For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உம்மனாஞ்சாமி… ம்ஹூம் விக்ரமனுக்கு சாமர்த்தியம் பத்தாது... கமல் அட்வைஸ்!

  |

  சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் 9ம் தேதியில் இருந்து தொடங்கியது.

  சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார் கமல்ஹாசன்.

  அப்போது போட்டியாளர்களிடம் யாருக்கு அதிகம் வரவேற்பு இல்லை என ஒரு சிக்கலான போட்டியை நடத்தினார்.

  பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்துவை விட அமுதவாணனுக்கு ப்ளஸ் டேக்ஸ் அதிகம் கிடைக்க காரணம் என்ன?பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்துவை விட அமுதவாணனுக்கு ப்ளஸ் டேக்ஸ் அதிகம் கிடைக்க காரணம் என்ன?

  பிக் பாஸ் வீட்டில் கமல்

  பிக் பாஸ் வீட்டில் கமல்

  பிக் பாஸ் சீசன் 6 கடந்த வாரம் 9ம் தேதி முதல் தொடங்கியது. நேற்றுடன் முதல் வாரத்தை நிறைவுசெய்த பிக் பாஸ் சீசன் 6ல் இதுவரை வெரைட்டியாக பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் கமல்ஹாசன் என்ட்ரி கொடுத்து போட்டியாளர்களிடம் கலந்துரையாடினார். முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த சம்பவங்களையும், அதன் பின்னணி குறித்தும் போட்டியாளர்களிடம் கேட்டார். மேலும், போட்டியாளர்களின் நிறை, குறைகளை சக போட்டியாளர்கள் மூலமாகவே வெளிப்படையாக பேசவும் வைத்தார்.

  க்ரீன் டேக்ஸ், ரெட் டேக்ஸ்

  க்ரீன் டேக்ஸ், ரெட் டேக்ஸ்

  நேற்றைய நாளில் முதலில் ஜிபி முத்துவுக்கு வந்த கடிதங்களை அசீம் மூலம் படித்துக் காட்ட சொன்ன கமல், அதன் பின்னர் போட்டியாளர்களை வேறு வடிவத்துக்கு டைவர்ட் செய்தார். முதலில், "இவரைப் போல இன்னொருவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தால் நல்லா இருக்கும்" என யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என போட்டியாளர்களிடம் கேள்வியெழுப்பினார். அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் க்ரீன் டேக்ஸ் கொடுத்து அமுதவாணனை தேர்ந்தெடுத்து, நெகிழ்ச்சியில் அவரை கண்கலங்கவும் வைத்தனர். அடுத்ததாக, இந்த வீட்டுக்குள் யார் வேண்டாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு ரெட் கலரில் மைனஸ் டேக்ஸ் வைக்கப்பட்டிருந்தது.

  விக்ரமனுக்கு எதிர்ப்பு

  விக்ரமனுக்கு எதிர்ப்பு

  'இந்த ஆளு பிக் பாஸ் வீட்டுக்கு வேணவே வேணாம்' என்று ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என கமல் டாஸ்க் கொடுத்தார். இதற்கு அதிகமானோர் சொல்லிவைத்தார் போல தங்களின் அபிப்ராயங்களை வரிசையாக அடுக்கினர். இறுதியாக இந்த நெகட்டிவ் விளையாட்டில் பெரும்பான்மையோர் விக்ரமனை சுட்டிக் காட்டினர். இதனால், அவரே என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென முழித்தார். இதுகுறித்து விக்ரமனிடம் கமலும் விளக்கம் கேட்டார். இறுக்கத்துடனும் சங்கடத்துடனும் அமர்ந்திருந்த விக்ரமனிடம் "இந்தச் செய்தியோட அடிநாதத்தை நீங்க புரிஞ்சுக்கணும். இது வெளியுலகத் தீர்ப்பு அல்ல. உள்ள இருக்கறவங்கதான் தந்திருக்காங்க. இந்த சிவப்புக் கலரை நீங்க ஈஸியா மாத்திட முடியும்" எனக் கூறி அவரை உற்சாகப்படுத்தினார்.

  அரசியல் வாதம்

  அரசியல் வாதம்

  உடனே இதற்கு கமலிடம் பதிலளித்த விக்ரமன், "நான் இங்க போலியா இருக்க விரும்பலை, என்னால மத்தவங்க கிட்ட செயற்கையா பேச முடியாது. நான் சார்ந்திருக்கும் துறை இறுக்கமானது. கேளிக்கைக்கான வெளி அங்கு கிடையாது" என விளக்கம் கொடுத்தார். விக்ரமன் பேசிக் கொண்டிருக்கும் போதே "அரசியலில் இல்லாத கேளிக்கையா?" என்று செம்மையாக டைமிங் அடித்து கலகலக்க வைத்தார் கமல். விக்ரமன் எல்லாவற்றையும் டிவி விவாதத்தை அணுகுவது போன்றே பார்ப்பது தான் பிரச்சினையாக இருக்கிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். பிக் பாஸ் வீடு விவாதத்திற்கான களம் இல்லை என்பதை புரிந்துகொள்ளும் வரை, விக்ரமனுக்கு இது சவாலாக தான் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  English summary
  Bigg Boss Season 6 has been airing on Vijay TV for the last one week. In this, for the last two days, Kamal gave an entry and discussed it with the contestants. Then Kamal advised Vikraman who was much criticized by the contestants.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X