For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  லேடிஸ் ஏரியவுல பெட்.. இனிமே தான் மொட்டை மாமா ஆட்டம் ஆரம்பம்.. ரியோவை வச்சு விளையாடிய பிக் பாஸ்!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் 4வது சீசனில் டாய்லெட் மற்றும் பெட்ரூமுக்கு பூட்டுப் போட்டு ஆரம்பமே நான் ரொம்ப ஸ்ட்ரிக்டான பாஸ் என பிக் பாஸ் தன்னை வெளிக்காட்டினார்.

  RamyaPandiyan, SanamShetty and six others nominated for elimination

  நான் பாஸுக்கெல்லாம், பாஸு, ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம்.. அதை அடக்க முடியாது, திறந்து விடுங்க இல்லைன்னா நாறி போயிடும் என்கிற ரேஞ்சுக்கு கமல் சொன்னதை சொன்ன படி கேட்ட பிக் பாஸ் டாய்லெட்டின் பூட்டுக்கான சாவியை மட்டும் கொடுத்தார்.

  இன்னும் பெட்ரூம் ஒன்று பூட்டியே கிடப்பதால், ஆண்கள் அனைவரும் கார்டன் ஏரியாவிலேயே படுத்து தூங்குகிறார்கள்

  எனக்கு திக்குவாய்.. உங்க கிட்டலாம் பேசத்தான்.. இங்க வந்தேன்.. சோம சேகரும் செம ஸ்கோர் பண்ணிட்டாரு!

  குளிர் பிரச்சனை

  குளிர் பிரச்சனை

  கார்டன் ஏரியாவில் தூங்குவதால், குளிர் பிரச்சனை ஏற்பட்டது. குட்டிக் குழந்தை ஆஜித்துக்கு குளிரடித்ததை பார்த்து பரிதாபப்பட்ட நடிகர் ஆரி, முல்லைக்கு தேர் தந்த பாரி மாதிரி போர்வை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பேர் வாங்கினார். ஆனாலும், பிக் பாஸ் அந்த பூட்டுக்கான சாவியை இன்னமும் கொடுக்கவில்லை.

  ரியோ ராஜ் கம்ப்ளைண்ட்

  ரியோ ராஜ் கம்ப்ளைண்ட்

  விஜய் டிவியில் வெளியிடாமல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான அன்சீன் காட்சியில், மொட்டை தல சுரேஷ் பெட் இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுகிறார், அவரை நினைச்சாவது அந்த ரூம் சாவியை கொடுங்க பிக் பாஸ் என கேட்க முன் வந்த நடிகர் ரியோ ராஜ், சுரேஷ் சக்கரவர்த்தியை வச்சு செய்து கலாய்த்து, அவர் குறட்டைலாம் விடுறாரு, தாங்க முடியல, நைட் எல்லாம் தூங்க முடியல என கம்ப்ளைன்ட் பண்ணது செம வைரலாக ரசிகர்கள் மத்தியில் ரீச்சானது.

  என்ன வில்லங்கம் வரப் போகுதோ

  என்ன வில்லங்கம் வரப் போகுதோ

  இந்நிலையில், 5ம் நாள் எபிசோடில், நடிகர் ரியோ ராஜை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்தார் பிக் பாஸ். ரொம்ப ஓவரா ஓட்டிட்டோமோ, இதுல என்ன வில்லங்கம் வரப் போகுதோ என்கிற தொனியில் ஹாரர் ஹவுஸான கன்ஃபெஷன் ரூமுக்கு போன ரியோ ராஜிடம், பெண்கள் படுத்திருக்கும் இடத்தில் ஒரு பெட்டை சுரேஷ் சாருக்கு அரேஞ்ச் பண்ணி தரும் உத்தரவை போட்டார்.

  பிக்பாஸையும் விடல

  பிக்பாஸையும் விடல

  மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி அவருக்கு பெட் வழங்க வேண்டும் என பிக் பாஸ் உத்தரவு போட்ட நிலையில், ஓகே பிக் பாஸ் என நல்ல புள்ள மாதிரி தலையை ஆட்டிய ரியோ ராஜ், இப்போ கூட அந்த ரூம் சாவியை தர மாட்டீங்கள என அவர் ஏரியாவிலேயே பிக் பாஸையும் விடாமல் கலாய்த்து விட்டு வந்துவிட்டார்.

  தூக்கிட்டு போய் போட்ருவேன்

  தூக்கிட்டு போய் போட்ருவேன்

  என்ன சொன்னாரு பிக் பாஸ் என ஆர்வத்துடன் சுரேஷ் சக்கரவர்த்தி கேட்க, பெண்கள் படுத்திருக்கும் அறையில் உங்களுக்கு ஒரு பெட்டை காலி பண்ணி தர சொன்னார். ஐயோ, நான் அங்கெல்லாம் போக மாட்டேன் என மொட்டை மாமா சீன் போட, தூக்கிட்டுப் போய் போட சொல்லி உத்தரவு போட்டுட்டாரு பிக் பாஸ் என்றதும், நம்ம நிஷா அக்கா, தனது படுக்கையை மாற்றிக் கொண்டு, சுரேஷுக்கு இடம் கொடுத்து விட்டார்.

  கண்டிப்பா பிரச்சனை வரும்

  கண்டிப்பா பிரச்சனை வரும்

  நிச்சயம் நம்ம நாரதர் பிக் பாஸ் இதுல ஏதாவது ஒரு உள்குத்து வச்சிருப்பாரு என பிக் பாஸ் ரசிகர்கள் எல்லாம் சமூக வலைதளத்தில் கமெண்ட் போட ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே பொம்பள பிள்ளைங்க இருக்காங்கன்னு கொஞ்சம் கூட புத்தி இல்லாம, காலை பப்பரப்பான்னு விரிச்சு சோபா மேல வச்ச போட்டோவெல்லாம் பலரும் ஷேர் பண்ணி கிழித்து தொங்க விட்டு வருகின்றனர். இதுல இதுவேற!

  English summary
  Actor Rio Raj arranged a bed for Suresh Chakaravarthy in ladies area after the Bigg Boss order given in the confession room to Rio.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X