Just In
- 4 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 5 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 8 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 9 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பரவாயில்லையே இன்னைக்கும் புரமோ விடுறீங்களே.. திடீரென சமாதான புறாவாக மாறிய சனம்.. கடுப்பான ரியோ!
சென்னை: பிக் பாஸ் வீடு வெள்ளத்தில் மூழ்கி விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ சரியான நேரத்துக்கு வந்து விட்டது.
ஆனால், இன்னமும் கால் சென்டர் பிரச்சனையை வைத்து பிக் பாஸ் எடிட்டர் ஒப்பேற்றி வருவது பச்சையாக தெரிகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரியோவுடன் ஒவ்வொருத்தரும் நேற்று சண்டை போட்ட நிலையில், இன்றைய புரமோவில் சமாதான புறாவாக சனம் மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வீட்டில் வெள்ளம்
நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ரொம்பவே பாதிப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் வீடும் அந்த புயலுக்கு தப்பவில்லை. பிக் பாஸ் வீட்டில் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது என்றும், போட்டியாளர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

நிகழ்ச்சி இருக்குமா
நேற்று முன் தினம் தான் புயல் கோரத் தாண்டவம் ஆடிய நிலையில், தான் பிக் பாஸ் வீட்டில் வெள்ளம் ஏற்பட்டது. அதனால், நேற்றும் இன்றும் கால் சென்டர் டாஸ்க்கின் போது ஒதுக்கி வைக்கப்பட்ட காட்சிகளை நிகழ்ச்சியாக மாற்றி ஒளிபரப்ப தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. முன்னதாக இன்று பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்குமா? என்ற சந்தேகமும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் புரமோ
ஆனால், இன்றும் ரசிகர்களுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் என்பதற்கு சான்றாக காலையிலேயே முதல் புரமோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளனர். சீக்கிரமே மழை நீர் வடிந்து போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்கான எபிசோடுகளை எடுப்பார்கள் என்று தெரிகிறது.

ரியோவை சுற்றி வளைத்து சண்டை
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஆஜீத்திடம் கால் பண்ணி பேசிய ரியோ ராஜிடம், ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி அவரை சுற்றி வளைத்து சண்டை போட்டனர். இந்த வாரம் ஏன் டா கேப்டன் ஆனோம் என ரியோவுக்கு இருந்திருக்கும்.

சமாதான புறா சனம்
இந்நிலையில், தற்போது வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில், வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்துக் கொள்ள முடியாத நிலை உருவாகி விட்டது என்றும், அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும் என்கிற ரீதியில் சனம் ஷெட்டி சமாதான புறாவாக ரியோவிடம் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அர்ச்சனா மடியில் ரியோ
ஆனால், தான் எவ்வளவோ அதனை சரி செய்ய முயற்சித்து விட்டேன் இனிமேல் அதை செய்ய தனக்கு விருப்பம் இல்லை என சனமிடம் சற்றே கடுப்பாகி பேசிய ரியோ, அர்ச்சனா அக்கா மடியில் படுத்தபடியே சனம்க்கு பதில் சொன்னது பிக் பாஸ் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.

கமல் வருவாரா
இந்த வாரம் கமல்ஹாசன் நாளைய எபிசோடுக்கு இன்று வந்து ஷோ பண்ணியிருப்பாரா? சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சி வழக்கம் போல நடைபெறுமா? என ஏகப்பட்ட சந்தேகங்களும் குழப்பங்களும் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.