For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வெளியே வந்ததும் விக்ரமன், அசீம் பத்தி ட்வீட் போட்ட ஏடிகே... இதை உள்ளே இருக்கும் போதே சொல்லிருக்கலாமே

  |

  சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து கடைசி எவிக்சனாக ஏடிகே வெளியேறினார்.
  இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகரான ஏடிகே எவிக்சனானது பிக் பாஸ் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
  கதிர், மைனா இருவரையும் விட நன்றாக விளையாடிய ஏடிகே எவிக்சன் ஆனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கமெண்ட்ஸ் செய்து வந்தனர்.
  இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஏடிகே முதல் வேளையாக விக்ரமன், அசீம் குறித்து ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

  சவுண்டு சரோஜா பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி...வந்ததும் வராததுமா அசீமை அசிங்கப்படுத்திய பிரியங்கா!சவுண்டு சரோஜா பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி...வந்ததும் வராததுமா அசீமை அசிங்கப்படுத்திய பிரியங்கா!

   வெளியேறிய ஏடிகே

  வெளியேறிய ஏடிகே

  பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் இலங்கையில் இருந்து ஜனனி, ஏடிகே இருவரும் பங்கேற்றனர். செய்தி வாசிப்பாளரான ஜனனி ஏற்கனவே வெளியேறிவிட்ட நிலையில், ஏடிகே நேற்று எவிக்சன் செய்யப்பட்டார். முன்னணி ராப் பாடகரான ஏடிகே, ஏஆர் ரஹ்மான், யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் பல கடுமையான போட்டிகளில் வெற்றிப் பெற்று 98 நாட்கள் வரை விளையாடி வந்தார் ஏடிகே.

   பிக் பாஸ் வீட்டில் ஏடிகே

  பிக் பாஸ் வீட்டில் ஏடிகே

  பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் இல்லாத நேரங்களில் பாடல்களை பாடி ரசிகர்களிடம் ஸ்கோர் செய்தார் ஏடிகே. அதேபோல், மற்றவர்களைப் போல நடித்துக் காட்டுவதிலும் ஏடிகே மாஸ் காட்டினார். பல நேரங்களில் கமல்ஹாசனே ஏடிகேவை மற்றவர்களை போல நடித்துக்காட்ட சொல்லி கேட்டார். காமெடி, பாடல் என ஒருபக்கம் ஜாலியாக இருந்தாலும் ஏடிகேவின் முன்கோபமே அவரது மைனஸாக போனது. இதனால் அவர் மீது பல விமர்சனங்களு எழுந்தன. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சனான ஏடிகே அசீம், விக்ரமன் இருவர் குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

   அசீம் - ஏடிகே மோதல்

  அசீம் - ஏடிகே மோதல்

  ஆரம்பத்தில் அசீம் - ஏடிகே இருவரும் நெருங்கி பழகி வந்தனர். ஆனால், ராஜா - ராணி டாஸ்க்கில் இருவருக்கும் இடையே வெடித்த சண்டை, இந்த சீசன் முழுவதும் தொடர்ந்தது. ஒருகட்டத்தில் உன் பிரண்ட்ஷிப்பே வேண்டாம் என்ற அளவுக்கு ஏடிகே வெடித்துச் சிதறினார். மேலும், அடிக்கடி அசீம் பற்றி மற்றவர்களிடம் புறம் பேசிக்கொண்டும் இருந்தார். இறுதியாக வீட்டை விட்டு வெளியேறும் போது ரொம்பவே எமோஷனலான ஏடிகே அசீம்மை கட்டிப் பிடித்து அழுதார். இதனையடுத்து தற்போது அசீம் பற்றி ட்வீட் போட்டுள்ள ஏடிகே, அசீமுடன் அடிக்கடி சண்டை போட்டதும் வாக்குவாதம் செய்ததும் உண்மைதான். ஆனால், ராம் விக்ரமனுக்கு பிறகு அசீம் தான் சிறந்த நண்பன். நண்பர்களுக்குள் இது சாதாரணம் என பதிவிட்டுள்ளார்.

   உயிர் நண்பன் விக்ரமன்

  உயிர் நண்பன் விக்ரமன்

  விக்ரமனுடன் ஆரம்பத்தில் அதிகம் பேசாமல் இருந்த ஏடிகே, அதன் பின்னர் நெருங்கிப் பழகினார். ஏடிகே எப்போதெல்லாம் கஷ்டமாக உணர்ந்தாரோ, அப்போதெல்லாம் விக்ரமன் தான் அவருக்கு தோள் கொடுத்தார். ஆனால் இருவாரங்களுக்கு முன்னர் மைனாவிடம் பேசிக்கொண்டிருந்த ஏடிகே, விக்ரமனை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை எனக் கூறினார். இதுகுறித்து கமலும் அந்த வாரத்தின் இறுதியில் ஏடிகேவிடம் கேட்டார். ஆனால் அவர் மறந்துவிட்டதாக கூறி சமாளித்தார். இப்போது வெளியே போனதும் இந்த விவகாரம் குறித்து தெரிந்துகொண்ட ஏடிகே, விக்ரமன் பற்றியும் ட்வீட் செய்துள்ளார். அதில், விக்ரமன் எனது உண்மையான் நண்பன், நான் எப்போதும் நட்பை மதிப்பவன். வெளியே வரும் போது ஒருவிதமான கலவையான உணர்ச்சிகளுடன் வந்துவிட்டேன். விக்ரமனை ஒருபோதும் நான் தாழ்த்திப் பேசவில்லை என பதிவிட்டுள்ளார். ஏடிகேவின் இந்த ட்விட்டர் பதிவுகளை பார்த்த ரசிகர்கள், இதனை உள்ளே இருக்கும் போதே சொல்லிருக்கலாமே என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  English summary
  Bigg Boss Season 6 is hosted by actor Kamal. Bigg Boss season 6 comes to an end this week. In this case, ADK, who was in the Bigg Boss house for 98 days, was finally evicted. In this case, ADK, who left the Bigg Boss house, tweeted about Vikraman. in it, Vikraman is a true friend…. I will always cherish his friendship. I walked out with mixed emotions and never ignored him purposely.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X