For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அனிதாவும் நிஷாவும் தான் ஹைலைட்டே.. எச்சில் தெறித்த சண்டை.. 2ம் நாள் பிக் பாஸ் 4ல் நடந்தது இதுதான்!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் 4ம் சீசனின் 2ம் நாள் முழுவதும் என்னவெல்லாம் நடந்தது என்பதை முழுமையாக இந்த சின்ன ரவுண்டப் மூலம் தெரிந்து கொள்வோம்.

  Anitha Vs Suresh நடந்தது என்ன? யாரு மேல தப்பு | Bigg Boss Tamil

  கடந்த ஞாயிறன்று பிக் பாஸ் தமிழ் 4 அட்டகாசமான துவக்க விழாவுடன் தொடங்கியது. 16 போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி கமல் சார் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.

  பிக் பாஸ் வீட்டின் முதல் நாளிலேயே ஹார்ட் பிரேக் டாஸ்க் கொடுத்து, வழக்கம் போல நாரதர் வேலையை ஆரம்பித்து வைத்தார் பிக் பாஸ்.

  கமல் சொன்ன அந்த ஒரு விஷயம்.. சனம் ஷெட்டிக்கு அப்படி என்ன ஆச்சு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

  முதல் நாள்

  முதல் நாள்

  பிடித்தவர்களுக்கு ஹார்ட்டையும், பிடிக்காதவர்களுக்கு புரோக்கன் ஹார்ட்டையும் காரணத்துடன் கூற வேண்டும் என்கிற டாஸ்க்கை போட்டியாளர்கள் சூப்பராகவே செய்தனர். இளம் போட்டியாளரான ஷிவானிக்குத் தான் பலரும் புரோக்கன் ஹார்ட்டை பரிசாக கொடுத்தனர். முதல் நாளில் மற்ற போட்டியாளர்களால் டார்கெட் செய்யப்பட்டார் ஷிவானி.

  கண்ணீர் விட்டு கதறிய அனிதா

  கண்ணீர் விட்டு கதறிய அனிதா

  முதல் நாள் சட்டென முடிந்ததாக ரசிகர்கள் கருதினர். ஜித்தன் ரமேஷ், அனிதா சம்பத் உள்ளிட்டோர் கடைசியாக ஹார்ட்களையும், புரோக்கன் ஹார்ட்களையும் மற்ற போட்டியாளர்களுக்கு கொடுத்தனர். அனிதா சம்பத் ஹார்ட் சிம்பிளை நிஷா கையில் அச்சிட்டு, அவர் தன் அம்மா போல இருக்கிறார். எங்கம்மாவும் கருப்புத் தான் என கண்ணீர் விட்டு கதறினார்.

  பதில் சொல்ல முடியாமல்

  பதில் சொல்ல முடியாமல்

  முதல் நாளில் சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டி உள்ளிட்டோர் ஷிவானியை டார்கெட் செய்த நிலையில், நடிகர் ஆரி அர்ஜுனா, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் ஷிவானிக்கு ஆதரவாக பேசினார்கள். பின்னர், சட்டென, இன்ஸ்டாகிராமில் தினமும் 4 மணிக்கு போட்டோவும், வீடியோக்களும் என்ன காரணத்திற்காக போடுறீங்க என கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் ஷிவானி திணறினார்.

  வெளியே புலி வீட்டில் எலி

  வெளியே புலி வீட்டில் எலி

  விஜே சித்ராவுடன் நடந்த சண்டையின் போதும், கடைசியாக பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்னதாகவும் சின்னத்திரை நடிகை ஷிவானி சண்டையிட்ட லெவலே வேறு.. ஆனால், நடிகர் ஆரி அப்படி கேட்ட போதும், மற்ற ஹவுஸ்மேட்ஸ் மூஞ்சிக்கு நேரா டார்கெட் செய்தபோதும் ஷிவானி வாய் பேச முடியாமல் மெளனம் காத்தது, வெளியே புலி, வீட்டில இவர் எலி தான் போல என நெட்டிசன்கள் கலாய்க்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

  சும்மா கிழி கிழித்த போட்டியாளர்கள்

  சும்மா கிழி கிழித்த போட்டியாளர்கள்

  இரண்டாம் நாள் தொடக்கத்தை போட்டியாளர்கள் அனைவரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் ஒலித்ததும் எழுந்து வந்து செம ஆட்டம் போட்டனர். ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, நிஷா, ரியோ ராஜ், சம்யுக்தா, ஷிவானி, அனிதா சம்பத் எல்லாம் செம டான்ஸ் போட்டனர்.

  ஹேப்பி நியூஸ்

  ஹேப்பி நியூஸ்

  சும்மா கிழி பாடலுக்கு போட்டியாளர்கள் டான்ஸ் ஆடிக் கொண்டே இருக்கும் போது, திடீரென பாடல் நிறுத்தப்பட்டு அதன் நடுவே பிக் பாஸ் வாய்ஸ் ஒலித்தது. அனைத்து போட்டியாளர்களும் ஷாக்காகி பார்த்தனர். புரோக்கன் ஹார்ட் டாஸ்க் காரணமாக, முதல் வாரத்தில் யாருமே எலிமினேஷன் இல்லை என்கிற செம சூப்பரான ஹேப்பி நியூஸை பிக் பாஸ் சொன்னதும் அனைவரும் ஹேப்பி ஆனார்கள்.

  கிட்சனில் ஆரம்பித்த சண்டை

  கிட்சனில் ஆரம்பித்த சண்டை

  ‘மொட்டை தலை' சுரேஷ் சக்கரவர்த்தி கலாய்த்து செய்தி வாசித்தார் அனிதா சம்பத். அதன் விளைவாக கிச்சனில், செய்திவாசிப்பாளர்கள் பேசினாலே எச்சில் தெறிக்கும் என சுரேஷ் சக்கரவர்த்தி பதிலுக்கு கலாய்க்க, கிச்சன் ஏரியாவில் வழக்கம் போல வெடித்தது சண்டை. பின்னர், ரேகா வந்து சமாதானம் படுத்த, குறும்படம், நெடும்படம் எல்லாம் போடுவார்கள் என சுரேஷ் சக்கரவர்த்தி அனிதாவை செம அப்செட் ஆக்கினார். பின்னர் இருவரும் சமரசம் செய்து கொண்டனர்.

  சொந்த கதை சோகக் கதை

  சொந்த கதை சோகக் கதை

  அடுத்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெறாமல் இருக்க தங்களை பற்றிய விஷயங்களை கூற வேண்டும் என பிக் பாஸ் உத்தரவு போட, வேல் முருகன், சனம் ஷெட்டி மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் தங்களின் சொந்த கதை சோகக் கதைகளை கூறி பலரையும் அழ வைத்தபடியே 2வது நாள் முடிவுக்கு வந்தது.

  கஷ்டப்பட்டு முன்னேறினேன்

  கஷ்டப்பட்டு முன்னேறினேன்

  ஆடு மாடு மேய்த்து கஷ்டப்பட்டு முன்னேறிய கதையை நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் முதலாவதாக வந்து சொன்னார். பள்ளியில் போடப்படும் மதிய உணவு சாப்பிடவே பள்ளிக்கு சென்ற கதையையும், மதிய உணவை வாங்கிக் கொண்டு அம்மா அப்பாவுடன் பகிர்ந்து சாப்பிட்டதையும், சனி, ஞாயிறுகளில் ஆடு மாடுகளை மேய்த்த கதையையும் கூற அனைவரது கண்களும் குளமாகின. வறுமையால் உயிரழந்த அம்மாவை பற்றி அவர் பாடல் பாட போட்டியாளர்களுடன் சேர்ந்து ஏகப்பட்ட ரசிகர்களும் கண் கலங்கினர்.

  உயிர் போய் உயிர் வந்தது

  உயிர் போய் உயிர் வந்தது

  அடுத்ததாக சனம் ஷெட்டி பேசும் போது, 22 அடி உயரத்தில் இருந்து மாடியில் இருந்து கீழே விழுந்த சோக சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். செத்தே போயிட்டேன் என நினைக்கும் போது, ஆட்டோக்காரர் ஒருவர் உதவி செய்ததையும், பெற்றோர்கள் தன்னை கவனித்துக் கொண்டதை உயிர் போகும் வரை மறக்க மாட்டேன் என அவர் சொன்னதும், அவர் மீது இருந்த தப்பான அபிப்ராயம் போட்டியாளர்கள் மனங்களை விட்டு அகன்றன.

  ஹைலைட்டே இதுதான்

  ஹைலைட்டே இதுதான்

  பிக் பாஸ் தமிழ் சீசன் 2ம் நாளின் ஹைலைட்டே அறந்தாங்கி நிஷாவின் அசத்தலான பேச்சு தான். ஆரம்பம் முதலே தான் பட்ட கஷ்டங்களை நகைச்சுவை பொங்க கூறி ஹவுஸ்மேட்களை சிரிக்க வைத்தார். கலக்கப் போவது யாரு டீமில் உள்ள பசங்கள் சொக்கத் தங்கம் என்றார்.

  அழவைத்து விட்டார்

  அழவைத்து விட்டார்

  கடைசியாக விபத்து காரணமாக தனது குழந்தையின் காது பிய்ந்த விஷயத்தையும், அதற்காக தான் பட்ட கஷ்டத்தையும் அவர் கூற ஒட்டுமொத்த போட்டியாளர்களும், ரசிகர்களும் கண்ணீர் விட்டு அழுதனர். அறந்தாங்கி நிஷாவுக்கு ரியோ ஆறுதல் சொல்ல அப்படியே 2ம் நாள் முடிவுற்றது. இன்னைக்கு என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்.

  English summary
  Here we describe in a detail way about Bigg Boss Tamil season 4. Anitha Sampath, Shivani, Suresh Chakaravarthy, Nisha are the highlights of Day 2.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X