக் கட்டிய ஆயிஷா

வாங்கிக் கட்டிய ஆயிஷா

நிவாஷினி பாவம் ஒண்ணும் தெரியாத பொண்ணுன்னு நினைச்சி, அசல் கோலாரின் லீலைகளை அவரிடம் எடுத்துச் செல்ல இந்தா வாங்கிக்கோ ஒரு நாமினேஷன் என ஆயிஷாவை இந்த வாரம் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்து விட்டார் நிவாஷினி. அதே போல தனலட்சுமி இருக்கும் பாத்ரூம் டீமில் கூட அசல் கோலார் இருக்கக் கூடாது என நிவா பார்த்துக் கொள்வதை எல்லாம் பார்த்தால் ரொம்பவே கடுப்பாக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அசலை வெளியே அனுப்புங்க

அசலை வெளியே அனுப்புங்க

யாருமே இந்த வாரம் அசல் கோலாருக்கு ஓட்டுப் போடவில்லை என்றால், அவர் இந்த வாரம் எலிமினேட் ஆகி விடுவார். அசீமை கூட அடுத்த வாரம் வச்சி செய்யலாம். ஆனால், இந்த அசல் கோலாரும் நிவாஷினியும் லவ்ங்கிற பெயர்ல பண்ற டார்ச்சரை பார்க்க முடியல என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கழுவி ஊத்துறாங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X