வளர்ச்சின்னா இப்படி இருக்கனும்...ஏகே 61 ல் இணைந்த பிக்பாஸ் பிரபலம்
சென்னை : அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 படத்தில் முக்கியமான பிக்பாஸ் பிரபலம் ஒருவரும் இணைந்துள்ளாராம். அதுவும் முக்கியமான ரோலில் நடிக்க புக் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியானதால் சோஷியல் மீடியாவில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீசான மூன்றே நாட்களில் இந்த படம் உலகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் 100 கோடியை கடந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் 35 கோடியை கடந்துள்ளது. இதுவரை வெளியான பெரிய படங்களிலேயே ஓப்பனிங் நாளில் அதிக தொகையை வசூலித்தது வலிமை படம் தான்.

ஐதராபாத்தில் ஏகே 61
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணி இணைய உள்ளது. ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷுட்டிங் மார்ச் 9 ம் தேதி துவங்கப்பட உள்ளதாம். முதல் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் நடத்தப்பட உள்ளதாம். இதற்காக சென்னை அண்ணா சாலையை, ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் செட்டாக அமைத்துள்ளனர்.

மீண்டும் இரட்டை வேடத்தில் அஜித்
வலிமை படத்தை போல் இல்லாமல் இது முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்கும் என போனி கபூர் ஏற்கனவே கூறி உள்ளார். வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அஜித், ஏகே 61 படத்தில் ஒரு சாதாரண சராசரி மனிதன் ரோலில் நடிக்க போகிறாராம். அஜித் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க போகிறார். அதுவும் பாசிடிவ் - நெகடிவ் என இரு ரோல்களில் நடிக்க போகிறார். இந்த படத்தில் தபு, பிரகாஷ்ராஜ் ஆகியோர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அஜித் படத்தில் இணைய உள்ளனர்.

ஏகே 61 ல் இணைந்த பிக்பாஸ் பிரபலம்
ஏகே 61 படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் லேட்டஸ்ட் தகவலாக பிக்பாஸ் பிரபலமான கவின் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து முக்கிய ரோலில் நடிக்க உள்ளாராம். இது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாம். விரைவில் கவின் மட்டுமின்றி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் போன்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளதாம்.

விஜய் டிவி டூ ஏகே 61
விஜய் டிவியில் சீரியல்கள் மூலம் பிரபலமான கவின், பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். விஜய் டிவியில் பணியாற்றும் போது டைரக்டர் நெல்சன் திலீப்குமாருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவர் இயக்கிய படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார் கவின். முதல் முறையாக கவின் லீட் ரோலில் நடித்த லிஃப்ட் படம் செம வரவேற்பை பெற்றது, கவினின் நடிப்பும் பாராட்டப்பட்டது.

வளர்ச்சின்னா இப்படி இருக்கனும்
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை தொடர்ந்து, தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் திரைக்கதை பணியில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து தயாரிக்கும் ஊர்க்குருவி படத்தில் லீட் ரோலில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். சமீபத்தில் ஆகாஷ்வாணி என்ற வெப்சீரிசிலும் நடித்து பேசப்பட்ட கவின் தற்போது அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இந்த தகவல் வெளியானதும் வளர்ச்சின்னா இப்படி தான் இருக்கனும் என நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து, பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











