அட செம...பீஸ்ட் பட நடிகையுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் கவின்

சென்னை : பிக்பாஸ் கவின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பீஸ்ட் பட நடிகை நடிக்க போகிறாராம். இந்த தகவல் வெளியானதில் இருந்து கவினின் அசுர வளர்ச்சியை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியலான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் நடிக்க வந்தவர் கவின். பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் ரோலில் நடித்து பிரபலமானார். சின்னத்திரையில் பிரபலமான கவின், பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த சீசனில் லாஸ்லியா உடனான காதல் விவகாரத்தால் பரபரப்பாக பேசப்பட்டார் கவின்.

லாஸ்லியா - கவின் காதல்

லாஸ்லியா - கவின் காதல்

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா- கவின் இருவரும் காதலை வெளிப்படுத்துவார்கள், திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் ஒருவரை பற்றி மற்றவர் பேசவேயில்லை. ஒன்றாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவுமில்லை. அதோடு இருவரும் சினிமா வாய்ப்புக்கள் கிடைத்து பிஸியாகி விட்டனர்.

சினிமாவில் கலக்கும் கவின்

சினிமாவில் கலக்கும் கவின்

நெல்சன் திலீப்குமார் இயக்கும் படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி வந்த கவின், லிஃப்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த கவின், அடுத்தபடியாக விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஊர்க்குருவி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தபடியாக அஜித்தின் ஏகே 61 படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

பீஸ்ட் நடிகையுடன் ஜோடி

பீஸ்ட் நடிகையுடன் ஜோடி

ஓடிடி.,யில் இவர் நடித்து வெளியான ஆகாஷ்வாணி படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புதிய படம் ஒன்றில் நடிக்க கவின் கமிட்டாகி உள்ளார். அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கும் புதிய படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ், கவினுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அபர்ணா தாஸ், விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு தங்ககையாக நடித்துள்ளார். கவின் நடிக்கும் படத்தின் மூலம் அபர்ணா தாஸ் ஹீரோயினாகவும் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

ஓ...இவர் தான் காரணமா

ஓ...இவர் தான் காரணமா

நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் கவின் தான் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார். பீஸ்ட் படத்தில் அபர்ணா தாசின் நடிப்பை பார்த்து வியந்த கவின், தனது படத்தில் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கவின் நடிக்கும் புதிய படத்தை ஒலிம்பியா மூவிஸ் பேனரில் அம்பேத்குமார் எம்எல்ஏ தயாரிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X