ஆகாஷவாணி வெப் சீரிஸில் நடிக்கும் கவின்… இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம் !

சென்னை : பிக் பாஸ் கவின் நடிக்கும் ஆகாஷவாணி வெப்தொடரின் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த சீரிஸை அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த ஈநாக் இயக்க உள்ளார்.

சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட் ராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொகுப்பாளர்

தொகுப்பாளர்

நிகழ்ச்சி தொகுப்பாளரான கவின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் சிவா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

காதல்,ரொமான்ஸ்

காதல்,ரொமான்ஸ்

முந்தைய தொடரில் கிடைத்த வாய்ப்பை அடுத்து, சரவணன் மீனாட்சி என்றத் தொடரில் நடித்தார். இந்த தொடர் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. இவர் ரச்சிதா மகாலட்சுமியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்த தொடரில் இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் இளசுகளுக்கு பிடித்துப்போகவே இந்த தொடர் டிஆர்பியில் முதல் இடம் பிடித்து ஹிட்டடித்தது.

சரவணன் மீனாட்சி

சரவணன் மீனாட்சி

சரவணன் மீனாட்சி முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, சரவணன் மீனாட்சி 2 வெளியானது. இதிலும், கவின் மற்றும் ரச்சிதா ஜோடி போட்டு நடித்திருந்தனர். இந்த தொடரும் வெற்றிகரமாக பல வாரங்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சரவணன் மீனாட்சியில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விஜய் டிவியின் விருதையும் வென்றார்.

பிக்பாஸ் சீசன் 3

பிக்பாஸ் சீசன் 3

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3ல் கவின் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா மற்றும் கவின் நெருங்கி பழகினர். இதனால், இவர்கள் இருவரும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இவர்கள் எப்போதும் அந்த வீட்டில் நெருக்கமாக அமர்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.

5 லட்சத்துடன் வெளியேறினார்

5 லட்சத்துடன் வெளியேறினார்

பிக் பாஸ் வீட்டுக்கு வந்த லாஸ்லியாவின் அப்பா மரியநேசன் நீ இங்கே எதற்காக வந்த, இப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்க என்று லாஸ்லியாவை கடுமையாக திட்டினார். பின்னர் ஒரு கட்டத்தில், 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் கவின். வீட்டிலிருந்து வெளியேறக்கூடாது என்று லாஸ்லியா கதறி அழுதார்.

ராசிகர்கள் ஏமாற்றம்

ராசிகர்கள் ஏமாற்றம்

பிஸ்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கவின் லாஸ்லியாவை கண்டுகொள்ளவே இல்லை.

லிப்ட் திரைப்படத்தில்

லிப்ட் திரைப்படத்தில்

வினீத் வரப்பிரசாம் இயக்கி உள்ள லிப்ட் திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஆகாஷவாணி

ஆகாஷவாணி

கவின் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்த தொடருக்கு ஆகாஷவாணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸை அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த ஈநாக் இயக்க உள்ளார். இந்த தொடரில் கவினோடு சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட் ராமன், மார்கரெட், மெல்வின், ஜான்சன், கவிதாலயா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

இந்த வெப்சீரிஸ் தொடருக்கான பூஜை அண்மையில் போடப்பட்டன. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. தற்போது இந்த வெப் தொடருக்கான படப்பிடிப்பு இன்று முதல் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது.

உதவி இயக்குனர்

உதவி இயக்குனர்

கவீன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும், கவின் ஹீரோவாக நடிக்க உள்ள ஆகாஷவாணி திரைப்படத்திலும் உதவி இயக்குனராக பணி புரிகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X