For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்னடா அன்சீனுக்கெல்லாம் புரமோவா.. பாவம் வேல்.. விக்ரம் வேதா விஜய்சேதுபதி மாதிரி சிரிக்கும் மொட்டை!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இரண்டாவது வாரத்தில் தான் ஹைஸ்பீட் எடுக்க ஆரம்பித்து இருக்கிறது.

  வனிதா விஜயகுமாரை எல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு மொட்டை தல சுரேஷ் சக்கரவர்த்தி மரண ஆட்டம் ஆடுகிறார்.

  விஜய் மியூசிக்கில் இன்றைய எபிசோடின் அன்சீன் காட்சிகளுக்கும் புரமோ போட ஆரம்பிச்சுட்டாங்க பாஸ்..

  கண்கலங்கிய சனம் ஷெட்டி.. கவலைப்படாத ஷிவானி.. எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் எனக்கு வேண்டாம்... வேற லெவல்மா நீ!

  ஓட்டுப் போடும் போதே

  ஓட்டுப் போடும் போதே

  ஓட்டுப் போடும் போதே யோசிச்சு போட சொன்ன கமல் பேச்சை கேட்காமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் மொட்டை தல சுரேஷை தலைவராக்கி இப்போ அவஸ்த்தை படுறாங்க, சர்வாதிகாரி டாஸ்க் வைத்து, அவங்களை மறைமுகமா தாக்கியது போல, மொட்டையை வச்சி, அரசியல் பண்ணுகிறாரா கமல் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

  ஸ்பீடு ஏறுது

  ஸ்பீடு ஏறுது

  முதல் வாரத்தில் ஸ்லோவாக ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இரண்டாம் வாரத்தில் தான் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. தலைவராக இல்லாத போதே பல பட்டாசுகளை கொளுத்திப் போட்ட மொட்டை மாமா, இப்போ அதிகாரம் கிடைச்சதும் இஷ்டத்துக்கு ஆட ஆரம்பித்துள்ளார் என்பது புரமோ மற்றும் அன்சீன் புரமோ வீடியோக்கள் மூலமாக தெரிய வருகிறது.

  விஜய் மியூசிக்கில் அன்சீன்

  விஜய் மியூசிக்கில் அன்சீன்

  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்த அன்சீன் காட்சிகளை டிவியில் பார்க்க முடியாதா? என புலம்பிய பிக் பாஸ் ரசிகர்களுக்கா விஜய் மியூசிக்கில் இரவு 10.30 மணிக்கு மேல் பிக் பாஸ் அன்சீன் அதாவது எந்தவொரு கட்டும் இல்லாமல் அன்றைய எபிசோடு முழுமையாக போடப்படும். விஜய் மியூசிக்கையும் பிரபலப்படுத்த இப்படியொரு ஐடியா.

  அன்சீனுக்கும் புரமோ

  அன்சீனுக்கும் புரமோ

  இன்னைக்கு அன்சீனில் என்ன நடக்கப் போகிறது என்ற புரமோவை தற்போது விஜய் மியூசிக் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். சனம் ஷெட்டி, வேல் முருகனுக்கு பிக் பாஸ் கேம் பற்றியும், மொட்டை தல சுரேஷ் ஆடும் சகுனி ஆட்டம் பற்றியும் புட்டு புட்டு வைக்கிறார்.

  பாவம் வேல்முருகன்

  பாவம் வேல்முருகன்

  ஒரே ஒரு சட்டையை கொடுத்துட்டு, படையப்பா பட செந்தில் மாதிரி வேல் முருகனை பாடாய் படுத்துகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. கேமுக்காக இப்படியெல்லாம் செய்வாங்களா? மக்கள் பார்ப்பாங்களே என பாவமாக வேல்முருகன் கேட்டு வரும் அன்சீன் வீடியோ இப்போ வெளியாகி உள்ளது. ஆனால், இவர் தான் சுரேஷை தாக்கினாரா? என்கிற தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

  விக்ரம் வேதா விஜய்சேதுபதி மாதிரி

  விக்ரம் வேதா விஜய்சேதுபதி மாதிரி

  மேலும், பக்காவான பிக் பாஸ் கேம் பிளான் உடன் ஒவ்வொரு காயாக நகர்த்தி சதுரங்கம் ஆடி வரும் சகுனி மாமா சுரேஷ் சக்கரவர்த்தி, இந்த அன்சீன் புரமோ வீடியோவில் விக்ரம் வேதா படத்தில் வரும் விஜய்சேதுபதி மாதிரி வில்லத்தனமாக சிரிக்கிறார். பேக்ரவுண்டில் விக்ரம் வேதா மியூசிக்கையும் போட்டு விஜய் மியூசிக் ஹைப் ஏற்றி உள்ளது.

  மொட்டை சுரேஷ் கெட்ட சுரேஷ்

  மொட்டை சுரேஷ் கெட்ட சுரேஷ்

  இந்த அன்சீன் புரமோவையும் ரசித்து பார்க்கும் பிக் பாஸ் ரசிகர்கள், மொட்டை சுரேஷ் கெட்ட சுரேஷ் டா என காஞ்சனா 3 படத்தின் ஜிஃப் இமேஜை போட்டு தெறிக்க விட்டுள்ளனர். இந்த சீசனை ரசனைகரமான பிக் பாஸ் சீசனாக மாற்ற போராடி வருகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி என்பது கண் கூடாக தெரிகிறது.

  ஏத்தி விடும் சனம்

  ஏத்தி விடும் சனம்

  சுரேஷ் சக்கரவர்த்தியை கூட நம்புங்க, வேல்முருகன் ஆனால், அந்த சனம் ஷெட்டியை மட்டும் நம்பாதீங்க, நல்லா ஏத்திவிட்டு உங்களை வெளியே அனுப்பிட்டு அவ விளையாடுவா என சனம் ஷெட்டியின் கூனி புத்தியை தெரிந்து கொண்டு பாவப்பட்ட வேல்முருகனை காப்பாற்ற நெட்டிசன்கள் அட்வைஸ் பண்ணி வருகின்றனர்.

  English summary
  Sanam Shetty explain about Suresh Chakaravarthy master game plan in Bigg Boss Tamil 4 house. Suresh Chakaravarthy smiles like Vikram Vedha VijaySethupathi in unseen promo goes viral.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X