Just In
- 1 min ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 2 hrs ago
அக்ரிமென்ட்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவிட்டல் ரசிகர்கள் ஷாக்!
- 2 hrs ago
'என்ன இவரும் இப்படி கிளாமர்ல இறங்கிட்டாப்ல..' வைரலாகும் நடிகை பூனம் பஜ்வாவின் 'ஜில்' போட்டோஸ்!
- 2 hrs ago
எனக்கு விழுற ஒவ்வொரு ஓட்டும் கப்புதான்.. ரன்னர் அப் பாலாஜியின் முதல் பதிவு.. என்னென்னு பாருங்க!
Don't Miss!
- News
தேனி ராஜா.. ஆசைப்பட்ட தமிழரசி.. உப்புக்கோட்டைக்கு சிட்டாய் பறந்து வந்து.. அங்க பாருங்க ஒரு டிவிஸ்ட்!
- Sports
32 ஆண்டுகளில் 3வது முறை... சொதப்பிய ஆஸ்திரேலியா... சாதித்த இந்திய இளம் வீரர்கள்!
- Finance
வரி சலுகைக்காக டெஸ்லா செய்த தில்லாலங்கடி வேலை.. எலான் மஸ்க் இது நியாயமா..?!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Lifestyle
Kumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானிக்கு வந்த பப்ளிக் கால்.. பயந்தே போச்சு புள்ள.. என்ன கேட்டார் தெரியுமா?
சென்னை: கடந்த இரு வாரங்களாக ஒய் பிளட் சேம் பிளட் எனும் கஸ்டமர் கேர் டாஸ்க்கை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் நாட்களை நகர்த்தினர்.
போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களை கார்னர் பண்ணி கேள்வி கேட்டும், சிலர் பிடித்தவர்களுக்கே கால் பண்ணி பேசி, அவர்களை நாமினேஷனில் இருந்து காப்பாற்றியும் அந்த டாஸ்க்கையும் காலி பண்ணி விட்டார்கள்.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியில், ஷிவானி நாராயணனுக்கு பப்ளிக் ஒருத்தர் கால் பண்ணி பேசிய நிகழ்வு அரங்கேறியது.

எஸ்கேப்பான ஷிவானி
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் வேண்டுமென்றே வந்து பார்க்கலாம் என நினைத்த ஷிவானி நாராயணனை ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் வீட்டுக்கு அனுப்ப போகிறோம் என கூறிவிட்டு, அவருக்கு ஓட்டே போடவில்லை என்றனர். நீங்க போடுற ஓட்டெல்லாமா பாஸ் பார்த்து அவங்க ஷோ நடத்துறாங்க என்பது போல, ஷிவானி ஈஸியா இந்த வாரம் எவிக்ஷன் ஆகாமல் எஸ்கேப் ஆகிட்டார்.

ஒரு போட்டோ போதும்
இன்ஸ்டாகிராமில் ஷிவானி நாராயணனுக்கு 2.4 மில்லியன் ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நாமினேஷனுக்கு வந்தாலும், விஜய் டிவி பிளான் பண்ணால் மட்டும் தான் ஷிவானியை வெளியேற்ற முடியும். அதுவரை அவரை வெளியேற்றாமல் காப்பதற்கு, அவங்க அம்மா பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் போட்டோ போதும்.

பப்ளிக் கால்
கடந்த இரு வாரமாக பிக் பாஸ் வீட்டில் போன் டாஸ்க்கை வச்சு ரசிகர்கள் காதுகளில் ரத்தம் வர வைத்தனர். இந்நிலையில், சன் டே எபிசோடில் கமல் சார் பேசும் போது, பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பொதுமக்களில் இருந்து ஒருவர் கால் பண்ண சிறப்பான தருணம் நிகழ்ந்தது. அருணாச்சலம் என்பவர் ஷிவானியிடம் தான் பேசுவேன் என அடம் பிடித்தார்.

பயந்தே போச்சு
ஷிவானிக்கு பப்ளிக் கிட்ட இருந்து போன் கால் என்றதும், அவர் பயந்தே போயிட்டார். நாம மிக்சர் திங்கிறதையும், பாலாவுக்கு பணிவிடை செய்றதையும் கேட்டு டோட்டல் டேமேஜ் செய்து விடுவாரோ? என ஷிவானி புள்ள ஒரு சில நொடிகள் பயந்தே போயிட்டாங்க.. ஸ்க்ரீனில் தெரிந்த அவங்களோட எக்ஸ்பிரஷன் வேற லெவல்.

நாமினேஷனுக்கு ஏன் வந்தீங்க
ஏகப்பட்ட ரசிகர்கள் உங்களுக்கு இருக்காங்க என்கிற காரணத்தால் வேண்டுமென்றே நாமினேஷனுக்கு வந்தீங்களா? ஷிவானி என்கிற ஈஸியான கேள்வியை மட்டுமே அந்த ரசிகர் முன் வைத்தார். உடனே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஷிவானி, ரசிகர்களின் உற்சாகத்தையும், அவங்க பல்ஸையும் பிடித்து பார்க்கத் தான் நாமினேஷனுக்கு போயிட்டு வந்தேன் என்றார்.

செட்டப் கால்
ஷிவானியின் பப்ளிக் கால் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான நிலையில், அந்த நிமிடமே நெட்டிசன்கள் இது வழக்கம் போல விஜய் டிவியின் செட்டப் கால் என்றும், செட்டில் இருக்கும் ஒரு உதவி இயக்குநர் போன் பண்ணி பப்ளிக் போல பேசி ஏமாற்றுகிறார் என்றும் ஏகப்பட்ட விமர்சனங்களை வழக்கம் போல முன் வைத்தனர்.