பிக்பாஸ் ஜனனி ஆர்மிக்கு ஆள் சேர்க்கும் நெட்டிசன்கள்… என்னடா இது பெட்டிப் படுக்கையோட கிளம்பிட்டீங்க

சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்று முதல் தொடங்கியது.

மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துவிட்ட நிலையில், போட்டி இன்று காலை முதல் களைகட்ட தொடங்கிவிட்டது.

இதில், செய்தி வாசிப்பாளர் ஜனனிக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

நேற்று தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். பிக் பாஸில் இதற்கு முன்னர் நடந்த சீசனில் இலங்கையச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா போட்டியாளராக கலந்துகொண்டார். அதேபோல் இந்த பிக் பாஸ் 6வது சீசனில் இலங்கையைச் சேர்ந்த ஜனனி போட்டியாளராக பங்கேற்றுள்ளார். ஐபிசி சேனலில் தொகுப்பாளராக உள்ள ஜனனிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அவரது இலங்கை தமிழுக்கு பலரும் ஆர்ட்டின்ஸ் விட்டு வருகின்றனர்.

கன்ஃபெக்‌ஷன் ரூம் சென்ற ஜனனி

கன்ஃபெக்‌ஷன் ரூம் சென்ற ஜனனி

பிக் பாஸ் வீட்டுக்குள் 20 போட்டியாளர்களும் சென்றுவிட்ட நிலையில், முதல் ஆளாக கன்ஃபெக்‌ஷன் ரூம் சென்றவர் ஜனனி தான். நேற்றிரவே கன்ஃபெக்‌ஷன் ரூம் போன ஜனனி, பிக் பாஸின் உத்தரவை போட்டியாளர்களிடம் தனது கொஞ்சும் தமிழில் வரிசைப்படுத்தி கூறினார். இந்நிலையில், ஹோம்லி லுக்கில் ரொம்பவே க்யூட்டாக இருக்கும் ஜனனிக்கு ரசிகர்களிடம் நொடிக்கு நொடி ஆதரவு கூடி வருகிறது. இதெல்லாம் என்ன பிரமாதம் என நெட்டிசன்கள் சிலர் ஜனனி ஆர்மி பேஜ்ஜை தொடங்கி ஆள் சேர்க்க தொடங்கி விட்டனர்.

வருங்கால த்ரிஷா

வருங்கால த்ரிஷா

முன்னதாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்னர், எனக்கு திரிஷாவாக மாற வேண்டும் என்பதே ஆசை என ஜனனி கூறியிருந்தார். இதனை கொண்டாடி வரும் நெட்டிசன்கள், 'பொன்னியின் செல்வன்' படத்தில் திரிஷாவை பார்த்து 'உயிர் உங்களுடையது தேவி" என்ற கார்த்தி பேசும் வசனத்தை ஜனனிக்காக ரீ-கிரியேட் செய்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல், இதுதான் ஜனனியின் அபிஸியல் ஃபேன் பேஜ். ஜனனி ஆர்மிக்கு உங்கள் ஆதரவு தேவை என ட்விட்டர் பேஜ்ஜை ஓப்பன் செய்துவிட்டார்கள்.

குவியும் ஆதரவு

குவியும் ஆதரவு

பிக் பாஸ் என்றாலே ஆர்மிகளுக்கு பஞ்சம் இருக்காது. ஓவியா ஆர்மி, லாஸ்லியா ஆர்மி என தொடங்கிய இந்த வரிசை, இந்த சீசனில் ஜனனி ஆர்மி என வந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 6 தொடங்கிய ஒரேநாளில் ஜனனிக்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள ஆதரவு, போட்டியை களைக்கட்ட வைத்துள்ளது. இன்னொரு பக்கம் ஜிபி முத்துவின் அட்ராசிட்டிகள் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு செம்ம எண்டர்டெயின்மென்ட்டாக அமைந்துள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றது முதலே மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சரியான கண்டெண்ட்டுகள் கிடைத்து வருகின்றன. இன்னும் போகப் போக என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X