பிக் பாஸ்க்கு குரல் கொடுக்கும் அந்த பிரபலம்... அடேங்கப்பா சம்பளம் மட்டும் இவ்ளோவா?
சென்னை: விஜய் டிவி கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 கடந்த வாரம் தொடங்கியது.
இதில், 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள், திருநங்கை ஒருவர் என மொத்தம் 20 பேர் பங்கேற்றுள்ளனர்.
பிக் பாஸ்க்கு பின்னணிக் குரல் கொடுக்கும் பிரபலம் குறித்தும், அவரது சம்பளம் பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.

6வது சீசனில் பிக் பாஸ்
விஜய் டிவி தயாரிப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சிக்கு தாறுமாறாக டிஆர்பி கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியின் டிஆர்பி கண்டெய்னர் என்றால் அது பிக் பாஸாக தான் இருக்க முடியும். ஒரு வீட்டுக்குள் சக போட்டியாளர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதே இதன் உளவியல் விளையாட்டு. வேடிக்கையாவும் விளையாட்டாகவும் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒருசேர காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி தொடங்கிய 6வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் குரல் யாருடையது?
இந்நிகழ்ச்சிக்கும் போட்டியாளர்களுக்கும் எப்படி பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றதோ, அதேபோன்று பின்னணியில் ஒலிக்கும் பிக் பாஸ் குரலுக்கும் அதிக வரவேற்பு காணப்படுகிறது. கொஞ்சம் தடித்த குரலுடன் போட்டியாளர்களுக்கு ஆர்டர் போடும் அந்த பிக் பாஸ் குரல் யாருடையது என்பதை அறிய பலருக்கும் ஆர்வம் உள்ளது. இந்நிலையில், பிக் பாஸில் ஆரம்பத்திலிருந்து குரல் கொடுத்து வருபவர் சதீஷ் சாரதி சச்சிதானந்தம் என தெரியவந்துள்ளது. இவர்தான் பிக் பாஸ் பின்னணி குரலுக்கு சொந்தக்காரர் என்றும், சில படங்களில் நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

சம்பளம் இவ்ளோவா?
மேலும், இவருக்கு கடந்த ஐந்து சீசன்களுக்கும் மாதம் 5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆறாவது சீசனில் ஒரு லட்சம் கூடுதலாக மொத்தம் ஆறு லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் பின்னணி குரலுக்கு இவ்வளவு சம்பளமா என ரசிகர்கள் வியப்பில் உள்ளனர். அதேபோல், போட்டியாளர்களுக்கு லட்சங்களில் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர்களின் வேலை, சம்பளம் போன்றவை கணக்கில் கொண்டு, பிக் பாசில் சம்பளம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

போட்டிகள் ஆரம்பம்
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் முதல் வாரத்தில் இருந்தே அதிரடியாக களமிறங்கியுள்ளனர். அசீம், தனலட்சுமி, ஆயிஷா, ரச்சிதா ஆகியோர் ஒரு வெரைட்டியாகவும், ஜனனி, கதிரவன், அமுதவாணன் ஆகியோர் பொறுமையாகவும் போட்டியாளர்களை டீல் செய்து வருகின்றனர். அதேநேரம் வட்டார வழக்கு பேச்சு, வெள்ளந்தியான அணுகுமுறை, வீராப்பு, விட்டுக் கொடுத்தல், மனிதாபிமானம் போன்ற செயல்களால் ஜிபி முத்துவே ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் பிக் பாஸ் இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











