இன்னொரு வாட்டி அதை பண்ணீங்கனா.. வெளியே அனுப்பிடுவேன்.. ஏடிகேவுக்கு பிக் பாஸ் அதிரடி வார்னிங்!

சென்னை: ஏடிகேவை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து வந்து பிக் பாஸ் அதிரடி வார்னிங் கொடுத்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இனிமேல் அந்த தவறை நீங்க செய்யக் கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளார் பிக் பாஸ்.

ராப் இசை பாடகரான ஏடிகே எப்படி இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார் என்கிற கேள்வியை தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பி வந்தாலும், இன்னமும் விடாப்பிடியாக ஏடிகேவை உள்ளே வைத்துள்ளனர்.

இந்த வாரம் ஏடிகே வெளியேறுவாரா என எதிர்பார்த்த நிலையில் குறைவான ஓட்டுக்களுடன் அமுதவாணன் கடைசி இடத்தில் உள்ள நிலையில், விஜய் டிவி போட்டியாளரை காப்பாற்ற தில்லாலங்கடி வேலை நடக்குதா என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

கிட்னியில் கல் பிரச்சனை

கிட்னியில் கல் பிரச்சனை

கிட்னியில் கல் பிரச்சனை காரணமாக ஏடிகே மயக்கம் போட்டு விழுந்து மருத்துவ சிகிச்சை பெற்ற நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக அவர் வெளியேறுவாரா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மருத்துவ சிகிச்சை பெற்று மீண்டும் திரும்பி வந்த ஏடிகே தொடர்ந்து விளையாடி வருகிறார்.

ஜனனிக்கு பதில்

ஜனனிக்கு பதில்

இலங்கையை சேர்ந்த போட்டியாளர்களான ஜனனியா? அல்லது ஏடிகேவா? யார் வெளியேறுவார் என இருந்த நிலையில், பலரும் ஏடிகே தான் வெளியேறுவார் என்று கருத்து தெரிவித்தனர். ஆனால், ஏடிகேவை சேவ் செய்து விட்டு அந்த வாரம் ஜனனியை கமல் எவிக்ட் செய்து இருந்தார். எப்படி ஏடிகே தொடர்ந்து சேவ் ஆகி வருகிறார் என்கிற கேள்வி ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.

பிக் பாஸ் வார்னிங்

பிக் பாஸ் வார்னிங்

இந்நிலையில், இன்றைய தினம் ஏடிகேவை கன்ஃபெஷன் ரூமிற்கே அழைத்து பிக் பாஸ் கடுமையாக வார்னிங் கொடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏடிகே அப்படி என்ன தப்பு பண்ணார் என்றும் ஏன் பிக் பாஸ் இப்படியொரு வார்னிங் கொடுத்துள்ளார் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

சிகரெட் பிடிக்கக் கூடாது

சிகரெட் பிடிக்கக் கூடாது

பிக் பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் ரூம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், அங்கே நடக்கும் கூத்துகள் காட்டப்படாது. இந்நிலையில், சிகரெட் பிடிப்பதால் ஏடிகே உடல் நலத்திற்கு கேடு வருகிறது என மருத்துவர்கள் எச்சரித்த நிலையில், அதையும் மீறி ஏடிகே தொடர்ந்து புகை பிடித்து வருவதால் தான் உள்ளே அழைத்து பிக் பாஸ் எச்சரித்துள்ளார்.

வெளியே அனுப்பிடுவேன்

வெளியே அனுப்பிடுவேன்

இனியும் மருத்துவர்கள் அறிவுரையை கேட்காமல் நீங்க சிகரெட் பிடிப்பது தெரிய வந்தால் உடனடியாக உங்களை இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்ப நேரிடும் என்றே அதிரடியாக எச்சரிக்கை தெரிவித்துள்ளார் பிக் பாஸ். ஒரு வேளை ஏடிகேவை இந்த வாரம் அனுப்ப திட்டமா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அமுதுக்கு பதில்

அமுதுக்கு பதில்

இந்த வாரம் கருத்து கணிப்புகளின் படி அமுதவாணன் குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ள நிலையில், விஜய் டிவியை சேர்ந்த அமுதவாணனை சேவ் செய்ய ஏடிகேவை வெளியே அனுப்ப திட்டம் போட்டு விட்டார்களா? என்றும் ஏடிகே ரசிகர்கள் கேள்விகளை கிளப்பி வருகின்றனர். உடல்நலம் மற்றும் மனநலம் என இரண்டுமே ஏடிகேவுக்கு சுத்தமாக சரியில்லை என்றும் அவர் வெளியே செல்வது தான் அவரது உடல்நலத்துக்கு நல்லது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X