»   »  பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த சல்மான் கானுக்கு ஒரு நாளுக்கே இவ்வளவு சம்பளமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த சல்மான் கானுக்கு ஒரு நாளுக்கே இவ்வளவு சம்பளமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த நாள் ஒன்றுக்கு சல்மான் கானுக்கு அளிக்கப்படும் சம்பள விபரத்தை அறிந்து பலரும் கிட்டத்தட்ட மயங்கிவிட்டனர்.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் விரைவில் துவங்க உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியில் வெற்றி அடைந்ததை அடுத்தே பிற மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி உங்களுக்கே நன்கு தெரியும்.

சல்மான் கான்

சல்மான் கான்

இந்தி பிக் பாக் நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். 4வது சீசனில் இருந்து சல்மான் கான் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசனையும் சல்மானே தொகுத்து வழங்குகிறார். 11வது சீசன் நிகழ்ச்சியை நடத்த நாள் ஒன்றுக்கு சல்மான் கானுக்கு ரூ. 11 கோடி சம்பளமாம். அவரின் சம்பள விபரத்தை கேட்ட பலருக்கு இன்னும் வியப்பு தீரவில்லை.

4வது சீசன்

4வது சீசன்

பிக் பாஸ் 4வது சீசன் முதல் 6வது சீசன் வரை நாள் ஒன்றுக்கு ரூ. 2.5 கோடி சம்பளம் வாங்கினார் சல்மான் கான். 7வது சீசனில் தனது சம்பளத்தை நாள் ஒன்றுக்கு ரூ. 5 கோடியாக உயர்த்தினார்.

சம்பளம்

சம்பளம்

2014ம் ஆண்டு தனது சம்பளத்தை நாள் ஒன்றுக்கு ரூ. 5.5 கோடியாகவும், 2015ம் ஆண்டில் ரூ. 7-8 கோடியாகவும் உயர்த்தினார். தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 11 கோடி சம்பளம். அம்மாடியோவ், கேட்பதற்கே கண்ணை கட்டுதா?

English summary
Bollywood Sultan Salman Khan is reportedly paid Rs. 11 crore per epsiode to host the TV reality show Bigg Boss.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil