பிக்பாஸ் சஞ்சீவுக்கு இப்படி ஒரு சினிமா பேக்கிரவுண்ட்டா... இதுவரை யாரும் சொல்லவே இல்லையே
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் வீட்டிற்குள் சென்றுள்ளனர். வைல்ட் கார்டு என்ட்ரியாக 50 நாட்களுக்கு பிறகு வந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை இருவரும் பெற்றுள்ளனர்.
Recommended Video
இருவரும் வீட்டிற்குள் வந்த போது அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன. அதில் அமீர், அவரின் குடும்பம் உள்ளிட்டவை பற்றிய தகவல்கள் தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் சஞ்சீவ் பற்றி கூறுகையில், விஜய்யின் நெருங்கிய நண்பர், அவருடன் பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் பிரபலமான நடிகர் என்று மட்டுமே கூறினர்.

சஞ்சீவின் பின்புலம்
சஞ்சீவ் அனைவருக்கும் தெரிந்த நபர் என்பதால் இப்படி சுருக்கமாக சொல்லி முடிக்கப்பட்டது. ஆனால் அவர் சினிமா பின்புலம் கொண்டவர். பல சினிமா பிரபலங்களுக்கு அவர் நெருங்கிய உறவினர் என்ற தகவல் எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை. அந்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

டைரக்டர் அஸ்வினின் உறவினர்
பிக்பாஸ் சனிக்கிழமை எபிசோடில் அன்பறிவு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அப்போது அந்த படத்தின் டைரக்டர் அஸ்வின், சஞ்சீவிற்கு உறவினர் என கமல் கூறினார். சஞ்சீவும் தான் பேசுகையில், தனது அக்கா இறந்த பிறகு அவரது மகளை வளர்க்கும் பொறுப்பு தன்னிடம் வந்ததாகவும், அஸ்வினை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறினார்.

என்னது இவரும் உறவினரா
இதை பார்த்து விட்டு பலரும் சஞ்சீவிற்கும், அஸ்வினுக்கும் அப்படி என்ன உறவு என கேட்க துவங்கி விட்டனர். ஆனால் சஞ்சீவ், டைரக்டர் அஸ்வின் ராமிற்கு மட்டுமல்ல மறைந்த முன்னணி நடிகை மஞ்சுளா விஜயக்குமாருக்கும் உறவினர் தான். மஞ்சுளா விஜயக்குமாரின் தங்கை ஷியாமளாவின் மகன் தான் சஞ்சீவ். அக்கா இறந்த பிறகு என சஞ்சீவ் கண்கலங்கி பேசினார். அந்த அக்கா வேறு யாருமில்லை. நடிகை சிந்து தான்.

அட அவரா இவர்
அருண்பாண்டியன், ராம்கி நடித்த இணைந்த கைகள் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சிந்து, வில்லி, கேரக்டர் ரோல் என பல வேடங்களில் நடித்துள்ளார். இளையதிலகம் பிரபு நடித்த பரம்பரை, சின்னதம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சிந்து. பிறகு மெட்டிஒலி சீரியல் மூலம் சின்னத்திரையிலும் நடித்தார்.

பொறுப்பான தாய்மாமன்
சிந்துவிற்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். ஆரம்பம் முதலே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிந்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு, 2006 ம் ஆண்டு உயிரிழந்தார். அந்த சமயத்தில் சிந்துவின் மகளுக்கு ஒன்பது வயது தான். சிந்துவின் மரணத்திற்கு பிறகு அவரின் மகளை வளர்க்கும் பொறுப்பு சஞ்சீவிடம் வந்துள்ளது. அவர் தான் அந்த பெண்ணை வளர்த்து, படிக்க வைத்து, திருமணமும் செய்து கொடுத்துள்ளார்.

அவர் தான் இவரா
சஞ்சீவ் தனது அக்கா சிந்துவின் மகளுக்காக பார்த்த மாப்பிள்ளை தான் அன்பறிவு படத்தின் டைரக்டர் அஸ்வின் ராம். அதனால் சஞ்சீவும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். வனிதா விஜயக்குமார் கூட சஞ்சீவுடன் இருக்கும் செல்ஃபியை வெளியிட்டு, இவரை தனது உறவினர் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











