அரசப்பதவிக்காக அடித்துக்கொண்ட பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்..மாஸ்டர் ராஜா-ரச்சிதா ராணி..இருக்கு தரமான சம்பவம்

பிக்பாஸில் ராஜா ராணி டாஸ்க்கை கொடுத்துள்ளார். ராஜா, ராணி, இளவரசன், இளவரசி, சேவகர்கள் என டாஸ்க் கொடுத்துள்ளார்.

ராஜா ராணியாக ராபர்ட் மாஸ்டர், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இதனால் டாஸ்க் களைக்கட்டும் என தெரிகிறது.

இதற்கான பதவிகளுக்கு போட்டியாளர்கள் அடித்துக்கொண்டனர். சிலர் தவிர ராஜா, ராணி, இளவரசி, இளவரசன் பதவிக்கு ஹோம் மேட்ஸ்கள் மோதிக்கொண்டதை பார்க்க முடிந்தது.

சுவாரஸ்யம் கூட்டும் பிக்பாஸ் டாஸ்க்

சுவாரஸ்யம் கூட்டும் பிக்பாஸ் டாஸ்க்

பிக்பாஸ் வீட்டுக்குள் அவ்வப்போது சுவாரஸ்யம் கூட்டவும், போட்டியாளர்களை சுறுசுறுப்பாக வைக்கவும் பிக்பாஸ் டாஸ்குகளை கொடுப்பார். இந்த டாஸ்குகள் மூலம் தனிப்பட்ட நபர்களுக்கான திறமை அடுத்த வாரத்திற்கான எவிக்‌ஷன் பிராசாஸில் இருந்து தப்பிப்பது போன்ற விஷயங்கள் நடக்கும். இன்று பிக் பாஸ் வீட்டில் புதிதாக ஒரு டாஸ்கை பிக் பாஸ் கொடுத்தார் அது பிக் பாஸ் டீம் மூன்று அணியாக பிரிந்து ஒரு அணி ராஜா- ராணி- இளவரசன்- இளவரசி- ராஜகுரு-படைத்தளபதி எனவும் மற்றொரு அணி தலை சேவகர்கள் எனவும் மூன்றாவது அணி அரண்மனையில் உள்ள மியூசியத்தின் பாதுகாவலர்கள் அணி எனவும் மூன்று அணியை பிரித்தார்.

உச்சகட்ட அதிகாரம் கொண்ட அரச பதவி-அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்

உச்சகட்ட அதிகாரம் கொண்ட அரச பதவி-அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்

இந்த டாஸ்க் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது அது உச்சப்பட்ச அதிகாரமாக அரசு குடும்பத்தை சேர்ந்த ராஜா, ராணி, இளவரசன், இளவரசி, ராஜகுரு, படைத்தளபதி அதிக அளவில் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் சேவகர்களாக சேவை செய்ய வேண்டும் என்கிற டாஸ்க் அது. இதில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அரசு குடும்பத்தில் இருந்தால் சொகுசாக இருக்கலாம், அதிகாரம் பண்ணலாம், சேவகர்களாக இருப்பவர்கள் வேலை செய்ய வேண்டும். அரசு குடும்பத்தினர் விருப்பப்படி அவர்கள் பணி செய்ய வேண்டும் என்பதால் இந்த டாஸ்க்கில் அரசு குடும்பத்தில் எப்படியாவது இடம்பெற்று விட வேண்டும் என்பதற்காக அனைத்து போட்டியாளர்களும் அடித்துக் கொண்டனர்.

ராஜா ராணி டாஸ்க் -தரமான சம்பவம் இருக்கு

ராஜா ராணி டாஸ்க் -தரமான சம்பவம் இருக்கு

அரச குடும்ப பதவிகளுக்கு கடும் போட்டி நிலவியது. அதில் ராஜா ராணி ஆக மாஸ்டரும், ரச்சிதாவும் தேர்வு செய்யப்பட்டனர். எதிர்த்து போட்டியிட்ட மணிகண்டன், ஆயிஷா தோல்வி அடைந்தனர். இதே போல் இளவரசன் பதவிக்கு மணிகண்டன், ராம்குமார் போட்டியிட்டனர். மணிகண்டன் வென்றார். இளவரசி பதவிக்கு நான்கு பேர் போட்டியிட்டனர். இதில் குயின்சி, ஆயிஷா ஜனனி, மைனா போட்டியிட்டனர். ஒட்டு மொத்த ஓட்டு ஜனனிக்கு விழுந்தது. ராஜ குருவாக விக்ரமனும்,ஏடிகேவும் போட்டியிட்டனர் விக்ரமன் தேர்வு செய்யப்பட்டார்.

தாடி பாலாஜி மீது ஐஸ்வர்யா நடத்திய குப்பை அபிஷேகம்

தாடி பாலாஜி மீது ஐஸ்வர்யா நடத்திய குப்பை அபிஷேகம்

பிக் பாஸ் வீட்டில் ராஜா ராணி டாஸ்க் ஒரு வாரம் நடக்கும் என தெரிகிறது. இந்த போட்டி இங்கு கடுமையாக இருக்கும் என தெரிகிறது. இதற்கு முன்னர் ஒரு சீசனில் ராஜா-ராணி டாஸ்க்கில் தாடி பாலாஜி மீது ஐஸ்வர்யா வீட்டில் உள்ள குப்பையை கொட்ட வைத்தது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஹவுஸ் மேட்சுகள் பதறிப் போய் தடுக்க முடியாமல் துடித்தனர், சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். அந்த அளவிற்கு கொடூரமாக ஐஸ்வர்யா நடந்து கொண்டார். இதனால் அவருக்கு மதிப்பு குறைந்தது. இந்த டாஸ்கிலும் சில சுவாரசியங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது படை தளபதியாக அசீம் மிரட்டல் -உருட்டல் என கையில் எடுத்து ஏதாவது பிரச்சனையை சந்திக்க நேரலாம்.

ராஜா, ராணியாக ராபர்ட்-ரச்சிதா- நடக்கபோகுது சுவாரஸ்யம்

ராஜா, ராணியாக ராபர்ட்-ரச்சிதா- நடக்கபோகுது சுவாரஸ்யம்

ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும் ராணியாக ரச்சிதாவும் உள்ள நிலையில் சும்மாவே ரச்சிதாவை சுற்றி சுற்றி வரும் ராபர்ட் மாஸ்டர் ராணியாக ரச்சிதா என்றால் என்னென்ன செய்வார் என்பது டாஸ்க் முடிவில் தெரியும். இளவரசியாக நான் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்று கேமரா முன் அழுதமூஞ்சியுடன் பேசினார் ஜனனி. அப்பொழுது அவர் முகம் போன போக்கை பார்த்தால் குழந்தைகள் பொருளைக் கேட்டு அடம்பிடிப்பது போல இருந்தது. அடுத்து எப்படியோ சிலருடைய கேன்வாஸ் மூலம் இளவரசியுமாகிவிட்டார். ஜனனி இளவரசியானதால் அவர் இந்த டாஸ்க்கில் எப்படி செயல்பட போகிறார், அதிகார தோரணையுடன் மற்றவர்களை துன்புறுத்தினால் ஜனனிக்கு கெட்ட பெயராக அமைய வாய்ப்புள்ளது.

ஜனனி இளவரசி தனலட்சுமி சேவகி இருக்கு சம்பவம் இருக்கு

ஜனனி இளவரசி தனலட்சுமி சேவகி இருக்கு சம்பவம் இருக்கு

இந்த டாஸ்கில் அமுதவணன் தானாக வந்து சேவகராக தன்னை மாற்றிக் கொண்டார். மற்றும் சிலருக்கு சிறுசிறு டாஸ்கள் உள்ளது. ஆனால் மொத்தத்தில் இந்த டாஸ்க் அடிதடியில் முடிய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எப்படியும் இந்த வாரம் சுவாரஸ்ய சம்பவம் இருக்கும் என தெரிகிறது. தனலட்சுமி நேற்று பிக் பாஸ் அறிவுரைக்குப்பின் சற்று ஜாலியாக காணப்படுகிறார், ஆனால் அவர் வீட்டில் உள்ள சிலருடன் மறைமுகமாக மோதல் போக்கிலேயே உள்ளார். இது பெரிதாக வெடித்தால் சிக்கலாக மாறும். ஏனென்றால் ஜனனி இளவரசி தனலட்சுமி சேவகி என்று வரும் பொழுது மோதல் வெடிக்க வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் பெரிய சம்பவம் எல்லாம் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X