For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  லவ்வுக்கு ஏது கியாரன்டி.. ஆண் நண்பருடன் கேரளாவில் சுற்றித் திரியும் பிக் பாஸ் பிரபலம் சுசித்ரா!

  |

  சென்னை: பாடகியும் பிக் பாஸ் பிரபலமுமான சுசித்ரா கேரளாவில் ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் செல்ஃபியை பதிவிட்டுள்ளார்.

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்ட சுசித்ரா வந்த வேகத்திலேயே எவிக்ட்டும் ஆனார்.

  காதலியை இன்ஸ்டாவில் அறிமுகப்படுத்திய அழகு சீரியல் 'திருநா'.. வாழ்த்து மழை பொழியும் ரசிகாஸ்!காதலியை இன்ஸ்டாவில் அறிமுகப்படுத்திய அழகு சீரியல் 'திருநா'.. வாழ்த்து மழை பொழியும் ரசிகாஸ்!

  கிராண்ட் ஃபினாலேவுக்கு பிறகு கமல்ஹாசன் மீது அவர் வைத்த குற்றச்சாட்டுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை விளாசித் தள்ளினர்.

  சுச்சி லீக்ஸ்

  சுச்சி லீக்ஸ்

  சூரியன் எஃப்.எம் ஆர்.ஜேவாக பிரபலமான சுசித்ரா, பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி பாடகியாகவும் பட்டையை கிளப்பினார். ஆனால், அதன் பின்னர் அவரது சமூக வலைதள பக்கத்தில் இருந்து சுச்சி லீக்ஸ் எனும் பெயரில் வெளியான பல பிரபல நடிகர்களின் அந்தரங்க வீடியோக்கள் அவருக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது.

  வைல்டு கார்டு என்ட்ரி

  வைல்டு கார்டு என்ட்ரி

  யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பின்னர் சினிமா துறையை விட்டு ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறிய கார்த்திக் குமாருடன் விவாகரத்து ஆன நிலையில், மீடியா வெளிச்சமே இல்லாமல் இருந்த சுசித்ரா, சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

  போரிங் போட்டியாளர்

  போரிங் போட்டியாளர்

  சுசித்ரா பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறார் என்றதும் இருந்த பரபரப்பு, அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதும் அப்படியே அடங்கிப் போய்விட்டது. மிகவும் உடல் மெலிந்து நோய் வாய்ப்பட்டவராக தென்பட்டார். பாலாவுடன் சுச்சியையும் போரிங் போட்டியாளர் என ஜெயிலுக்கு அனுப்பி இரண்டே வாரங்களில் அவரை எவிக்ட்டும் செய்து விட்டனர்.

  கமல் மீது குற்றச்சாட்டு

  கமல் மீது குற்றச்சாட்டு

  பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொண்ட பாடகி சுசித்ரா, தனக்கு கமல்ஹாசனால் வழங்கப்பட்டது கதர் ஆடை அல்ல என்கிற சர்ச்சையை கிளப்பினார். மேலும், கமல்ஹாசன் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார், அவர் சரியான ஹோஸ்ட் அல்ல உள்ளிட்ட கருத்துக்களையும் முன் வைத்து அவரது ரசிகர்களிடம் நல்லாவே வாங்கிக் கட்டிக் கொண்டார். பின்னர் அந்த பதிவையும் நீக்கி விட்டார்.

  கொண்டாட்டத்தில் இல்லை

  கொண்டாட்டத்தில் இல்லை

  அதன் காரணமாகத்தான் என்னவோ தெரியவில்லை பிக் பாஸ் கொண்டாட்டத்தில் சுசித்ரா கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. இதுவரை வெளியான எந்த புரமோவிலும், போட்டோவிலும் சுச்சியை ஆளையே காணோம். இதற்கு மேல் பிக் பாஸ் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் இடம்பெறுவாரா என்பது சந்தேகம் தான்.

  ஆண் நண்பருடன்

  ஆண் நண்பருடன்

  இந்நிலையில் தற்போது, ஆண் நண்பர் ஒருவருடன் கேரளாவில் சுற்றுலா செய்து வரும் பாடகி சுசித்ரா. ஆற்றின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு எடுத்த செல்ஃபியை பதிவிட்டு ஆற்றிடம் அரசியல் பேசுகிறேன் என கொடுத்துள்ள கேப்ஷன் வைரலாகி வருகிறது. சுசித்ராவின் இந்த புதிய ஆண் நண்பர் யார் என்றும் நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.

  லவ்வுக்கு ஏது கியாரன்டி

  லவ்வுக்கு ஏது கியாரன்டி

  மேலும், அந்த போஸ்ட்டுடன் பிரண்ட்ஷிப் என்பது ஃபுல் சேஃப்டி, லவ்வுக்கு ஏது கியாரன்டி என்றும் சுசித்ரா கேப்ஷன் கொடுத்து அந்த போஸ்ட்டை வைரலாக்கி உள்ளார். சந்தன பொட்டு வைத்துக் கொண்டு கேரள இளைஞராக சுசித்ரா அருகே இருக்கும் அந்த இளைஞர் தற்போது டாக் ஆஃப் தி டவுன்.

  English summary
  Popular singer and Bigg Boss Tamil 4 fame Suchitra posted a selfie with a boy friend goes viral.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X