Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
பல லட்சங்களுடன் வெளியேறிய அமுதா, மைனா... பிக் பாஸ் கொடுத்த லைஃப் டைம் செட்டில்மெண்ட்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளையுடன் முடிவுக்கு வரவிருப்பதால் பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வருகின்றன.
விக்ரமன், ஷிவின், அசீம், கதிர், அமுதவாணன், மைனா ஆகிய 6 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்த நிலையில் கதிர், அமுதா, மைனா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து
டைட்டில்
வின்னர்
ரேஸில்
தற்போது
ஷிவின்,
விக்ரமன்,
அசீம்
ஆகிய
மூன்று
பேர்
மட்டுமே
இருப்பது
ரசிகர்களிடம்
அதிக
எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியது.
கதிர்
3
லட்சம்
ரூபாய்
பண
மூட்டையுடனும்,
அமுதவாணன்
ரூ
11.75
லட்சம்
பணப்
பெட்டியுடனும்
பிக்
பாஸ்
வீட்டில்
இருந்து
வெளியேறினர்.
அதேபோல்
மைனா
எதிர்பாராதவிதமாக
மிட்
வீக்
எவிக்சனில்
வெளியேற்றப்பட்டார்.
பழைய
நியூஸ்
பிக்
பாஸ்...
இதுல
பிரோமோ
வேற...
பிக்பாசை
கிண்டலடிக்கும்
ஃபேன்ஸ்!

முடிவை நோக்கி பிக் பாஸ் சீசன் 6
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்துள்ளது. தற்போது அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த சீசனில் விக்ரமன், அசீம், ஷிவின், மைனா, அமுதவாணன், கதிர் ஆகிய 6 பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்தனர். ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட்டாக கதிர் ரூ.3 லட்சம் பண மூட்டையுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். அவரைத் தொடர்ந்து அமுதவாணனும் 11.75 லட்சம் ரூபாய் பணப் பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

மைனா நந்தினி எவிக்சன்
கதிர், அமுதவாணன் வெளியேறியதை தொடர்ந்து விக்ரமன், ஷிவின், அசீம், மைனா ஆகிய நான்கு பேர் மட்டுமே பிக் பாஸ் பைனல் லிஸ்ட்டில் இருந்தனர். இவர்களில் இருவர் மட்டுமே இறுதியாக பைனல் ஸ்டேஜில் ஏறமுடியும் என்பதை பிக் பாஸ் தெளிவாக கூறிவிட்டார். அதனால் பைனலுக்கு முன்பே எந்த இருவர் எவிக்சனாவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தான் திடீரென பிக் பஸ் மிட்வீக் எவிக்சன் நடைபெற்றது. இதில் நான்கு போட்டியாளர்களையும் லிஃப்ட் ட்ராலியில் ஏற்றி இறக்கி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய பிக் பாஸ் இறுதியாக மைனாவை எவிக்சன் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

மைனாவின் மொத்த சம்பளம்
பிக் பாஸ் வீட்டில் இருந்து மைனா எவிக்சன் ஆனது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சீசன் தொடங்கிய இரண்டாவது வாரத்தில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற மைனா, தனது காமெடியால் ஹவுஸ்மேட்ஸ்களையும் ரசிகர்களையும் என்டர்டெயின் செய்தார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மைனாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் எனவும், 96 நாட்களுக்கு மொத்தம் 19 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

அமுதாவுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்
அதேபோல் விஜய் டிவி பிரபலம் அமுதவாணனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் பற்றியும் தகவல் கிடைத்துள்ளது. பிக் பாஸ் டாஸ்க்கில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற அமுதவாணன் தான் கண்டிப்பாக டைட்டில் வின் பண்ண வாய்ப்பில்லை என தெரிந்து பணப் பெட்டியுடன் வெளியேறினார். அதில் அப்போது 11.75 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அதனுடன் சேர்த்து அவர் பிக் பாஸ் வீட்டில் 102 நாட்கள் இருந்ததற்கு 25 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆக மொத்தம் 37.50 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் அமுதா. இது சூப்பரான லைஃப் டைம் செட்டில்மெண்ட் என ரசிகர்கள் அமுதாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.