For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒரு சிங்கர் வெளியே போனா.. இன்னொரு சிங்கர் உள்ளே வராங்க.. இது பிக் பாஸா? இல்லை சூப்பர் சிங்கரா?

  |

  சென்னை: முதல் புரமோவில் வேல்முருகன் வெளியே போவதை ரிவீல் பண்ண பிக் பாஸ் எடிட்டர், இரண்டாவது புரமோவில் சுசித்ராவின் என்ட்ரியை ரிவீல் செய்துள்ளார்.

  பாடகர் வேல்முருகன் வீட்டை விட்டு வெளியேறும் நிலையில், பாடகியான சுசித்ரா வீட்டுக்குள் அடி எடுத்து வைக்கிறார்.

  அர்ச்சனா அக்காவுக்கு மறுபடியும் 16 பேருக்கும் சோத்தை வடிச்சுக் கொட்ட வேண்டும் என்ற கவலை இந்நேரம் அதிகரித்து இருக்கும்.

  கொரோனா காரணமா..? பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய அந்த பிரபலம்.. ரசிகர்கள் வியப்பு!

  போட்டாச்சு போட்டாச்சு

  போட்டாச்சு போட்டாச்சு

  இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் அதிரடியான 2வது புரமோவையும் போட்டுட்டாங்க.. 14 நாட்களுக்கு முன்பாக குவாரண்டினில் வைக்கப்பட்ட போதே சுசித்ராவின் என்ட்ரி லீக்கான நிலையில், கமலுக்கு மட்டுமே சர்ப்ரைஸாக பாடகியும் ஆர்ஜேவுமான சுசித்ரா வரவு இருந்தது ஆச்சர்யம் தான்.

  ஓவியா மாதிரி

  ஓவியா மாதிரி

  இன்னும் சில பேர் வீட்டிற்கு வருவார்கள் என தெரிகிறது என இரண்டாவது புரமோவில் கமல் சொன்ன உடனே துள்ளி குதித்து ஓடி வந்த சுசித்ராவை பார்த்த ரசிகர்கள், என்ன மறுபடியும் ஓவியா உள்ளே வந்துட்டாங்களா? என்கிற எண்ணமே அதிகரித்தது. க்ளோஸ் அப்பில் முகத்தை காட்டிய உடன் அந்த எண்ணம் மலையேறி போயிருக்கும்.

  சுச்சி லீக்ஸ்

  சுச்சி லீக்ஸ்

  சுச்சி லீக்ஸ் புகழ் சுசித்ரா பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் அதிகாரப்பூர்வமாக வைல்டு கார்டு என்ட்ரி மூலம் இன்று கமல் முன்னிலையில் உள்ளே நுழைகிறார். அர்ச்சனாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சுச்சி லீக்ஸ் சர்ச்சைகள் பற்றியும், தன் வாழ்க்கை தடம் மாறியது பற்றியும் நிறையவே பேசுவார் எனத் தெரிகிறது.

  மியாவ் மியாவ் பூனை

  மியாவ் மியாவ் பூனை

  அர்ச்சனா அக்கா வந்தது போல, தீமை தான் வெல்லும் என பயங்கரமான தீம் மீயூசிக் எல்லாம் போடாமல், சுசித்ரா பாடிய போக்கிரி படத்தின் டோலு டோலு தான் அடிக்கிறான் என்கிற பாடல் இசையும், கந்தசாமி படத்திற்காக அவர் பாடிய மியாவ் மியாவ் பூனை பாட்டையும் போட்டு கலகலப்பாகவே துள்ளி குதித்து உள்ளே நுழைந்தார். இந்த பூனை என்ன செய்யப் போகுதுன்னு பார்ப்போம்.

  தாத்தா ரியாக்‌ஷன்

  தாத்தா ரியாக்‌ஷன்

  மொட்டை தல சுரேஷ் தாத்தா பாடகி சுசித்ராவின் எண்ட்ரியை பார்த்த உடனே லுங்கி அவுந்துடும் போல இருந்ததை, இழுத்து வாரி பிடித்துக் கொண்டார். எத்தனையோ திரை பிரபலங்களின் ஆடைகள் கழண்ட வீடியோக்கள் சுச்சி லீக்ஸ் மூலம் கசிந்து டிரெண்டானதை சுரேஷ் தாத்தா உள்பட யாருமே மறந்திருக்க மாட்டார்கள்.

  சபாஷ் சரியான போட்டி

  சபாஷ் சரியான போட்டி

  சுரேஷ் தாத்தா ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் வீடு, அர்ச்சனா வந்தவுடன் அவரது கன்ட்ரோலுக்கு மாறியது. பிக் பாஸையே வேலையில் இருந்து அர்ச்சனா தூக்கி விடுவார் என மீம்கள் பறந்தன. இப்போ, சுச்சியின் என்ட்ரியை பார்த்த அர்ச்சனா கொடுத்த ரியாக்‌ஷனை பார்த்த ரசிகர்கள் சபாஷ் சரியான போட்டி என்றும், அர்ச்சனாவுக்கு ஆப்பு இருக்கு என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  பிக் பாஸா? சூப்பர் சிங்கரா?

  பிக் பாஸா? சூப்பர் சிங்கரா?

  இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியாகவே மாறிவிட்டது. வேல்முருகன், ஆஜீத் என இரு பாடகர்கள் ஏற்கனவே போட்டியாளர்களாக இடம் பெற்றனர். அப்புறம் பார்த்தா ஷிவானி திடீர்னு பாடுறாங்க, பாலாஜி முருகதாஸ் ஷிவானிக்காக பாடுறார். இப்போ வேல்முருகன் வீட்டை விட்டு வெளியேறும் நிலையில், இன்னொரு பிரபல பாடகியான சுசித்ரா உள்ளே வராங்க, இதை பார்த்த ரசிகர்கள், இது பிக் பாஸ் நிகழ்ச்சியா? இல்லை சூப்பர் சிங்கரா? என கலாய்த்து வருகின்றனர்.

  English summary
  Bigg Boss fans confused after entry of Singer Suchitra, is this Bigg Boss? Or Super Singer? They raised questions after watched promo 2.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X