Don't Miss!
- News
"ஆபரேஷன் 111".. எடப்பாடி இறக்கிய மெகா டீம்.. நடப்பது நடக்கட்டும்.. பறந்து போன ஆர்டர்.. ஆஹா செம மோதல்
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ரத்தத்தில் ஃபேஷியல்..ஜூலி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு..ஷாக்கான ரசிகர்கள்!
சென்னை : நடிகை ஜூலி ரத்தத்தால் அழகு சிகிச்சை செய்து கொண்டது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video
2017ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு. பின்னர் அப்போராட்டத்தின் வாயிலாக பொதுமக்களின் மனதில் இடம் பிடித்தார் ஜூலி.
இந்த போராட்டத்தின் மூலம் பிரபலமானதை அடுத்து, பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார்.
புதுசா
மாடு
வாங்கி
இருக்கோம்..
BMW
சொகுசு
கார்
வாங்கிய
பாலாஜி..முருகதாஸ்..
நக்கல்
போஸ்ட்!

பிக் பாஸ் ஜீலி
பிக் பாஸ் ஜீலி என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது குறும்படம் தான். பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா பற்றி மற்றவர்களிடம் பொய்பேசி கமலிடம் கொத்தாக மாட்டிக்கொண்டார் ஜூலி. இதையடுத்து, பிக் பாஸ் வீட்டை விட்டு ஜூலி வெளியே வந்த பின்பும், இணையத்தில் அவரை பலர் ட்ரோல் செய்து கண்டபடி விமர்சனம் செய்தனர். ஆனால், சமீபத்தில் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டு தனக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்தார்.

பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சகபோட்டியாளராக கலந்து கொண்ட தாடி பாலாஜி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜிலி பல அவமானங்களை சந்தித்தார். வேறு யாராக இருந்தாலும் இந்த அளவுக்கு போராடி இருக்க மாட்டார்கள் மனதளவில் உடைந்து இருப்பார்கள்.ஆனால் ஜூலி துணிந்து போராடினார் என்றார். மேலும், ஜூலி 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தார் என்றார். இதன்மூலம் அவருக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகினர்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிடு வருகிறார். ஜீ தமிழ் தவமாய் தவமிருந்து என்ற புது சீரியலில் பாடலுக்கு செமயாக நடனமாடி இருந்தார். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ஜூலி சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.
ரத்த ஃபேஷியல்
தற்போது ஜூலி தனது ரத்தத்தை வைத்து ஃபேசியல் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சிரஞ்சு ஊசி மூலம் ரத்தத்தை எடுத்து அதை பதப்படுத்தி அதன் மூலம் ஜூலி ஃபேஷியல் செய்து கொள்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர் அதிர்ச்சி அடைந்து இது என்ன விபரீத விளையாட்டு என்று கேட்டு வருகின்றனர்.