ஆரம்பிக்கலாமா... பிக்பாஸ் சீசன் 6 அப்டேட் வந்தாச்சு...உற்சாகத்தில் ரசிகர்கள்
சென்னை : விஜய் டிவியில் மிக பிரபலமாக ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. விஜய் டிவி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியும், அதிகமானவர்களால் பார்க்கப்படும் நிகழ்ச்சியும் இது தான்.
2017 ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 100 நாட்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது கடந்த ஆண்டு நிறைவடைந்தது. கடந்த ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.
சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், டிவி தொகுப்பாளர்கள், மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் மட்டும் போட்டியாளர்களாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், பிறகு நாட்டுப்புற கலைஞர்கள், யூட்யூப் பிரபலங்கள் போன்றோர்களும் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டனர்.

தாமதமாக துவங்கப்பட்ட பிக்பாஸ் 5
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜுன் மாத இறுதியில் துவங்கி அக்டோபர் மாதத்தில் ஃபினாலே நிகழ்ச்சி நடத்தப்படும். ஆனால் கொரோனா காரணமாக பிக்பாஸ் சீசன் 5 தாமதமாக 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. இதன் ஃபினாலே நிகழ்ச்சி இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.

ஓடிடியில் பிக்பாஸ் அல்டிமேட்
இதைத் தொடர்ந்து ஓடிடி வெர்சனாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கப்பட்டு, 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் முந்தைய 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, போட்டியாளர்களாக அனுப்பப்பட்டனர்.

கமல் தான் தொகுத்து வழங்குவார்
பிக்பாஸ் 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். ஆனால் அதிலிருந்து பாதியிலேயே அவர் விலகினார். அவருக்கு பதில் சிம்பு, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கமல், பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து பாதியில் விலகியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், விக்ரம் பட ஷுட்டிங் காரணமாக விலகுவதாகவும், விரைவில் பிக்பாஸ் சீசன் 6 ல் அனைவரையும் சந்திப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார் கமல்.

அப்போ செம ட்ரீட் காத்திருக்கு
தற்போது விக்ரம் படமும் ரிலீசாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 350 கோடிக்கும் மேல் வசூல் செய்து, கோலிவுட்டில் புதிய சாதனையை விக்ரம் நிகழ்த்தி உள்ளது. அடுத்து என்ன சாதனை படைக்க போகிறது என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார் கமல். இதனால் பிக்பாஸ் சீசன் 6 ல் விக்ரம் படம் பற்றிய அரிய தகவல்கள், அடுத்த படங்களின் அப்டேட்களை கமல் அவ்வப்போது வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படு

பிக்பாஸ் சீசன் 6 எப்போ
இந்த சமயத்தில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பற்றிய புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. லேட்டஸ்ட் தகவலின் படி, வரும் அக்டோபர் மாதம் 2 ம் தேதி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது. இதையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க போகிறார்.

யாரெல்லாம் கலந்துக்க போறாங்க
பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் தேர்வு விரைவில் துவங்கப்பட உள்ளதாம். இதனால் இந்த முறை யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











