’பிக்பாஸ் வீட்டின் அபிஷேக் ராஜாவா அசீம்’?..கூட்டாளிகளே கழற்றிவிட்டதால் நாமினேஷனில் சிக்கினார்

பிக்பாஸ்-6 வீட்டின் போட்டியாளர்கள் பலர் பழைய போட்டியாளர்களை ஞாபகப்படுத்துகிறார்கள். பலரையும் பலருடன் ஒப்பிடுகிறார்கள்.

இதில் அசீமை சென்ற சீசன் போட்டியாளர் அபிஷேக் ராஜாவுடன் ஒப்பிடுகிறார்கள்.

அனைத்து பிரச்சினைகளிலும் மூக்கை நுழைத்து கருத்து சொல்வது பேசிக்கொண்டே இருப்பது போன்ற காரணங்களால் சீசன் 6ன் அபிஷேக்ராஜா என முடிவு கட்டிவிட்டார்களா?

 பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் 2 ஆம் நாளிலிருந்தே ஃபுல் ஃபார்முக்கு வந்துவிட்டார்கள். கோஷ்டி சேர்வது, காசிப் பேசுவது, சண்டை போடுவது என ஃபார்முக்கு வந்துவிட்டார்கள். இதில் பலர் கடந்த பிக்பாஸ் போட்டியாளர்களை ஞாபகப்படுத்துகிறார்கள்.

 அலப்பறை செய்யும் அசீம்

அலப்பறை செய்யும் அசீம்

இதில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஜி.பி.முத்துதான் அலப்பறை செய்வார் என மற்றவர்கள் பயந்த நிலையில் அவர் அமைதியாக இருக்க, அசீம் அலப்பறையை ஆரம்பித்து வைத்தார். அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பது, தேவையில்லாமல் அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையிடுவது என்று பேசிக்கொண்டே இருந்தார்.

 ஒரு பிரச்சினையில் தலையிட்டு கருத்துச் சொல்கிறேன் பேர்வழின்னு கடுப்பு

ஒரு பிரச்சினையில் தலையிட்டு கருத்துச் சொல்கிறேன் பேர்வழின்னு கடுப்பு

ஒவ்வொரு டாஸ்க், கருத்து கேட்பு கூட்டங்களில் கருத்துச் சொல்கிறேன் என முந்திக்கொண்டு கருத்தை உருவாக்கிக்கொண்டு இருப்பதும், யாருக்காவது பிரச்சினை என்றால் அவர் ஏன் அப்படி இருக்கிறார் என இவராக நியாயம் கற்பித்துக்கொண்டு இருந்ததால் கருத்து கந்தசாமின்னு நெட்டிசன்கள் அழைக்க ஆரம்பித்தனர்.

 சீசன் 6 அபிஷேக் ராஜாவா?

சீசன் 6 அபிஷேக் ராஜாவா?

பொதுவாக அதிகம் பேசுபவர்கள், பேசாமல் வாழ்பவர்களை பிக்பாஸ் ரசிகர்கள் மதிப்பதில்லை. அதிகம் பேசுபவர்களை வெறுக்கவே செய்கிறார்கள். அதனால் தான் அபிஷேக் ராஜா என்னதான் டீமை டாமினேட் செய்தாலும் குறைந்த வாக்கு வாங்கி வெளியே சென்றார். மீண்டும் அழைத்து வரப்பட்டும் உடனே மீண்டும் வெளியே அனுப்பினார்கள். இந்த சீசனின் அபிஷேக் ராஜா என அசீமை சிலர் சொல்லி வருகிறார்கள். அசீம் சற்று அமைதியாகி டாஸ்க் செய்தால் மட்டுமே தப்பிப்பார்.

 டாஸ்க்கிலும் சரியாக செயல்படவில்லை என்று வெளியே அனுப்பப்பட்டார்

டாஸ்க்கிலும் சரியாக செயல்படவில்லை என்று வெளியே அனுப்பப்பட்டார்

நேற்றிரவு நடந்த ரிவ்யூவில் அசீம் சரியாக செயல்படவில்லை என அவரது டீம் மேட்டால் சொல்லப்பட்டு, அதன் காரணமாக கிளப் ஹவுஸ் கேப்டனால் வெளியே அனுப்பப்பட்டார். நாமினேஷன் லிஸ்ட்டிலும் இருக்கிறார். இது அவருக்கு சிக்கலான ஒன்றுதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X