For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விஜய் டிவி இப்படியெல்லாம் ஏமாத்தக் கூடாது.. புலம்பும் பிக் பாஸ் ரசிகர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?

  |

  சென்னை: நல்ல நல்ல சீனை எல்லாம் ஹாட்ஸ்டாரில் போட்டுவிட்டு, மொக்கை சீன்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்றீங்களே என பிக் பாஸ் ரசிகர்கள் அன்சீன் வீடியோக்களை பார்த்து புலம்பி வருகின்றனர்.

  Aranthangi Nisha & Rekha சேட்டைகள் | Unseen

  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை பிரபலப்படுத்தும் நோக்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை அதிக நேரம் அங்கே ஒளிபரப்பு செய்கின்றனர்.

  விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேரம் குறைவு என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

  அனிதாவுக்கு நச் பதிலடி கொடுத்த மொட்டை அங்கிள்.. அண்ட புளுகு புளுகி அழும் அனிதா.. அடுத்த புரமோ!

  நிஷாவை அமாவாசை என கலாய்த்த சுரேஷ்

  நிஷாவை அமாவாசை என கலாய்த்த சுரேஷ்

  விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சீன்களில் இந்த முக்கியமான காட்சியே இடம்பெறவில்லை. ஷிவானி, அனிதா சம்பத் உள்ளிட்டோரிடம் மோதும் மொட்டை தல சுரேஷ் அறந்தாங்கி நிஷாவின் மூன் வாக்கை அமாவாசை வாக் என கலாய்த்துள்ளார். அந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள், அட இதையெல்லாம் ஏன் டா டிவியில டெலிகாஸ்ட் பண்ணல என கொதித்தனர்.

  போன் இருந்தா

  போன் இருந்தா

  நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறாத காட்சிகளுடன் இன்று காலை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான எபிசோடில், இப்போ மட்டும் போன் இருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும் என சம்யுக்தா சொல்ல, நான் நினைச்சேன் நீ சொல்லிட்ட என சோபாவில் லுங்கி அணிந்து பப்பரப்பான்னு படுத்துக்கிட்டு சுரேஷ் சக்கரவர்த்தி சொல்கிறார்.

  ஃபீல் பண்ணும் ரியோ

  ஃபீல் பண்ணும் ரியோ

  கொஞ்சம் நேரம் சும்மா இருந்தாலே கை தானா மொபைலை தேடி போயிடும். போன் இல்லாம ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு என்கிறார். மேலும், தலைவி ரம்யா பாண்டியன், தன்னிடம் போன் இல்லாததையே மறந்துவிட்டு, என்னோட போட்டோஸ்லாம் உங்களுக்கு காட்றேன் என சொல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

  ரசிகர்கள் அப்செட்

  ரசிகர்கள் அப்செட்

  இப்படி ஏகப்பட்ட சுவாரஸ்யமான, நகைச்சுவையான காட்சிகளை பிரத்யேகமாக ஹாட்ஸ்டாரில் மட்டுமே பார்க்க முடியும் என்கிற அளவுக்கு விஜய் டிவி செய்திருப்பதால் பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியாத நிலையில், சமூக வலைதளத்தில் வெளியாகும் அன்சீன் வீடியோக்களை பார்த்து, இதெல்லாம் சேர்த்து போடலாம்ல என விஜய் டிவியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

  குறும்படம் இருக்குமா?

  குறும்படம் இருக்குமா?

  அடிக்கடி அனிதா சம்பத்தும், சுரேஷ் சக்கரவர்த்தியும் குறும்படம் போட சொல்லி வருவதால், அவர்கள் இருவரில் பிரச்சனையை முதலில் கிளப்பியது யார் என்பதை கண்டுபிடிக்கவும், யார் நடிக்கிறா? யார் இயல்பா இருக்கா என்பதை அறிந்து கொள்ள நிச்சயம் கமல் சார் இந்த வார இறுதியில் குறும்படம் வெளியிடுவார் என்று தெரிகிறது.

  சண்டை தீருமா?

  சண்டை தீருமா?

  ஆரம்பத்தில் இருந்தே மொட்டை தல சுரேஷின் பார்வைகளும், பேச்சுக்களும் வில்லத் தனமாவே இருக்கு என பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வாரா என்றும், அனிதா - சுரேஷ் இடையே நடைபெறும் சண்டை இந்த வாரத்திற்குள் தீருமா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

  காலையிலயே பார்த்துக்கலாம்

  காலையிலயே பார்த்துக்கலாம்

  நைட் தூங்காம கண் விழித்துப் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால், எல்லாத்தையும் எடிட் பண்ணிட்டு, ஒரு மணி நேரம் தான் போடுறாங்க, பொறுமையா மறுநாள் காலையில ஹாட்ஸ்டாரில் பார்த்தால், 1.43 மணி நேரம் நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம் என்றும் ஐபிஎல் பார்க்கும் ரசிகர்கள் வீட்டில் உள்ளவர்களின் மனங்களை மாற்றி வருகின்றனர். எப்படியோ விஜய் டிவியும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரும் போட்ட பிளான் சக்சஸ் தான்.

  English summary
  Bigg Boss Tamil 4 unseen videos are better than Vijay Tv telecast. Bigg Boss fans get upset after seeing good seens in Disney plus hotstar.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X