For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிஆர்பிக்காக கேவலமாக நடந்து கொள்ளும் பிக் பாஸ்.. தர்ஷனிடமிருந்து நிஜ காதலியை பிரிக்க சதி? ஷாக் தகவல்

|
Bigg Boss 3 Tamil: இனிமே உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்: தர்ஷனின் காதலி உருக்கம்

சென்னை: நடப்பவைகளை வைத்துப் பார்க்கும் போது, டிஆர்பிக்காக தர்ஷன், சனம் ஷெட்டியின் காதலை பிரிக்க பிக் பாஸ் திட்டமிடுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பிரபல மாடலும், நடிகருமான தர்ஷன், இம்முறை பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கிறார். எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதனை சிரத்தையாக செய்து முடிப்பவர், நடுநிலையானவர் என்ற நல்ல பெயர் அவருக்கு இருக்கிறது.

ஆரம்பம் முதலே இந்த சீசனை அவர் தான் ஜெயித்து டைட்டிலை வாங்குவார் என மக்களும் சரி, சக போட்டியாளர்களும் சரி சொல்லி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் அவரை வைத்து இதுவரை பெரிய சர்ச்சைகளோ, சண்டைகளோ ஏற்பட்டதில்லை. ஆனால், இடையில் அவருக்கும், ஷெரினுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பெரிதும் மக்களால் ரசிக்கப்பட்டது. அதை வைத்து கண்டெண்ட் கொடுக்க பிக் பாஸ் முயற்சி செய்தார். அது நடக்கவில்லை.

என்னம்மா ரைசா.. கடைசியில நிலைமை இப்படி ஆகிப்போச்சே!

நிஜ காதலி

நிஜ காதலி

காரணம் தர்ஷனுக்கு ஏற்கனவே வெளியில் ஒரு காதலி இருக்கிறார். நடிகை சனம் ஷெட்டி தான் அந்தக் காதலி. உண்மையில் இம்முறை தர்ஷனுக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க அவர் தான் முக்கியக் காரணம். வைல்ட் கார்டு மூலம் அவரும் உள்ளே செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அவரை வைத்து முக்கோணக்காதல் கதையை பிக் பாஸ் நடத்துவார் எனக் கூறப்பட்டது.

மீரா

மீரா

ஆனால் அது நடக்கவில்லை. மாறாக கவின், சாக்‌ஷி மற்றும் லாஸ்லியாவை வைத்து முக்கோணக்காதல் கதையை பிக் பாஸ் எழுதி விட்டார். ஆனபோதும் இடையிடையே தர்ஷனைக் காதலில் விழ வைக்கும் முயற்சிகளும் நடைபெற்றன. முதலில் அந்த வேலையை மீரா பார்த்தார்.

நட்பு மட்டுமே

நட்பு மட்டுமே

அவரிடம் தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக தெளிவாகச் சொல்லி விட்டார். தர்ஷன் மீது தனக்கொரு ஈர்ப்பு இருப்பதாகச் சொன்னாலும், அதனை அடுத்த கட்டத்திற்கு ஷெரின் எடுத்துச் செல்லவில்லை. தர்ஷனும் அவரிடம் நட்பு ரீதியாகவே பழகுகிறார் என்பது வெளிப்படையாகவேத் தெரிகிறது.

சனம் தந்த பேட்டிகள்

சனம் தந்த பேட்டிகள்

ஆனால், சனம் ஷெட்டி வெளியில் இருந்தபடியே அவர்களது உறவு பற்றி சமீபத்தில் சில பேட்டிகள் அளித்து வந்தார். அதில், தர்ஷனும், ஷெரினும் காதலிப்பது போல் தோன்றுவதாகவும், அப்படியே காதலித்தாலும் அது தவறில்லை என்ற ரீதியிலும் அவர் பேசியிருந்தார். வெளியில் வந்த பிறகு இது பற்றி தர்ஷனிடம் பேசி யார் முக்கியம் என முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

கண்ணீர் வீடியோ

கண்ணீர் வீடியோ

சனம் தந்த இந்தப் பேட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இல்லாத காதலை இவர் ஏன் இப்படி இருக்கும், இருக்கலாம் என யூகங்கள் செய்து பெரிது படுத்துகிறார் என நெட்டிசன்கள் திட்டினர். அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், இனி தர்ஷனுடைய நல்ல எதிர்காலத்திற்கு தான் இடையூறாக இருக்கப் போவதில்லை என அழுது கொண்டே பேசியிருந்தார்.

காதல் நிச்சயம்

காதல் நிச்சயம்

தர்ஷனின் நல்லதுக்காக அவரிடம் இருந்து தான் பிரிந்து செல்வதாகவும், ஆனால் வாழ்நாள் முழுவதும் அவரைக் காதலித்துக் கொண்டே இருப்பேன் என்றும் அதில் உருக்கமாக அவர் கூறியிருந்தார். அந்த வீடியோவில் சனம் கதறி கதறி அழுதது அவர் மீது இரக்கத்தை ஏற்படுத்தியது.

வாழ்த்து வீடியோ

இந்நிலையில் நேற்று முன்தினம் தர்ஷனின் பிறந்தநாளையொட்டி சனம் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தர்ஷனின் பிறந்தநாளுக்காக ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று கேக் வெட்டியதாகவும், ஆனால் அந்த வீடியோவை நிகழ்ச்சியில் ஒளிபரப்ப விஜய் டிவி மறுத்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

பகீர் குற்றச்சாட்டு

பகீர் குற்றச்சாட்டு

அதில் தானும் இருப்பதாலேயே விஜய் டிவி ஒளிபரப்ப மறுத்து விட்டதாக பகீர் குற்றச்சாட்டையும் அவர் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தர்ஷனுக்கு கேக் அனுப்பி வைத்தார் பிக் பாஸ். கூடவே அதில் நண்பர்கள் கையெழுத்திட்ட பெரிய வாழ்த்து அட்டையும் இருந்தது. ஆனால் அதிலும் சனம் பெயர் மட்டும் மிஸ்ஸிங்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

மிகுந்த எதிர்பார்ப்போடு அந்த வாழ்த்து அட்டையை எடுத்துப் பார்த்த தர்ஷன், சனம் பெயர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். அதனை ஷெரினிடமும் அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார். மற்ற போட்டியாளர்களுக்கெல்லாம் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து வாழ்த்துகளைப் பெற்றுத் தந்த பிக் பாஸ், தர்ஷனுக்கு மட்டும் ஏன் இப்படிச் செய்தார் எனத் தெரியவில்லை.

கோபம்

கோபம்

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, டிஆர்பிக்காக தர்ஷனின் நிஜ காதலை உடைக்க பிக் பாஸ் திட்டமிட்டு, அதில் ஜெயித்து விட்டாரோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் - ஷெரின் விவகாரம் கண்டெண்ட்டாக்கப்படும் போதெல்லாம், வெளியில் சனம் பேட்டி கொடுத்து அதனைக் கெடுத்து விட்டார் என்ற கோபம்கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

மஹத் - யாஷிகா காதல்

மஹத் - யாஷிகா காதல்

போன சீசனிலும் இதே போல், யாஷிகாவை வைத்து மஹத் - பிராச்சி இடையே மோதல் உண்டானது. ஆனால், வெளியில் வந்ததும் மீண்டும் இருவரும் சமாதானமாகி விட்டனர். அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து விட்டது. விரைவில் திருமணமும் நடைபெற இருக்கிறது. தர்ஷன் - சனம் விவகாரத்திலும் அதேபோல் நடைபெறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
It seems the bigg boss is trying to separate Sanam from her lover Dharshan just for TRP. Sanam tried to televise a video on Dharshan's brithday. But bigg boss denied it. Sanam's name was not in the the greeting card sent to Dharshan. These the reasons for the assumptions.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more