Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
24/7 கேமரா போல் என்னை பார்த்துகிட்டே இருந்தார் ராபர்ட் மாஸ்டர்..ரச்சிதா உருக்கம்!
சென்னை : பிக் பாஸ் ஷோவிலிருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறி உள்ள நிலையில் ரச்சித்தா அவரை நினைத்து உருகி உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர் ரச்சித்தா மகாலட்சுமி.
இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து பல சீரியல்களில் நடித்து அனைவருக்கு பிடித்த நடிகை என பெயர் எடுத்தார் ரச்சிதா.
அவதார்
கான்செப்ட்டில்
இந்த
வாரம்
பிக்
பாஸ்
டாஸ்க்…
ஏலியன்ஸ்களாக
மாறிய
ஹவுஸ்மேட்ஸ்!

ரச்சிதா மகாலட்சுமி
டஸ்கி கலர்...ஆர்ப்பாட்டம் இல்லாத சாந்தமான முகம்... உதட்டிற்கு மேலே இருக்கும் அழகான மச்சம் என்று, இன்னும் வர்ணித்துக்கொண்டே போகலாம். அனைவரின் பேவரைட் நடிகையான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நுழைந்ததும், ரசிகர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்கள். நாமினேஷனில் ரச்சித்தா வந்தாலும் ஓட்டுபோட்டு ரசிகர்கள் அவரை காப்பாற்றி வருகிறார்கள்.

அலப்பறை தாங்கலப்பா
அனைவருக்கும் பிடித்த ரச்சித்தாவை ராபர்ட் மாஸ்டருக்கு பிடித்து போக , காதல் கீதம் பாடி அவரின் பின்னாலே சுற்றி வந்தார். ராபர்ட் மாஸ்டர் எங்கே இருந்தாலும் ரச்சித்தா மீது ஒரு கண் வைத்து க்யூட்டா சைட் அடித்துக்கொண்டே இருப்பார். ராஜவம்சம் டாஸ்கில் இருவரும் ராஜா ராணியாக இருந்த போது, அந்த டாஸ்க்கை மகிழ்ச்சியோடு செய்தார் ராபர்ட். அந்த நேரத்தில் ராபர்ட் மாஸ்டரின் அலப்பறை தாங்க முடியலடா சாமி என சொல்ல வைத்தது.

மூக்குத்தி ...மூக்குத்தி
ராபர்ட் மாஸ்டர் நடந்து கொள்ளும் விதம், ரச்சித்தாவுக்கு சங்கடத்தை கொடுத்தாலும், ஆத்திரத்தில் வார்த்தையை கொட்டிவிடாமல், சிரித்த முகத்துடன் நார்மலா இருங்க... எல்லார் கிட்டையும் எப்படி பேசுறீங்களோ அப்படி என்கிட்டையும் பேசுங்க என மாஸ்டருக்கு பல முறை அட்வைஸ் கொடுத்தும் அவர் அதை பொருட்படுத்தாமல் மூக்குத்தி மூக்குத்தி என ரச்சிதாவிற்கு தொடர்ந்து நூல்விட்டுக்கொண்டே இருந்தார்.

ஏமாந்த ரசிகர்கள்
கடந்த வாரம் நடந்த ஒப்பன் நாமினேஷனில் சிக்கிய ராபர்ட் மாஸ்டர் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். அவர் வெளியில் செல்லும் போதுக்கூட ரச்சித்தா ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை. அனைவரையும் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து விடைபெற்ற ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தாவிடம் கையை கொடுத்து கிளம்புகிறேன் என்றார். ரச்சித்தா கண்ணீர் விட்டு கதறி அழுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

உருகும் ரச்சித்தா
இதையடுத்து, ராபர்ட் மாஸ்டர் குறித்து ரச்சித்தா மற்றும் கதிர் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் கதிர், ராபர்ட் மாஸ்டர் இருந்தது ஹேப்பியா இருந்தது என்றார். இதற்கு ரச்சித்தா ஆமாம், இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் இப்படி நபர் க்ராஸானது ஒரு நல்ல விஷயமா நினைக்கிறேன். இந்த வீட்டிலிருந்து தானே அவர் வெளியில் போய் இருக்காங்க, தாட்ஸ் அப்படியே இருக்கு என்றார்.

24/7 மணி நேரமும் பார்த்தார்
இந்த வீட்டில் போன் மற்றும் டிவி இல்லாததால் நாம் அதிக நேரம் அடுத்தவர்களுடன் பேசுகிறோம் இதனால் தான் ராபர்ட் மாஸ்டர் வெளியில் போனது கஷ்டமா இருக்கு வேற என்ன பண்றது இது தான் கேம் என்றார் கதிர். இதையடுத்து, பேசிய ரச்சிதா எனக்கு எப்படி இருக்குனா? 24/7 கேமரா என்னை பார்த்துகிட்டு இருந்துதோ இல்லையோ, ராபர்ட் மாஸ்டர் 24 மணி நேரமும் என்னை கவனித்துக்கொண்டே இருந்தார். அது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என்று ராபர்ட் மாஸ்டரை நினைத்து உருகி பேசியுள்ளார்.

இல்லாத போதுதான் அருமை தெரியும்
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், மாஸ்டர் வீட்டில் இருக்கும்போது அவரை நீங்க மதிக்கவே இல்லை இப்போது அவரை நினைத்து உருகுகிறீர்கள். இதுதான் ஒருவர் இருக்கும் போது அவரின் அருமை தெரியாது இல்லாத போதுதான் தெரியும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
-
ஆளுக்கு ஒரு ரெண்டு நாள்.. நட்பு ரீதியாக வந்து போறாங்களாம்.. உச்ச நடிகர் படத்தை எதிர்பார்க்கலாமா?
-
முழு பைத்தியமாவே மாறிட்டாங்க போல.. மேலயும் ஜீன்ஸ் பேன்ட்டை மாட்டிட்டு உலா வந்த பிக் பாஸ் நடிகை!
-
தளபதி 67 பட ஷூட்டிங்கிற்கு தனி ஹெலிகாப்டரில் சென்றாரா கமல்? டிரெண்டாகும் புகைப்படம்.. உண்மை என்ன?