Don't Miss!
- Finance
ஒரு கிலோ மாம்பழம் 3 லட்சம்.. ஒடிசா விவசாயிக்கு ஜாக்பாட்..!
- News
பத்தாண்டுகால வனவாசம்..பாதை யாத்திரை.. காங்கிரஸ் குழுவில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா
- Automobiles
கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!
- Sports
இதை யாரும் யோசிக்கலயே..? மழை பெய்தால் 2 அணிக்குமே ஆபத்து தான்.. ஐபிஎல்லில் காத்திருக்கும் ட்விஸ்ட்
- Technology
ரொம்ப மெல்லிய பட்ஜெட் விலை டேப்லெட்: பார்க்க அப்படி இருக்கு- உயர் அம்சங்களோடு ஒப்போ பேட் ஏர் அறிமுகம்!
- Lifestyle
இரவு நேரத்தில் தெரியாம கூட மாம்பழத்தை சாப்பிடாதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க..
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக் பாஸ் அல்டிமேட்… இனி 24 மணி நேரமும்… என்டர்டெயின்மென்ட் கன்பார்ம்!
சென்னை : பிக் பாஸ் ஒடிடியில் பிக் பாஸ் அல்டிமேட் எனும் பெயரில் தமிழில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே எதிர்பார்த்ததை விட மிகவும் கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது. தீப்பொறி பறக்க ஆட்டம் பாட்டத்துடன் சும்மா மாஸாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக நேரலையில் ஒளிபரப்பாகும் ஆனால், பைனலின் ஷூட்டிங் சனிக்கிழமையே முடிந்து விட்டது.
என்ன
சொல்றீங்க..
ஒவ்வொரு
சீசனில்
இருந்தும்
4
பேரு
வராங்களா?
பிக்
பாஸ்
ஒடிடி
பராக்!
இதில், ராஜுவுக்கும், பிரியாவுக்கும் இடையேயான வித்தியாசம் அதிகமாக இருப்பதால் ராஜு தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட சோஷியல் மீடியாவில் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

இடம் பெறவில்லை
பிக் பாஸ் சீசனில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொள்வது வழக்கம் ஆனால், தற்போதைய நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து,அபிஷேக், அண்ணாச்சி,மதுமிதா இடம் பெறவில்லை. கொரோனாவின் தாக்கத்தால் அவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை என கமல்ஹாசன் கூறினார்.

கோலாகலம்
ஆட்டம், பாட்டம் உற்சாகம் என நிகழ்ச்சி கலை கட்டியது, வருண் அக்ஷராவின் கலக்கலான ஆட்டம் நிகழ்ச்சிக்கு சுவாரசியத்தை கூட்டியது. மேலும், விஜய் டிவியின் காமெடியன் பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் போல வேடம் போட்டு அவர்களை கலாய்த்தனர். தாமரைப்போல நாஞ்சில் விஜயன் பேசி அசத்தினார். பாலா நிரூப் போல தலையில் நீண்ட தலைமுடியுடன் அட்டகாசப்படுத்தி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கவைத்தனர்.

ஓடிடியில்
மேலும், பிக் பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு தகவலை கமல்ஹாசன் கூறினார். அதாவது பிக் பாஸ் ஒடிடியில் பிக் பாஸ் அல்டிமேட் எனும் பெயரில் தமிழில் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் பல்வேறு சீசன் போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியை கமலஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.

13 போட்டியாளர்கள்
13 போட்டியாளர்களுடன் 42 நாட்களுக்கு தொகுத்து வழங்கும் வகையில், வனிதா, ஜூலி மற்றும் அனிதா சம்பத் போன்றோர் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே இவர்களின் பெயர் அடிப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை மறுவடிவமைக்கும் பணியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில்
இந்த புதிய நிகழ்ச்சியில் பிக்பாஸில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர அனைத்து பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் விரைவில் ஒளிபரப்பாகும்.