Don't Miss!
- News
ட்விஸ்ட்.. எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசுவின் வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு.. ஏன்? என்ன நடந்தது?
- Automobiles
இன்னோவாலாம் இனி வேஸ்ட் இனிமே இந்த கார்தான் பெஸ்ட்னு நினைச்சுட்டாங்க போல! புக்கிங் கண்ட மேனிக்கு குவியுது
- Technology
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அட கதை அப்படி போகுதா?..பாலாஜியின் பிறந்தநாளில் அம்மாவுடன் கலந்துகொண்ட ஷிவானி!
சென்னை : பிக் பாஸ் பாலாஜி முருகதாஸின் பிறந்த பார்ட்டியில் ஷிவானி முதல் நாளாக சென்று வாழ்த்து கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டாலும் ஒரு சிலர் நம் மனதைவிட்டு மறைய மாட்டார்கள். அப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்களில் முக்கியமானவர்தான் ஷிவானி நாராயணன்.
சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த இந்த அம்மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
Bigg Boss Tamil 6: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போறது இவங்க தான்.. கன்ஃபார்ம்!

ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் இரவு சீரியலில், தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் ஷிவானி நாராயணன். சீரியலில் இருந்த அடக்க ஒடுக்கம் இன்ஸ்டாகிராமுக்கு இல்லை என அதிரிபுதிரி கவர்ச்சி காட்டி ஆட்டம் போட்டு இளசுகளின் இதய ராணியாக வலம் வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
ஒரு பக்கம் சீரியல், ஒரு பக்கம் இன்ஸ்டா என கலக்கி வந்த ஷிவானி செல்லத்துக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்த ஷிவானி, நாட்கள் செல்ல செல்ல பாலாஜியின் பின்னால் சுற்றினார். பிக் பாஸ் வீடு என்றாலே காதல் கிசு கிசு வராமல் இருக்குமா? இருவரும் காதல் கிசுகிசுவில் சிக்கினர்.

காதலிக்கவில்லை
பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ஷிவானியின் அம்மா, இந்த வீட்டுக்கு எதுக்கு வந்த, பாலா பின்னாடி சுத்தவந்தியா? என பொது நிகழ்ச்சி என்று கூட பார்க்காமல் ஷிவானியை கடுமையாக திட்டினார். அதன் பிறகு, பாலாஜி தான் ஷிவானியைக் காதலிக்கவில்லை என்று கூறினார். ஆனாலும், பிக் பாஸ் நிகழ்சி முடிந்த பிறகும் இருவரும் பல நிகழ்ச்சியில் சந்தித்து வருகிறார்கள்.

கதை அப்படி போகுதா
இந்நிலையில், பாலாஜியின் பிறந்தநாள் பார்ட்டியில் ஷிவானி தனது அம்மாவுடன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போட்டோவை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து Happy Birthdayyy bala, Wish u all success man என வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் அடடா கதை அப்படி போகுதா என கேட்டு வருகின்றனர்.

மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்
நடிகர் பாலாஜி, ரவீந்தர் சந்திரசேகர் தயாரிப்பில் மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் என்ற படத்தில் ஹீரோவாக கமிட்டாகி உள்ளார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இத்திரைப்படம் 2007ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சாக்லேட் திரைப்படத்தின் ரீமேக் படமாகும். இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாலாஜிக்கு நண்பர் மற்றும் மட்டுமல்லாமல், திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.