காதல் பற்றி கவின் வெளியிட்ட ஸ்டிராங் மெசேஜ்...யாருக்கு சொன்னார் இதை

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் நடிக்க வந்தவர் கவின். அதன் பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் இவரது நடிப்பு பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பிக்பாஸ் 3 ல் போட்டியாளராக பங்கேற்றார்.

 Bigg Boss Kavins sudden strong message about love

அந்த நிகழ்ச்சியில் லாஸ்லியா, கவின் இடையேயான காதல் முக்கியமாக பேசப்பட்டு, அந்த நிகழ்ச்சியை கூடுதல் பிரபலமாக்கியது. அந்த பிக்பாஸ் ஷோ முடிந்த பிறகு கவினும், லாஸ்லியாவும் எங்கும் ஒன்றாக கலந்து கொண்டது கிடையாது.

அத்துடன் ரசிகர்கள் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பும் போது ஒருவரின் பெயரை மற்றவர் குறிப்பிடுவதையும் தவிர்த்து வந்தனர். இருவரும் பிரிந்து விட்டனரா அல்லது இவர்களின் உறவு பலமானதா என எதையும் வெளிப்படுத்தவில்லை.

 Bigg Boss Kavins sudden strong message about love

இந்நிலையில் காதல் பற்றிய ஒரு வலுவான மெசேஜை இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கவின். அதில், நீங்கள் நேர்மை, வெளிப்படைத்தன்மைக்கு தகுதியானர், உங்கள் மனமறிந்து பொய் சொல்லாமல் உங்களை மதிக்கும் ஒருவருக்கு உண்மையான தகுதியாக இருக்கனும். பாராட்டு, விஸ்வாசத்திற்கு தகுதியானராக இருக்கனும். உங்கள் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தாத ஒருவரின் அன்புக்கு தகுதியாக இருக்கனும்.அத்தனை பேரும் உங்களை விட்டு போனாலும், எப்போதும் உங்களுக்காக நிற்கும் ஒருவருக்கு தகுயுடையவராக இருங்கள். உங்களிடம் உண்மையாக இருக்கும் ஒருவரை எப்போதும் குறைவாக மதிப்பிட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

கவின் இந்த கடுமையான வார்த்தைகளை யாருக்காக கூறி உள்ளார், அவரது ரசிகர்களுக்காகவா அல்லது தனது வாழ்க்கை சேர்ந்த யாருக்காக இதனை கூறி உள்ளார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தில், அசிஸ்டென்ட் டைரக்டராக கவின் பணியாற்றி உள்ளார். அடுத்து பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயருக்கு ஜோடியாக லைப் படத்தில் கவின் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X