For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  குரங்கு உண்டியல் எடுத்த சோம்ஸ்.. ரியோ கிங் கோப்ராவாம்.. கழுதை பாலாஜி.. தவளை சுரேஷ்.. ஷிவானிக்கு?

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸுக்கும் ஒவ்வொரு உண்டியல் கொடுக்கப்பட்டது.

  Bigg Boss Tamil Season 4 • First Eviction | Kamal Hassan

  நாய், பூனை, சிங்கம், நரி, தவளை, கழுதை, குரங்கு என வித விதமான அந்த உண்டியலை ஒவ்வொரு போட்டியாளரும் தேர்வு செய்து, தான் ஏன் அதை எடுத்தேன் என்றும் சூப்பராக விளக்கினார்கள்.

  பாலாஜி முருகதாஸ் கழுதை உண்டியலை எடுத்துக் கொண்டு அழகா ஒரு விளக்கம் கொடுத்தது எல்லாம் அட்டகாசம்.

  எல்லாமே மூன்றெழுத்தா இருக்கே.. சனிக்கிழமை சேவ் ஆனவங்க இவங்க தான்.. யார் யார் தெரியுமா?

  இந்த உண்டியல் எதுக்கோ

  இந்த உண்டியல் எதுக்கோ

  கடந்த வெள்ளியன்று நடந்த நிகழ்வுகளை நேற்றைய எபிசோடில் கமல் போட்டுக் காண்பித்தார். அப்போது, ஹவுஸ்மேட்களுக்கு உண்டியல் ஒன்றை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த உண்டியல் காசு சேர்த்து வைக்க அல்ல, இந்த வீட்டில் உங்கள் கனவுகளை சேர்த்து வைக்க என அழகா அனிதா சம்பத் விளக்கினார். ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் காயினை அதில் போட வேண்டும். இதில் என்ன விலங்கம் ஒளிந்துள்ளது என்பதை போக போக பார்ப்போம்.

  மீன் உண்டியல்

  மீன் உண்டியல்

  நடிகை ரேகா முதல் ஆளாக வீட்டை விட்டு வெளியேறுவதை போலவே, முதல் ஆளாக அந்த உண்டியலை நான் தான் எடுப்பேன் என அடம் பிடித்துச் சென்று, மீன் உண்டியலை எடுத்துக் கொண்டார். ரேகாவுக்கு பிடித்த மத்தி மீன் முன்னதாக வந்தது. தன்னை மீனுக்குட்டி என்றழைப்பார்கள், தனக்கு மீன் பிடிக்கும் அதனால் இதை தேர்வு செய்கிறேன் என்றார்.

  சிங்கப்பெண்ணே

  சிங்கப்பெண்ணே

  இரண்டாவதாக வந்த அனிதா சம்பத், சிங்க உண்டியலை எடுத்துக் கொண்டு, நான் ஒரு சிங்கம், சிங்கம் மாதிரி என் குடும்பத்தை நான் தான் காப்பாத்துறேன். அதனால இது எனக்கு பொருந்தும் என நினைக்கிறேன் என அந்த உண்டியலை எடுத்து முதல் வார காயினை போட்ட உடனே சிங்கப்பெண்ணே என நிஷா குரல் கொடுத்தார். பாலாஜி முருகதாஸ், அக்கா அது ஆம்பள சிங்கம் என கலாய்த்தார்.

  பட்டாம்பூச்சி ரம்யா

  பட்டாம்பூச்சி ரம்யா

  கண்ணாடி போட்டுக்கிட்டு செம க்யூட்டாக வந்த ரம்யா பாண்டியன், நான் வந்து பட்டர்ஃபிளை எடுத்துக்கிறேன். ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கும். அப்படியே மேல மேல பறக்கணும், ஃப்ரீ ஸ்ப்ரிட் என அழகா சொல்ல சொல்ல அர்ச்சனா அக்கா அவருக்கு பறக்கும் முத்தங்களையே பரிசாக அளித்தார். ரசிகர்களும் தான்.

  மங்கி மங்கி

  மங்கி மங்கி

  அடுத்ததாக வந்த அழகிய தமிழ் மகன், பிக் பாஸ் வீட்டின் அழகு பதுமை சோமசேகர், குரங்கு உண்டியலை எடுத்துக் கொண்டு, கிங் காங் போலவே செய்தும் காட்டினார். பின்னர், ஏதாவது பேச வேண்டுமே, என்பதற்காக, மங்கி மங்கி என உண்டியலையும், தன்னையும் ஒப்பிட்டு பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

  ஆமை உண்டியல் யாருக்கு

  ஆமை உண்டியல் யாருக்கு

  எப்போதுமே பாலாஜி முருகதாஸ் கூடவே சண்டைப் போட்டுக் கொண்டு அசிங்கப்பட்டு வரும் நம்ம நமத்துப் போன பட்டாசு சனம் ஷெட்டி, ஆமை உண்டியலை எடுத்துக் கொண்டு, நான் டார்ட்டாய்ஸ் எடுத்துருக்கேன், அது எப்பவுமே ஸ்லோ அண்ட் ஸ்டெடி என முயல் ஆமை கதையை சொல்வது போல சொல்லி, எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார்.

  விஷத்தை கக்குவேன்

  விஷத்தை கக்குவேன்

  அடுத்து வந்த ரியோ ராஜ், அய்யய்யோ வாயில அடிங்க, வாயில அடிங்க, சவாலான போட்டியாளர் ரியோ ராஜ், பாம்பு உண்டியலை எடுத்துக் கொண்டு, பாம்புன்னா சாதாரண பாம்பு இல்லை, கிங் கோப்ரா, (குபீர்னு சிரிச்சிடாதீங்க), தேவைப்பட்டா விஷத்தை கக்கிடணும் என்றார். நீங்க வெறும் தண்ணி பாம்பு தான் அதான், சுரேஷ் பிரச்சனையிலேயே பார்ட்துட்டோமே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

  அஜீத், கேபி, நிஷா

  அஜீத், கேபி, நிஷா

  பூனை உண்டியலை எடுத்த ஆஜீத், வழக்கம்போல, பூனை பார்க்க க்யூட்டாத்தான் இருக்கும், ஆனால், அது பாட்டுக்கும் திமிரா திரியும் என இங்கேயும் ஆரிக்கு ஆப்பு வைப்பதாகவே பேசினார். குள்ள நரி உண்டியலை எடுத்துக் கொண்ட கேபி, தந்திரம்லாம் இல்லை க்யூட்டா இருக்கேன்னு எடுத்தேன் என்றார். நாய்க்குட்டி உண்டியல் எடுத்த நிஷா எப்பவுமே நன்றியுடன் இருப்பேன் என்றார்.

  ராஜாவா இருக்கணும்னு நினைக்கிறேன்

  ராஜாவா இருக்கணும்னு நினைக்கிறேன்

  சேவல் உண்டியலை எடுத்த வேல்முருகன், ராஜ பறவை ராஜாவா இருக்கணும்னு நினைக்கிறேன் என்றார். காலையில எழுந்திருப்பதால் தானே என அர்ச்சனா கலாய்த்தார். யானை உண்டியலை எடுத்த ஜித்தன் ரமேஷ், எப்போதுமே ஸ்ட்ராங்கா இருக்கணும் என்றார். அர்ச்சனா ஆடு உண்டியலை எடுத்துக் கொண்டார்.

  என் வழி தனி வழி

  என் வழி தனி வழி

  கழுதை உண்டியலை எடுத்த பாலாஜி முருகதாஸ், கழுதை.. இதை யாரும் சூஸ் பண்ண மாட்டாங்க, என்ன சொல்ல வரேன்னா என் வழி தனி வழி என படையப்பா பஞ்ச் டயலாக் பேசினார். நிறைய சுமக்கும் என எடுத்துக் கொடுத்தவுடன், ஆம், நிறைய சுமக்கும் என சிரித்துக் கொண்டே சொன்ன பாலாஜி "Very Underrated" என்றார். இப்போ எதுக்கு கேபிக்கு ஜூம் போறீங்க எடிட்டர்.

  யார் இந்த முயல்க்குட்டி

  யார் இந்த முயல்க்குட்டி

  ஷிவானி நாராயணன் எந்த உண்டியலை எடுக்கப் போறாங்க என ஆர்வத்துடன் காத்திருந்த அவரது ஆர்மியினர் ஹேப்பி ஆகும் படி, "நான் முயல்க்குட்டி எடுத்துக்குறேன்.. முயல் மாதிரி தாவி தாவி ஓடணும்" என துள்ளிக் குதித்து அழகா ஓடின ஷிவானியை பார்த்து ரசிகர்கள் அப்படியே அசந்து போனார்கள்.

  தவளை தன் வாயால் கெடும்

  தவளை தன் வாயால் கெடும்

  மிரட்டல் அடி படத்தில் வரும் தவளை வில்லனை போல, பிக் பாஸ் வீட்டின் வில்லாதி வில்லன் நம்ம மொட்டை பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி, நான் தவளை உண்டியலை எடுத்துக்கிறேன். நுணலும் தன் நாவால் கெடும் என்பார்கள், முடிஞ்ச வரைக்கும் என் நாவை அடக்கப் பார்க்கிறேன் என்றார். போடுறா.. போடுறா.. என ஹவுஸ்மேட்கள் சுரேஷை உற்சாகப்படுத்தினர். (நுணல் - தவளை).

  தங்க முட்டை போடுற வாத்து

  தங்க முட்டை போடுற வாத்து

  கடைசியா ஒட்டகசிவிங்கியும் வாத்தும் இருந்தது. முன்னாள் மாடல் அழகி சம்யுக்தா, நான் ரொம்ப உயரமா இருக்கேன் அதனால, ஒட்டகசிவிங்கியை எடுத்துக்கிறேன் என்றார். கடைசியாக வேறு ஏதும் இல்லாத நிலையில், வாத்தை எடுத்துக் கொண்ட ஆரி, கடைசி ஆப்ஷன், வாத்துன்னாலே எல்லாரும் மடையன்னு சொல்வாங்க, இந்த வாத்து எமாறப் போகுதா? இல்லை விளையாடி ஜெயிக்கப் போகுதான்னு பார்க்கலாம் என்றார். வாத்து தான் தங்க முட்டை போடும் என அர்ச்சனா ஆறுதல் சொன்னார். இந்த உண்டியல் வச்சி பிக் பாஸ் என்ன விளையாடப் போகிறார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

  English summary
  Bigg Boss Tamil 4 season housemates choose their own Hundi to save their dreams and gave a explain why they choose the hundi.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X