ஸ்மார்ட்டாக கேள்வி கேட்ட அமீர்...மனம் திறந்த போட்டியாளர்கள்
சென்னை : பிக்பாசில் 50 நாட்களுக்கு பிறகு வந்தாலும், டிக்கெட் டு ஃபினாலேவை வென்று முதல் ஆளாக ஃபைனலிஸ்ட் ஆனார் அமீர். ஆரம்பத்தில் சில நாட்கள் அமைதியாக இருந்த அமீர், பிறகு நியாயமான தனது கருத்துக்களை முன் வைக்க துவங்கினார்.
மற்றவர்களை எதிர்த்து கேள்வி கேட்பதிலும், நியாயமாக பேசுவதிலும் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார் அமீர். பாவனியுடன் அவர் நெருக்கம் காட்டி வருவது பல பிரச்சனைகளை ஏற்படுத்தி, விவாதத்திற்கு உள்ளான போதிலும், அவரது கதையை கேட்ட பிறகு அனைவருக்கும் அமீர் மீது தனி பாசமே வந்து விட்டது.

100 வது நாளில் பிக்பாஸ்
பிக்பாசில் 100 வது நாளில் ஸ்பெஷலாக ஏதாவது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் போல் மாற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

கலாய்த்த பிரியங்கா, ராஜு
வழக்கம் போல் பிரியங்கா, ராஜு ஆகியோர் பிக்பாசை கலாய்ப்பது போல் செய்து காட்டினர். ராஜு, பிரியங்காவை வெளியேற்றினால் பிக்பாஸ் எப்படி பேசி இருப்பார் என பேசி காட்டினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கேள்வி கேட்ட அமீர்
இதில் பிக்பாசாக மாறி இருக்கும் அமீர், ஃபைனலில் வெல்ல யாருக்கு தகுதி உள்ளது. என்ன காரணம் என சொல்லுங்கள் என கேட்கிறார். ராஜு ஆரம்பம் முதலே அனைவரையும் ஜாலியாக வைத்திருக்கிறார். அது சாதாரண விஷயம் இல்லை என கூறுகிறார் பிரியங்கா. நிரூப், பிரியங்கா பற்றி கூறுகிறார்.
Recommended Video

நிரூப் தான் ஃபேவரைட்
இந்த ப்ரோமோக்களை பார்த்து விட்டு, ஆரம்பம் முதலே அனைத்து பெண் போட்டியாளர்களுக்கும் பிடித்தவராக நிரூப் தான் இருக்கிறார். நிரூப் தான் குழந்தை தனமாக நடந்து கொள்கிறார். பிரியங்கா தான் கடந்த சில நாட்களாக டிரெண்டிங்கில் இருக்கிறார் என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











