எங்க கைய வச்சி இருக்கீங்க பாருங்க, கையை எடுங்க ரச்சிதா: சிணுங்கிய ஆண் போட்டியாளர், வைரலாகும் வீடியோ!
சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 34 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
இந்நிலையில், நேற்று நடந்த டாஸ்க்கில் ரச்சிதாவின் சீண்டலில் ராம் வெட்கத்தில் சிணுங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

5வது வாரத்தில் பிக் பாஸ்
விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த 34 நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் வெளியேறிவிட்டனர். இந்நிலையில், இந்த வாரம் எந்த போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். எவிக்சன் மட்டும் இல்லாமல் கமல் யாருக்கும் ரெட் கார்டு கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீண்டிய ரச்சிதா – சிணுங்கிய ராம்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபேக்டரி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் விக்ரமன், தனலட்சுமி தலைமையில் இரண்டு அணிகளாக போட்டியிட்டனர். இறுதியில் தனலட்சுமியின் கண்ணா லட்டு திண்ண ஆசையா டீம் வெற்றிப் பெற்றது. இந்நிலையில், இந்தப் போட்டியின் போது கன்வேயரில் வரும் பொருட்களை எடுக்க இரண்டு அணி வீரர்களும் கடுமையாக போட்டிப் போட்டனர். அதில் சில தருணங்களில் யாருமே எதிர்பார்க்காத அளவில் சண்டைகளும் வெடித்தன. முக்கியமாக தனலட்சுமி - மணிகண்டன் - அமுதவாணன் - விக்ரமன் - மகேஸ்வரி என சங்கிலித் தொடராக சண்டை நடந்தேறியது. இந்த களேபரத்தின் நடுவில் ராமை ரச்சிதா சீண்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

கைய அங்க வைக்காதீங்க
அதாவது கன்வேயர் பெல்ட்டில் வரும் பொருளை எடுக்க அமுதவாணனும், அவருக்குப் பின்னால் ராமும் நின்றிருந்தனர். இருவருமே எதிரணி வீரர்கள் என்ற நிலையில், அமுதவாணனுக்கு உதவி செய்வதற்காக அவரது டீமை சேர்ந்த ரச்சிதாவும் அங்கே நின்றிருந்தார். அப்போது ராம் முன்னால் சென்றுவிட முடியாதபடி, அவருக்கு முன்னால் கையை வைத்து மறித்தார் ரச்சிதா. ராமின் கால்களுக்கு நடுவே ரச்சிதா கை வைத்ததால், வெட்கத்தில் சிணுங்கிய ராம், "கைய எங்க வச்சிருக்கீங்க பாருங்க ரச்சித்தா... ப்ளீஸ் கைய எடுங்க... எனக்கு வெட்கமா இருக்கு" என கெஞ்சினார். ராம் அவ்வளவு கெஞ்சியும் ரச்சிதா கையை எடுக்க மறுத்து அவரை இன்னும் சீண்டினார். இதைப் பார்த்த விக்ரமனும் அசீமும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

என்னடா நடக்குது அங்க?
ரச்சிதாவின் சீண்டலில் ராம் சிணுங்கிய இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒருகட்டத்தில் ரச்சிதாவின் கை அங்க இருந்தா எனக்கென்ன என்றபடி ராமும் தைரியமாக தனது வெட்கத்தை மறைத்துக் கொண்டார். பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை ரசிகர்கள் சிலர் கண்டித்து வருகின்றனர். மேலும், சிலர் இதை ஜாலியாக ட்ரோல் செய்து வருகின்றனர். ரச்சிதா - ராம் வீடியோ போன்றே, நேற்று ஷிவினை ட்ரெஸ் மாற்றவிடாமல் அமுதவாணனும் ராபர்ட் மாஸ்டரும் விரட்டிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











