ராபர்ட் மாஸ்டர், குயின்ஷியை ஜெயிலுக்கு அனுப்பிய ஹவுஸ்மேட்ஸ்… அப்ப இந்த வாரம் எவிக்சன் இவரு தானா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடர்ந்து 7 வாரங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த வாரத்திற்கான நீதிமன்றம் டாஸ்க் முடிந்துவிட்டதை அடுத்து, இதில் சரியாக விளையாடாத போட்டியாளர்களை ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்துள்ளனர்.

அதனடிப்படையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறப் போகிறார் என்பதற்கான க்ளூ கிடைத்துள்ளது.

பிக் பாஸ் இந்த வாரம் டாஸ்க்

பிக் பாஸ் இந்த வாரம் டாஸ்க்

கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கிட்டத்தட்ட 50வது நாளை நெருங்கிவிட்டது. ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற கோர்ட் டாஸ்க்கில் யார் சிறப்பாக விளையாடினார்கள், யார் வொர்ஸ்ட் பெர்பாமன்ஸ் என்ற கேள்வி போட்டியாளர்களிடம் கேட்கப்படுகிறது.

சிறை சென்ற ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி

சிறை சென்ற ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி

இந்த வாரத்துக்கான கோர்ட் டாஸ்க்கில், அசீம், விக்ரமன், ஷிவின், ஆயிஷா, ஜனனி, ஏடிகே, கதிர் ஆகியோரின் ஆட்டம் கவனிக்கும் படி இருந்தன. ஆனால், ராபர்ட் மாஸ்டர் அதிகமாக எதிலும் பங்கேற்கவில்லை. அதன்படி ராபர்ட் மாஸ்டரும், சரியாக விளையாடாத குயின்ஸியும் வொர்ஸ்ட் பெர்பாமன்ஸ் என்று சக போட்டியாளர்களால் தேர்வாகியுள்ளனர். அதனால், அவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க பிக் பாஸ் உத்தரவிட்டுள்ளார். முதல் இரண்டு ப்ரோமோக்களும் நீதிமன்றம் டாஸ்க் பின்னணியில் வெளியானது, கடைசியாக வெளியான 3வது ப்ரோமோ, இந்த வாரம் யார் எவிக்சன் ஆவார் என்ற லீடையும் கொடுத்துள்ளது.

ராபர்ட் மாஸ்டர் எவிக்சன்?

ராபர்ட் மாஸ்டர் எவிக்சன்?

இதுவரை வெளியான வாக்குகள் அடிப்படையிலும், இந்த வரம் டாஸ்க்கை வைத்து பார்க்கும் போதும் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை விட கொஞ்சம் அதிகமான வாக்குகளுடன் ராம் எவிக்சனில் இருந்து தப்பிவிட்டார் என்றே தெரிகிறது. இந்நிலையில், தற்போது கமல்ஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமலால் வரமுடியவில்லை எனில், அவருக்குப் பதிலாக யார் ஹோஸ்ட் செய்வார் என எதிர்பர்ப்பு ஏற்பட்டுள்ளது.

கமல் கண்டிப்பாக வருவார்?

கமல் கண்டிப்பாக வருவார்?

இந்த வரிசையில் ரம்யா கிருஷ்ணன் முதலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கமலுக்குப் பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நடிகர் சிம்புவும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏற்கனவே தொகுத்து வழங்கியுள்ளதால், அவர் வரவும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், இந்த வாரமும் கமல்ஹாசன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வங்குவார் என சொல்லப்படுகிறது. சிகிச்சையை முடித்துவிட்டு எப்படியும் பிக் பாஸ் வீட்டுக்கு அவர் வருவார் என நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X