twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நம் வாழ்க்கைக்கு ஆண்கள் தேவையில்லை… என்ன பவானி இப்படி சொல்லிடீங்க!

    |

    சென்னை : நம் வாழ்க்கைக்கு ஆண்கள் தேவையில்லை என்று கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் பவானி பேசியுள்ளார்.

    பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் திகழ்ந்தவர் பவானி. க்யூட்டான பேச்சால் ரசிகர்களை வளைத்துப்போட்டு அவர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துவிட்டார்.

    இந்த சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பெற்ற நிலையில் 3வது இடத்தை பாவனி பெற்றார்.

     'சூரி' என்பது என்னுடைய நிஜப் பெயர் இல்லை! உண்மையான பெயர் என்ன தெரியுமா ? 'சூரி' என்பது என்னுடைய நிஜப் பெயர் இல்லை! உண்மையான பெயர் என்ன தெரியுமா ?

    பவானி ரெட்டி

    பவானி ரெட்டி

    அன்னை வேளாங்கன்னி பெண்கள் கல்லூரியில் நேற்று சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பவானி கலந்து கொண்டார். அங்கிருந்த பெண்கள் அவரை கை தட்டி உற்சாகப்படுத்தி வரவேற்றனர். இந்த விழாவில் பேசி பவானி, முதல் வாரத்திலிருந்தே நான் நாமினேஷன் ஆகிட்டே இருந்தேன். ஆனால், நீங்கள் ஓட்டுபோட்டு என்னை ஜெயிக்க வைத்து 3வது இடத்தை எனக்கு கொடுத்ததற்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது என்றார்.

    விமர்சனங்களை தள்ளிவிடுங்கள்

    விமர்சனங்களை தள்ளிவிடுங்கள்

    பெண்கள் தினத்தில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, உங்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு நான் பெரியதாக எதுவும் சாதிக்கவில்லை. ஆனால், பெண் என்ற முறையில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், பலர் நம்மை விமர்சனம் செய்து கொண்டு இருப்பார்கள், நீ எதை செய்தாலும் அதை விமர்ச்சிப்பார்கள் அது போன்ற ஆட்களை தள்ளிவிட்டுவிட்டு உங்கள் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை தைரியமாக செய்யுங்கள் என்றார்.

    ஆண்கள் தேவை இல்லை

    ஆண்கள் தேவை இல்லை

    யாரையும் நம்பி இருக்காதீர்கள், கல்யாணம் பண்ணிகொடுத்தா கணவர் தான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற காட்டாயம் இல்லை. நம்முடைய வாழ்க்கைக்கு ஆண்கள் தேவை இல்லை, நம்மை நாமே பார்த்துக் கொள்ளமுடியும் அதனால் சந்தோஷமா வாழ்க்கையை வாழுங்கள் என்றார்.

    அமிருக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை

    அமிருக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை

    இதையடுத்து, கூட்டத்தில் இருந்த பெண்கள் அமீர், அமீர் என்று கத்த, அமீர் நல்லா இருக்கிறார். உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப்போல எங்கள் வீட்டிலும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அமிருக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை ஏதாவது இருந்தது என்றால் நிச்சயம் சொல்கிறேன் என்று கொஞ்சும் தமிழில் அழகாக பேசி முடித்தார் பாவனி.

    English summary
    Bigg Boss Pavani Reddy Women’s Day Celebration speech
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X