Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சார்… ஆப்பிள் சார்… கமலின் முன் அசடு வழிய நின்ற பிரியங்கா !
சென்னை : பிக் பாஸ் வீட்டிள்குள் சத்தமில்லாமல் கமல் வந்த போது ஆப்பிள் சாப்பிட்டுக்கொண்டு அசடு வழிய சிரித்தார் பிரியங்கா.
Recommended Video
அஜித்தோட பெரிய ரசிகன் நான்... மாரி 3 பத்தி யோசிக்கல... இயக்குநர் பாலாஜி வெளிப்படை
வாய் முழுவதும் ஆப்பிளை வைத்துக்கொண்டு நின்ற பிரியங்காவை பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

சாப்பிடுற நேரமா இது
பிக் பாஸ் வீட்டிலிருந்து நிரூப், அமீர் மற்றும் பாவனி மூவரும் வெளியேறியதை அடுத்து பிக் பாஸ் வீட்டில் ராஜூ மற்றும் பிரியங்கா மட்டுமே இருந்தனர். அவர்களை அழைத்துச் செல்ல சத்தமே இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார் கமல்ஹாசன், அந்த நேரத்திலும் வயிறுதான் முக்கியம் குமாரு என்பது போல ஆப்பிளை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார் பிரியங்கா.

சார்… ஆப்பிள் சார்
வீட்டிற்குள் வந்த கமல், வாயெல்லாம் சிரிப்பாக பார்த்திருக்கேன்... என்று பிரியங்காவை கலாய்த்தார். சார்... ஆப்பிள் சார் என்று அசடு வழித்த படி கூறினார்., இதைப்பார்த்த பல நெட்டிசன்ஸ் சரியான சாப்பாட்டு பைத்தியம், பிரியங்காவுக்கு சாப்பாடுதான் உலகம் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

சோறுதான் முக்கியம்
பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததும் பிரியங்காக சாப்பாட்டுக்காகத்தான் முதலில் அழுதார். பீசா, கேக் என எது வந்தாலும் கொஞ்சம் கூட கூச்சமே படாமல் சாப்பிட்டு விடுவார். பேருந்து டாஸ்கின் போது கூட, பீசாவை பார்த்ததும் டாஸ்க்கை பாதியிலேயே விட்டு வந்துவிட்டார் பிரியங்கா. எது எப்படி இருந்தாலும் நமக்கு சோறுதான் முக்கியம் பங்கு என்ற கொள்ளையை வைத்து இருக்கிறார் பிரியங்கா.

லைட்ஸ் ஆஃப்
ஒருவழியாக கமலின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி அப்படியே ஆப்பிளை சாப்பிட்டுவிட்டார் பிரியங்கா. . இதையடுத்து, கமலுடன் பிரியங்கா, ராஜூ தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிக் பாஸ் வீட்டிலிருந்து இருவரின் கைகளையும் பிடித்துக்கொண்டு லைட்ஸ் ஆப் என கூறிவிட்டு மூவரும் வெளியேறினார்கள். இதையடுத்து, பிக் பாஸ் பாஸ் வீட்டின் லைட் அணைக்கப்பட்டன.

ராஜூ வெற்றியாளர்
ராஜூ பாய் என மக்களின் மனம் கவர்ந்த ராஜூ இந்த சீசனின் வெற்றியாளராகி 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை தட்டிச்சென்றார்., பிரியங்காவுக்கு இரண்டாம் இடத்தையும், பாவனி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.