17வயதில் சர்ஜரி.. ஏமாற்றி கழட்டிவிட்ட காதலன்.. பிக் பாஸ் திருநங்கை அப்சராவின் கண்ணீர் கதை!
சென்னை: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது. இதில், 10 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை போட்டியாளர் என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் திருநங்கை அப்சரா கடந்து வந்த மோசமான வாழ்க்கை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
கேரளாவைச் சேர்ந்த அப்சராவிற்கு பெற்றோர் வைத்த பெயர் கிச்சு சிஜே, இவர், 2021ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் ரன்னரப்பாக வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், மிஸ் சென்னை பட்டத்தையும் பெற்றிருக்கிறார். பள்ளியில் இவர் படித்துக்கொண்டு இருந்த போதே நடையிலும் பாவனையிலும் சில மாற்றங்கள் தெரிந்துள்ளன. இதை கவனித்த பெற்றோர் பெண்கள் போல பேசக்கூடாது, நடக்கக்கூடாது என கண்டித்துள்ளனர். தன்னுடைய உடலில் நடக்கும் மாற்றம் பற்றி இவருக்கு சரியாக தெரியாததால், அது பற்றி கவலை இல்லாமல் பள்ளியில் அனைவருடனும் பழகி இருக்கிறார். இதனால், பள்ளியில் பலர் இவரை ஒதுக்கி, கேலி செய்து இருக்கிறார்கள்.

பிக் பாஸ் அப்சரா: தன்னுடைய 16 வது வயதில் தான், அப்ராவிற்கு தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை முழுமையாக உணர்ந்துள்ளார். அந்த நேரத்தில் பெற்றோர் மிகவும் கடுமையாக நடந்து கொள்ள, அப்ராவின் அண்ணன், இந்த நேரத்தில் நாம் ஆதரவாக இருக்க வேண்டும், அவன் இதை வேண்டும் என்ற செய்யவில்லை என பல விஷயத்தை எடுத்து சொல்லி, அப்சராவுக்கு ஆதரவாக இருந்துள்ளார். கிச்சு எப்படி இருந்தாலும் அவர் நம்மளுடைய கிச்சுதான் அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும், இல்லை என்றால் அவனின் வாழ்க்கை வீணாகிவிடும் என சொல்லி இருக்கிறார். இதனால், அப்ராவின் தாயும் இவருக்கு ஆதரவாக மாறி உள்ளார்.
படிப்பில் கெட்டி: அதன்பின் கல்லூரியில் சேர்ந்த பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து அதில் தேர்ச்சி பெற்றார். பின் , எம்.எஸ்.சியில் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது இடத்தை படித்து தேர்ச்சி பெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், கேரளா நேச்சுரல் ட்ரைனிங் அகாடமியில் முறையாக சென்று மேக்கப் பயிற்சியும் செய்துள்ளார். இப்படி, படிப்பிலும் மற்ற திறமைகளிலும் புலியாகவே இருந்திருக்கிறார் அப்சரா. இவர் கல்லூரியில் சேரும் வரை, திருநங்கைகளுக்கான சர்ஜரி எப்படி செய்பவர்கள் என்பதில் பலவிதமான தயக்கமும் பயமும் இருந்துள்ளது. அதன் பிறகு சர்ஜரி பற்றி பல விஷயத்தை தெரிந்து கொண்ட அப்சரா, தன்னுடைய 17வது வயதில் அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சை செய்து முற்றிலுமாக பெண்ணாக மாறிய பிறகு தன்னுடைய பெயரை அப்சராவாக மாற்றினார். பெண்ணாக மாறி பிறகு அப்சரா என்ற பெயரை வைக்க வேண்டும் என்பது இவருடைய ஆசையாம், இந்த ஆசைக்கு காரணம் என்னவென்றால் நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தில் அவருடைய பெயர் அப்சரா. அந்த படத்தை பார்த்த பிறகு தான், அந்த பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என இவர் ஆசைப்பட்டுள்ளார்.
காதல் தோல்வி: அப்சரா 11 வது படித்துக் கொண்டு இருந்த போதே, தன்னுடன் படித்த தோழன் ஒருவர் மீது இவருக்கு காதல் வந்துள்ளது. அப்சரா பற்றி அனைத்தும் தெரிந்தும், அப்சராவிற்கு துணையாக இருந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நேரத்தில் தான் அப்சரா, பெண்ணாக மாற சர்ஜரி எல்லாம் செய்து பெண்ணாக மாறி இருக்கிறார். பெண்ணாக மாறியதும், நீ இவ்வளவு அழகாக இருந்தால், அனைவரும் உன்னை பார்ப்பார்கள், வெளியில் யாரிடமும் பேசக்கூடாது, பழகக்கூடாது என பலவிதமான மெண்டல் டார்ச்சர்களை கொடுத்து இருக்கிறார் அந்த காதலன். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த டார்ச்சரால் நொந்துப்போன அப்ரசா, அந்த உறவில் இருந்து பிரிந்துள்ளார். இதுபற்றி அப்சரா பிக் பாஸ் வீட்டில் ரம்யா ஜோ மற்றும் வனிதாவிடம் வெளிப்படையாக கூறியிருந்தார். வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை கடந்து தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இருக்கும் அப்சரா வெற்றிப்பெற வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக உள்ளது.


Click it and Unblock the Notifications











