ஜனனி ஆக்ரோஷப்படுகிறார்.. லெஜண்ட் சரவணா ரியாக்ஷனை மீமாக போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது.. என்ன மாதிரி கெட்டவளும் கிடையாது என்கிற பவர்ஃபுல்லான பஞ்ச் டயலாக்கையே 4 நாட்கள் பட்டினி கிடந்தவர் எப்படி சொல்வாரோ அப்படி சொல்லும் ஜனனிக்கு எதுக்குங்க விக்ரம் வேதா பிஜிஎம் எல்லாம் என்று பிக் பாஸ் எடிட்டரையே நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சீசனிலும் நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க்கை கொண்டு வந்து பொம்மையாக இருந்த ஜனனியை எல்லாம் பஞ்ச் டயலாக் பேச வைத்துள்ளனர் என ரசிகர்கள் செய்துள்ள கலக்கல் ட்ரோல்களை இங்கே பார்ப்போம்..

கொஞ்சம் சத்தமா பேசுமா
இலங்கையை சேர்ந்த ஜனனி நாமும் லாஸ்லியா போல பிக் பாஸ் வீட்டுக்கு சென்று பிரபலமாகி கோலிவுட் ஹீரோயினாகி விடலாம் என்கிற கனவுகளுடன் வந்திருக்கார் போலத் தெரிகிறது. பாவம் லாஸ்லியாவே பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகிறார் என்பதை இவர் அறிந்திருக்கவில்லை போல, பஞ்ச் வசனம் பேசும் ஜனனியிடம் கொஞ்சம் சாப்பிட்டு சத்தமா பேசுமா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சிங்கத்த சீண்டி பார்க்காத
தேவையில்லாமல் சிங்கத்த சீண்டி பார்க்காத என குளிப்பாட்டும் போது பச்சைக் குழந்தை முறைக்கும் போட்டோவை போட்டு ஜனனியை பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். இன்றைய 2வது புரமோவில் ஜனனியை பேசியதை பார்த்தாலே சிரிப்பாத்தான் வருது என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அண்ணாச்சி மீம்
ஜனனி ஆக்ரோஷப்படுகிறார் என தி லெஜண்ட் படத்தில் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி ஆக்ரோஷப்படும் போட்டோவை போட்டு ரசிகர்கள் நக்கல் அடித்து வருகின்றனர். சிறைக்கு போயிட்டு வந்ததில் இருந்தே ஜனனி வெர்ஷன் 2.0வாக மாறிவிட்டார் என்றும் ஸ்கூல் பொண்ணு பேசுற மாதிரி இருக்கு சிரிப்ப அடக்க முடியல என்றும் ட்ரோல்கள் குவிகின்றன.

எதுக்கு இந்த பிஜிஎம்
ஆரி - பாலா சண்டைக்கு இந்த விக்ரம் வேதா பிஜிஎம் போட்டீங்க படு மாஸாக இருந்தது. ஆனால், ஜனனிக்கு ஏன் இப்படியொரு பிஜிஎம் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இது என்ன புது காமெடியா இருக்கு.. இப்படியொரு பிஜிஎம் உனக்கு வெட்கமே இல்லையா விஜய் டிவி என சேனலையும் சேர்த்து வெளுத்து வாங்கி வருகின்றனர்.

ஜனனி கேம் ஸ்டார்ட்ஸ்
கேம் ஆஃப் த்ரோன்ஸ் டேனரிஸ் டார்கரியேன் படம் எல்லாம் போட்டு ஜனனியின் ஆட்டம் ஆரம்பம் என அவரது ஆர்மியினர் செய்யும் வேலை இன்னும் காமெடி இருக்கு என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த வாரம் ஜனனியை முதல் நபராக சேவ் செய்து எங்களோட கெத்த காட்டுறோம் என்றும் ஜனனி ஆர்மியினர் வெறித்தனமாக களமிறங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











