பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன பேசவே விடல.. எல்லாம் அவங்களால்தான்..மனம் திறந்த சாந்தி!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறி உள்ள மெட்டி ஒலி சாந்தி, இந்த நிகழ்ச்சி குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் செல்வாக்குடன் இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு, அழுகை உள்ளிட்ட பல விஷயங்களை பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் 100நாட்களும் பரவலாக பேசப்படும்.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் அனைவரும் புதுமுகமாக இருந்ததால், சீசன் 5 மக்களிடம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே போல, ரசிகர்கள் இடத்திலும் வரவேற்பை பெறவில்லை. இதற்கு காரணம் அறிமுகம் இல்லாத நபர்களை தேர்வு செய்தது தான் என்பதால், பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் விஜய் டிவி கூடுதல் கவனத்துடன் இருந்தது.

உப்புமா ராணி

உப்புமா ராணி

இதையடுத்து,பிக்பாஸ் சீசன் 6 கடந்த 9ந் தேதி தொடங்கியது. இதில் மெட்டி ஒலி சாந்தி ஒரு போட்டியாளராக வீட்டிற்குள் சென்றார். வயதில் மூத்தவர் என்பதால் அனைவரும் இவரிடத்தில் அன்பாக பழகினார்கள். அதே போல, வீட்டிற்கு வந்த நாளில் இருந்து கிச்சனில் நின்று கொண்டு, யார் யார் என்ன கேட்கிறார்களோ அதை சமைத்துக்கொடுத்தார். இவருக்கு உப்புமா ராணி என்று பட்டத்தையும் போட்டியாளர்கள் கொடுத்துள்ளனர்.

வருத்தப்பட்ட ரசிகர்கள்

வருத்தப்பட்ட ரசிகர்கள்

ஆனால், பிக் பாஸ் சீசன் 6ன் முதல் நபராக பிக் பாஸ் வீட்டிலிருந்து சாந்தி வெளியேற்றப்பட்டார். விஜே கதிரவன், ஷெரினா என அனைவரும் சாப்பிடுவதும் தூக்குவதுமாக இருக்கும் போது, அனைவர் இடத்திலும் அன்பாக பேசி சமைத்துக் கொடுத்த சாந்தி வெளியேற்றப்பட்டதை நினைத்து ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

அன்போடு பேசினார்கள்

அன்போடு பேசினார்கள்

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துள்ள சாந்தி அளித்துள்ள பேட்டியில், அனைவரும் சிறியவர்களாக இருந்ததால், அக்கா அக்கா என்று அன்போடு அழைத்தார்கள், அது மட்டும் இல்லாமல் அனைவருக்கும் சமைத்து கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, வீட்டில் இருப்பவர்களுக்கு சமைப்பதாக நினைத்து சமைத்தேன்.

அவங்கதான் காரணம்

அவங்கதான் காரணம்

பிக் பாஸ் வீட்டிற்குள் மைனா வந்த போதுதான் அனைவரும் குரூப்... குரூப்பாக பேச ஆரம்பித்தார்கள். மைனாவிற்கு வீட்டினுள் இருந்த போட்டியாளர்கள் பல பேர் ஏற்கனவே தெரியும் என்பதால் அந்த குரூப் மட்டும் தனியாக பேசிக்கொண்டு இருப்பார்கள். ஏதாவது பிரச்சனை விவாதம் என்றால் பேசவே விட மாட்டாங்க என்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சிறப்பாக விளையாடுவேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X