For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ன அர்ச்சனாவே இப்படி சொல்லிட்டாங்க.. ஷிவானியை தாங்கு தாங்குன்னு தாங்கும் பாலா.. 3வது புரமோ!

  |

  சென்னை: தீபாவளி வாரம் என்பதால் ஏகப்பட்ட போட்டிகள் பிக் பாஸ் வீட்டில் களை கட்டி வருகின்றன.

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ சரியாக வரவில்லை என்கிற பஞ்சாயத்து எழுந்து வரும் நிலையில், இன்று ஷார்ப்பா 3 மணிக்கு 3வது புரமோ வந்ததும் ரசிகர்கள் எடிட்டரை கலாய்த்து வருகின்றனர்.

  ஒவ்வொரு ஜோடியும் செங்கல் மேல் நடந்து செய்யும் பிசிக்கல் டாஸ்க் சூப்பர்.

  மறுபடியும் வாடா போடா பேச்சு

  மறுபடியும் வாடா போடா பேச்சு

  தனக்கு பிக் பாஸ் வீட்டில் மரியாதை வேண்டும் என மார் தட்டி பேசிய பாலாஜி, மற்ற போட்டியாளர்களை ஒருமையில் தொடர்ந்து பேசி வருகிறார். சோமசேகர் கட்டில் மெத்தைக்கு அடியில் ஒளித்து வைத்த உயிலை பாலாஜி எடுத்து வேற இடத்தில் ஒளித்து வைத்ததை பார்த்த ரம்யா, கேபி அவரிடம் கேட்க, முதலில் பீரோவில் இருந்து யாருடா சொல்லுங்கடா என மறுபடியும் வாடா போடா பேச்சில் ஈடுபட்டுள்ளதை முதல் புரமோ வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.

  நண்டு சிண்டு சண்டை

  நண்டு சிண்டு சண்டை

  பாலாஜி முருகதாஸும் ஷிவானி நாராயணனும் கொஞ்சி குழாவி வருவதை பார்த்து சனம் ஷெட்டி மட்டும் இல்லை கேபியும் காண்டாகவே உள்ளார். இந்நிலையில், பிக் பாஸ் அழகா ரூட்டை மாற்றி கேபியை ரம்யா, சோம் டீமுடன் கோர்த்து விட, கேபிக்கும் ஷிவானிக்கும் இரண்டாவது புரமோவில் செம சண்டை உருவானது. இந்த நண்டு சிண்டு எல்லாம் சண்டை போடுகிறதே, வெல்கம் டு பிக் பாஸ் சீசன் 4 என ரியோவும் பஞ்ச் கொடுப்பது சூப்பர்.

  முழித்துக் கொண்ட எடிட்டர்

  முழித்துக் கொண்ட எடிட்டர்

  நல்லா சாப்பிட்டுவிட்டு மதியம் 3 மணிக்கு புரமோவை ரிலீஸ் செய்யாமல் அடிக்கடி பிக் பாஸ் எடிட்டர் தூங்கி விடுகிறார் என்கிற புகார்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. பிக் பாஸ் புரமோவை போடுவதற்கு பதிலாக மத்த சீரியல் புரமோக்களை போட்டு, ரசிகர்களை பிளான் பண்ணி பார்க்கவும் வைத்து விடுகின்றனர்.

  பேசுவேன் பேசுவேன் பேசிக்கிட்டே இருப்பேன்

  பேசுவேன் பேசுவேன் பேசிக்கிட்டே இருப்பேன்

  இது தீபாவளி வாரம், இது ஒரு ஃபன் டாஸ்க், ஃபன் என்றால், ஹேப்பி, மகிழ்ச்சி, சந்தோஷமாக இருப்பது, சண்டை போடாமல் இருப்பது, சிரிப்பது என விட்டா பேசுவேன் பேசுவேன் பேசிக்கிட்டே இருப்பேன் ரேஞ்சுக்கு போய்க்கிட்டு இருக்கிறார் அர்ச்சனா. இந்த டாஸ்க்கில் அவர் நடுவராகத்தான் இருப்பார் என தெரிகிறது. செங்கல் பாவம்.

  செங்கல் மேல் நடக்கும் டாஸ்க்

  செங்கல் மேல் நடக்கும் டாஸ்க்

  பிக் பாஸ் வீட்டில் ஆண்களும், பெண்களும் எண்ணிக்கையில் இன்னும் அதிகளவில் சரி சமமாக இருப்பதால், ஈஸியா அவர்களை ஜோடி ஜோடியாக பிரித்து விடுகிறார் பிக் பாஸ். செங்கல் மேல் பெண் போட்டியாளர்கள், நடக்க ஆண் போட்டியாளர்கள், அந்த செங்கலை மாற்றி மாற்றி வைத்து பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற வேண்டும் என்பதே இன்றைய பிசிக்கல் டாஸ்க்.

  யாருக்கு யார் ஜோடி

  யாருக்கு யார் ஜோடி

  சோமசேகருக்கு இந்த போட்டியிலும் ரம்யா பாண்டியன் ஜோடியாக தொடர்கிறார். சனம் ஷெட்டிக்கு ஜித்தன் ரமேஷ், பாலாஜி முருகதாஸுக்கு மீண்டும் ஷிவானி கிடைச்சிட்டாங்க, கேபி ஆஜீத், ரியோ நிஷா பாவம் அவருக்கு வேற ஆப்சனே இல்லை வீட்டில பொண்டாட்டிக்கிட்ட அடியும் வாங்க தேவையில்லை. சுச்சி ஆரி, அனிதா சம்யுக்தா என பிரிந்துள்ளனர்.

  இப்படி சொல்லிட்டீங்களே அர்ச்சனா

  இப்படி சொல்லிட்டீங்களே அர்ச்சனா

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவின் இறுதியில் அர்ச்சனா அக்காவும், நானும் நடந்து பார்க்கிறேன் என ட்ரை பண்ணுகிறார் போல, கடைசியில், யாரும் பார்க்கல.. யாரும் பார்க்கல என தீபாவளி மொக்கை எபிசோடை யாரும் பார்க்க மாட்றாங்க என்பதை சூசகமாக சொல்றீங்களே எனவும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

  English summary
  Finally third promo arrived; Physical task with bricks in today episode at Bigg Boss house. Housemates performed the task well ahead of Diwali.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X