Don't Miss!
- News
கொதிப்பை ஏற்படுத்திய ‘தமிழ் நாயுடு’.. ஓயாத ‘தமிழ்நாடு’ சர்ச்சை! ஸ்பெல்லிங்கை திருத்திய மத்திய அரசு
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Automobiles
பணக்காரர்களுக்கான சீப்பான எஸ்யூவிகார் இதான்! பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் இந்தியாவில் அறிமுகம்!
- Lifestyle
இந்த விஷயங்கள மட்டும் நீங்க தெரிஞ்சிகிட்டா... இனி காலிஃபிளவர் இலைகள தூக்கி எறியமாட்டீங்களாம்..!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Finance
பாகிஸ்தான் ரூபாய் நிலைமை ரொம்ப மோசம்.. இப்படியே போச்சுன்னா..!!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஷிவினை இழுத்து கீழே தள்ளிய தனம்..WWF ரேஞ்சிற்கு சண்டை..ரணகளமான பிக் பாஸ் வீடு!
சென்னை : பிக் பாஸ் வீட்டில், தனலட்சுமி ஷிவின் இருவரும் WWF ரேஞ்சிற்கு சண்டை போட்ட வீடியோ இணையத்தில் டிராண்டாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதற்காக பிக் பாஸ் வீடு காடாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால், இந்த வாரம் முழுக்க சண்டை சர்ச்சரவு என வீடே அதிரிபுதிரி ஆனது. இதில் வழக்கம் போல அனைத்து போட்டியாளர்களிடமும் அசீம் சண்டை போட்டார்.
Bigg Boss: அட்டக்கத்தியான அசீம்.. டைட்டில் வின்னர் ஆவாரா ஷிவின்.. கண்ணாடி மூலம் போட்டோ பிடித்த கமல்!

கத்தி கூச்சலிட்டார்
கதிரின் கால், கைகளை கட்டி போட்ட போது, கதிரும் அமுதவாணனும் வீட்டில் கட்டி புரண்டு சண்டை போட்டார். அப்போது, கதிர் வலிக்கிறது வலிக்கிறது என்று கத்தியதால், அசீம், அமுதவாணனிடம் இப்படி விளையாடக்கூடாது இது சரியா முறைஇல்லை என்றால். ஒருகட்டத்தில் வாக்கு வாதம் முற்றியதால், யார் பெரிய ஆள் என்று அடித்துப்பார் என ஒருவரை முட்டிமோதி பேசிக்கொண்டனர் இதையடுத்து, அமுதவாணன் அசீம் தன்னை அடித்துவிட்டதாக கத்தி கூச்சலிட்டார்.

மயங்கி விழுந்த அசீம்
அமுதவாணனை அசீம் அடித்துவிட்டதால், மொத்த போட்டியாளர்களும் அசீமை திட்டினார்கள். இதனால், மன உளைச்சலில் இருந்த அசீம் மயங்கி விழுந்தார் இதையடுத்து அனைத்துப்போட்டியாளர்களும் அவரை மெடிக்கல் ரூமுக்கு தூக்கிச்சென்றனர். இதையடுத்து, ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் டாக்ஸ் ஒரு வழியாக முடிவடைந்தது. அந்த டாஸ்கில் ஷிவின், தனலட்சுமி,மணிகண்டன் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

பூட்டு போடும் டாஸ்க்
இதையடுத்து, பூட்டுபோடும் டாஸ்க் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் இரண்டு பூட்டுகள் கொடுக்கப்பட்டு, அதை சக போட்டியாளர்களுக்கு மாட்டிவிட வேண்டும், ஒருவரை ரிலீஸ் செய்ய சாவி கொடுக்கப்படும். இந்த டாஸ்கில் ஷிவினுக்கு இரண்டு பூட்டு கொடுக்கப்பட்டது. அந்த பூட்டை ஷிவின் தனலட்சுமியின் பெல்டில் மாட்ட முயற்சி செய்தார்.

இப்படி தள்ளிவிடலாமா?
அப்போது தனலட்சுமி ஷிவினின் முடியை பிடித்து, நெஞ்சில் கை வைத்தும் ஆக்ரோஷமாக தள்ளி விட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தனலட்சுமியை கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர். பொம்மை டாஸ்க்கில் அசீம் லேசாக தள்ளியதற்கு தனலட்சுமி என்னவெல்லாம் பேச்சு பேசினார். அப்போது, ஷிவினை இப்படி தள்ளிவிடலாமா என்று, தனலட்சுமிக்கு எதிராக இணையத்தில் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.