பூமர் அங்கிள் அசீம்.. பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியல.. விளாசும் பிக்பாஸ் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் வீட்டின் பூமர் அங்கிள் அசீம் தான் என்றும் ஷெரினாவை கரெக்ட் செய்ய தனலட்சுமியிடம் வேண்டும் என்றே சண்டை போட்டுள்ளார் அசீம் என நெட்டிசன்கள் ஏகப்பட்ட மீம்ஸ்களையும் ட்வீட்களையும் போட்டு விளாசி வருகின்றனர்.

#Azeem ஹாஷ்டேக்கை போட்டு பொண்ணுங்க கிட்ட எப்படி நடக்கணும்னு கொஞ்சம் கூட உனக்கு சொல்லித் தரலையா அசீம் இதில், கடந்த வாரம் கமல் முன்னாடி அப்படியொரு திருக்குறள் எல்லாம் பேசி டிராமா போட்ட என திட்டி வருகின்றனர்.

இந்த வாரமும் கமல் சாரை டிராமா பண்ணி ஏமாற்றி விடலாம் என்கிற கேமை அசல் தைரியமாக விளையாடி வருகிறார் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

காரியம் ஆகணும்னா கால்ல விழுவாரு

காரியம் ஆகணும்னா கால்ல விழுவாரு

கேமில் ஒரு சதவீதம் கூட நேர்மையாக அசீம் விளையாடவில்லை என ஷிவின் பிக் பாஸிடம் விளக்கம் கொடுத்தார். அடுத்து பேசிய தனலட்சுமி அவருக்கு ஒரு காரியம் ஆகணும்னா கால்ல கூட விழுவாரு.. அதே இல்லைன்னு தெரிஞ்சா அவரோட போக்கே வேற மாதிரி இருக்கு என வெளுத்து வாங்கி உள்ளார்.

ஆயிஷாவிடம் சண்டை

ஆயிஷாவிடம் சண்டை

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஆயிஷாவிடம் ரொம்பவே அசிங்கமாக சண்டை போட்ட அசீம், கமல் எபிசோடில் எல்லாரும் ரெட் கார்டு கொடுக்கும் போது தனக்குத்தானே ரெட் கார்டு கொடுத்துவிட்டு தான் பண்ணது தப்பு என தீயினால் சுட்ட புண் திருக்குறள் எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்டார். ஆனால், அடுத்த வாரம் அதை விட கேவலமாக தனலட்சுமியை மேன் ஹேண்ட்லிங் செய்து அவர் தள்ளிவிட்டது ரசிகர்களை ஆவேசப்படுத்தி உள்ளது.

பூமர் அங்கிள்

பூமர் அங்கிள்

தயவு செய்து இங்க பூமர் அங்கிளை யாரும் டார்கெட் செய்ய வேண்டாம் என பூமர் பொம்மை முகத்தையே அசீம் முகமாக மாற்றி பிக் பாஸ் ரசிகர்கள் அவருக்கு முதலில் ரெட் கார்டு கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்க,, கத்துவதை தவிர கொஞ்சம் கூட கேம் ஆட தெரியவில்லை என வச்சு செய்கின்றனர்.

உன்னை டார்கெட் பண்றாங்களா

உன்னை டார்கெட் பண்றாங்களா

பண்றதை எல்லாம் பண்ணிட்டு எல்லாரும் என்னை டார்கெட் பண்றாங்க.. என்னை கார்னர் பண்றாங்கன்னு அசீம் புலம்புவதை பார்க்கத்தான் முடியலடா சாமி என ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

எச்ச பிஹேவியர்

எச்ச பிஹேவியர்

ஷெரினா நோகாம நோன்பு கும்பிட அசீமை பயன்படுத்தி விளையாடுறாங்க.. அது தெரியாமல் அசீம் அவருக்கு சப்போர்ட் செய்து விளையாடுவது சச் எ எச்ச பிஹேவியர் என பீஸ்ட் படத்தில் விடிவி கணேஷ் பேசும் வசனத்தை போட்டு வெளுத்து வருகின்றனர்.

ஷெரினா மடியில் அசீம்

ஷெரினா மடியில் அசீம்

ஷெரினாவுக்கு சாதகமாக அசீம் தனலட்சுமியிடம் சண்டையிட்ட நிலையில், அவரை தூக்கி மடியிலேயே அமர வைத்துக் கொண்டார் ஷெரினா. இப்போ இந்த டிராமா குயினுக்கு உடம்பு சரியாகிடுச்சா, இப்போ எங்கேயும் வலிக்கவில்லையா என பிக் பாஸ் ரசிகர்கள் அசீம் மற்றும் ஷெரினாவை பங்கம் பண்ணி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X