ஜி.பி. முத்து ஜாக்கிரதையாக இருக்கணும்.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி கொடுத்த டிப்ஸ்

சென்னை: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 கடந்த வாரம் 9ம் தேதி முதல் தொடங்கியது.

கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் டிக் டாக் புகழ் ஜிபி முத்துவும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

ஜிபி முத்துவுக்கு ரசிகர்களிடமும் சக போட்டியாளர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அவரை பற்றி ஆரி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

 பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து

பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்துள்ள நிலையில், கடந்த வாரம் இதன் 6வது சீசன் தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு தாறுமாறாக டிஆர்பி கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த முறை மொத்தம் 20 பேர் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.அவர்களில் ஒருவராக டிக் டாக் பிரபலம் ஜிபி முத்துவும் கலந்துகொண்டுள்ளார். முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த ஜிபி முத்து, அப்போதே நடிகர் கமலை கலங்கடிக்க வைத்தார்.

நெல்லை தமிழ் ஜிபி முத்து

நெல்லை தமிழ் ஜிபி முத்து

நெல்லை தமிழில் "ஏலே யாம்லே இப்படி பண்றியோ... பேதிலபோவான்.... அட செத்தப் பயலுவளா... நாரப் பயலுவளா... எல என்னல இது... மெண்டல் பயலுவளா..." என ஜிபி முத்துவின் வீடியோக்கள் மக்களுக்கு பெரிய எண்டர்டெயின்மெண்ட்டாக அமைந்தது. இதே பாணியில் முதல் நாளில் பேசிய ஜிபி முத்துவுக்கு, வட்டார வழக்கு மொழியில் திட்டக் கூடாது என கமல் கடிவாளம் போட்டு அனுப்பினார். ஆனாலும், உள்ளே சென்ற ஜிபி முத்து, தனியாக இருக்க பயமாக இருப்பதாக சொன்னதோடு, ஆதாம் யார் எனக் கேட்டு கமலையே மிரள வைத்தார்.

ஆரியின் வீடியோ

ஆரியின் வீடியோ

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6ல் நேற்று கமல் வந்திருந்த போதும், மீண்டும் ஆதாம் குறித்து ஜிபி முத்துவிடம் கேள்வி எழுப்பினார். அப்போதும் "ஆதாம் யாரு... அவரு எங்க இருக்காரு" எனக் கேட்டு கமலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். "பாதாம் மட்டும் நல்லா தெரியும் ஆனா ஆதாம் தெரியலையா" என கமலின் கேள்விக்கு ஜிபி முத்து அப்படி பதில் கொடுத்து பங்கம் செய்தார். இந்நிலையில், ஜிபி முத்து குறித்து பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர் ஆரி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

சாமனியனுக்கு ஆதரவு

சாமனியனுக்கு ஆதரவு

பிக் பாஸ் வீட்டில் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்யும் ஜிபி முத்து, ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளார். அதேநேரம் தனலட்சுமியுடன் சண்டை போட்டு, அமுதவாணனை பேதிலபோவான் என திட்டி சர்ச்சையிலும் சிக்கினார். இந்நிலையில், வீடியோ வெளியிட்டுள்ள ஆரி, அதில் ஜிபி முத்துவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ஜிபி முத்து மாதிரியான சாமானிய மனிதன் பிக் பாஸில் கலந்துகொள்வது சந்தோஷமா இருக்கு. இது அவருக்கு நல்ல அடையாளமாக இருக்கும். கிராமத்தில் இருந்து இவ்ளோ தூரம் வந்துள்ள ஜிபி முத்து அடுத்த கட்டத்துக்கு செல்வார் என பாராட்டி பேசியுள்ளார். ஏற்கனவே ஜிபி முத்துவுக்கு வனிதாவும் ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X