எப்ப பார்த்தாலும் கத்தும்.. பாயிண்ட்ஸ் பேசாது.. மகேஸ்வரியை மீம் போட்டு வெளுத்த ரசிகர்கள்!
சென்னை: கடந்த இரண்டு வாரங்களாக கமல் சாரிடம் வாங்கிய டோஸ் போதுமென நினைத்து பாத்ரூமில் கதறி அழுத அசீம் இந்த வாரம் முடிந்த வரை அமைதியாக இருக்க முயற்சித்து வருகிறார்.
ஆனால், அசீமை இந்த வாரமாவது வெளியேற்ற மீண்டும் அவரை சீண்டி மகேஸ்வரி செய்யும் சைலன்ட் ஸ்ட்ராட்டஜி வலையில் மீண்டும் அசீம் சிக்கிக் கொள்ளக் கூடாது என ரசிகர்கள் எச்சரித்து வருகின்றனர்.
தற்போது வெளியான 3வது புரமோவை பார்த்த ரசிகர்கள் அதற்கு கீழ் அதிகளவில் அசீமுக்கு ஆதரவாகவும் மகேஸ்வரிக்கு எதிராகவும் போட்டுள்ள கமெண்ட்டுகளை இங்கே பார்ப்போம்..

நாமினேஷனில் இல்லை
என்ன மகேஸ்வரி இந்த வாரம் எலிமினேஷன் இல்ல அதனால் தான் ஓவராக இருக்கீங்களா? என நாமினேஷனில் இருந்து மகேஸ்வரி எஸ்கேப் ஆனதால் தான் இந்த ஆட்டம் ஆடுகிறார் என வெளுத்து வாங்கி உள்ளார் நெட்டிசன்.

கால் வைக்கிற இடமெல்லாம்
என்ன கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடியா இருக்கே என்பது தான் இப்போதைக்கு அசீமோட ரியாக்ஷனாக இருக்கும் என பிக் பாஸ் ரசிகர்கள் அசீமையும் கலாய்த்து வருகின்றனர். அசீம் அமைதியா இருந்தாலும், இந்த மகேஸ்வரி சும்மா விடமாட்டுறாரே என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

எவனும் நம்பமாட்டான்
"அசீமை இனி எவனும் நம்பமாட்டான்... பைத்தியம் மாறி கத்திட்டு கிடந்தா எவன் நம்புவான்.. நான் மட்டும் பெரிய அறிவாளி மாறி பேசிட்டு இருக்கான்.." என இந்த பிக் பாஸ் ரசிகர் சும்மா வச்சி விளாசித் தள்ளி உள்ளார். ஒவ்வொரு வாரமும் அதிக ஓட்டுக்களுடன் முதல் ஆளாக நாமினேஷனில் இடம்பிடித்தாலும் அசீமுக்கு ஓட்டுக்கள் கிடைத்து விடுகின்றன.

எப்ப பார்த்தாலும் கத்தும்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே மற்ற போட்டியாளர்களுடன் கத்தி பேசுவார் மகேஸ்வரி. ஆனால், அவர் பக்கமும் நியாயமும் இருக்காது. அவரிடம் எந்தவொரு பாயிண்ட்ஸும் இருக்காது என ரசிகர்கள் கொரில்லாவுடன் கம்பேர் பண்ணி போட்டுள்ள போட்டோ மீம் டிரெண்டாகி வருகிறது.

அமைதியோ அமைதி
கமல் சார் எபிசோடுக்கு பிறகு ரொம்பவே அசீமிடம் மாற்றம் நிகழ்ந்துள்ளது. மகேஸ்வரி அப்படி பேசிட்டு போயும் அசீம் இப்படி அமைதியோ அமைதி என இருப்பது எல்லாம் வேறலெவல் மாற்றம் என ரசிகர்கள் அசீமுக்கு சப்போர்ட் செய்து மகேஸ்வரியை திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











