Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அபிநய் கட்டிய மனக்கோட்டை தகர்ந்தது… இந்த வாரமும் நாமினேஷனில் வருவாரா ?
சென்னை : இசைவாணி கொடுத்த காயினை வைத்து இந்த வாரம் நாமினேஷனிலிருந்த தப்பித்துக்கொள்ளலாம் என்ற அபிநய் கட்டி இருந்த மனக்கோட்டை தகர்ந்தது.
பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் இசைவாணி வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை12 ஆக உள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் போட்டியாளர்களிடம் கலந்துரையாடுவார் அந்த வகையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து போட்டியாளர்களிடம் பேசினார்.
பிக்
பாஸ்
வீட்டில்
இருந்து
இந்த
வாரம்
அதிகாரப்பூர்வமாக
வெளியேறிய
இசைவாணி..
அபிநய்
தான்
பாவம்!

12 போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று அதன் 50வது நாளை எட்டி உள்ளது. இந்த வீட்டில் தற்போது ராஜூ, இமான் அண்ணாச்சி, சிபி, நிரூப், வருண், அபிநய், அபிஷேக் ராஜா, பிரியங்கா, தாமரைச்செல்வி, பாவனி,அக்ஷரா,ஐக்கி பெர்ரி என தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

இசைவாணி எலிமினேட்
நேற்று நடந்த எலிமினேஷனில் இசைவாணி குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார். அவர், எலிமினேஷன் விளும்பில் இருக்கும் போதே தன்னிடம் இருந்த நெருப்பு நாணயத்தை அபிநயிடம் கொடுத்து. நான் எப்படியும் போய்விடுவேன் இதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.

மனக்கோட்டை தகர்ந்தது
இசைவாணி கொடுத்த காயினை வைத்து ஒரு வாரம் கேப்டனாக மாறி, இந்த வார நாமினேஷனில் தன் பெயர் வராமல் தன்னை காப்பாற்றிக் கொள்ளலாம் என பெரிய மனக்கோட்டை கட்டி இருந்தார் அபிநய். ஆனால், அபிநய்க்கு ஆப்பு வைப்பது போல காயின் வைத்திருக்கும் போட்டியாளர் வெளியேறினால் அவர்களுடனே அந்த காயினும் வெளியே போய்விடும் என பிக் பாஸ் அறிவித்ததால் மிகவும் சோர்ந்து போனார் அபிநய்.

இதுதான் காரணமாக
சுருதி வெளியேறும் போது அவர் காற்று நாணயத்தை வைத்து இருந்தார். அப்போது அனைவருக்கும் அவர் போகும் போது அந்த காயினை யாரிடமாவது கொடுத்து இருக்கலாம் என்ற எண்ணம் தோற்றியது. சுருதி ஏன் காயினுடன் வெளியேனார் என்பது தற்போது தெளிவாகி உள்ளது.

விளும்பு வரை
ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் அபிநய் பெயர் கட்டாயமாக வருகிறது. அவரும் வீட்டில் பெரிதாக எந்த ஈடுபட்டுடனும் இருப்பது போல தெரியவில்லை. ஒவ்வொரு வாரமும் விளும்பு வரை சென்று வரும் அபி மட்டும் எப்படி காப்பாற்றப்படுகிறார் என்று நெட்டிசன்ஸ்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.