மனசுல இடம்பிடிக்கனும்...ஃபினாலே வாரத்தில் ஓப்பனாக பேசிய ராஜு
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ல் இது ஃபினாலே வாரம். 106 நாட்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சி தற்போது 98 நாட்களை கடந்து விட்டது. இறுதி போட்டியாளர்களாக 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
ஃபைனலிஸ்டாக இருக்கும் ராஜு, பிரியங்கா, நிரூப், அமீர், பாவனி ஆகியோருக்காக இந்த வாரம் டாஸ்க்குகள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் 99 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மக்களிடம் பேச வாய்ப்பு
இதன் முதல் ப்ரோமோவில் டாஸ்க் புக்கை ராஜு வாசிக்கிறார். கோல்டன் மைக் கடிதம் என டாஸ்கிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. யார் வெற்றியாளர் என்பதை தேர்வு செய்வதற்காக கடைசியாக மக்களிடம் பேச வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதில் தான் நேர்மையாக விளையாடி இருப்பதாக பாவனியும், சில ஃபிராட் வேலை செய்திருப்பதற்காக தன்னை மன்னிக்கும் படி நிரூப்பும் பேசுகிறார்கள்.

வாழ்க்கை மாற போகிறது
இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இரண்டாவது ப்ரோமோவில் ராஜு ஓப்பனாக பேசுகிறார். அதில் அவர், நடிக்க வர எல்லோருக்கும் ஃபேமஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டதால் தான் இன்று இது ஒரு வாழ்க்கையாக மாற போகிறது என நம்புகிறேன். மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தாலும், சிரித்தாலும் அதில் நமக்கொரு ஜாலி. அது போல தான் இந்த வீட்டிலும் இருந்திருக்கிறேன் என நினைக்கிறேன்.

மனசுல இடம்பிடிக்கனும்
இந்த மாதிரி ஒருத்தன். இந்த மாதிரி ஒரு அண்ணனோ, தம்பியோ நம்ம வீட்டிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என உங்கள் யார் மனதிலாவது இடம்பிடித்திருந்தால் அதுவே எனக்கு மிகப் பெரிய சந்தோஷம் என ராஜு பேசி உள்ளார். ராஜுவின் இந்த யதார்த்தமான பேச்சு பலரையும் கவர்ந்துள்ளது.

ராஜு தான் டைட்டில் வின்னர்
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள், ராஜு தான் டைட்டில் வின்னர். ராஜு தான் டைட்டில் வின் பண்ண வேண்டும் என கமெண்ட் செய்துள்ளனர். அவரைத் தொடர்ந்து பிரியங்காவிற்கு ஆதரவாக பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். பிரியங்கா தான் டைட்டில் வெல்ல பொருத்தமான ஆள் என தெரிவித்துள்ளனர்.

யார் ஜெயிச்சாலும் ஒன்று தான்
ஃபைனலிஸ்டான ஐந்து பேருமே விஜய் டிவி.,யின் தயாரிப்புகள் என்பதால் யார் வெற்றி பெற்றாலும் ஒன்று தான் என நெட்டிசன்கள் பலர் கலாய்த்துள்ளனர். ராஜு, பிரியங்காவை வெற்றி பெற வைக்கத்தான் பல டாஸ்க்குகளையே நடத்தி உள்ளனர். அதனால் தான் அவர்கள் இருவரும் கடைசி வரை எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக இருந்து வருகிறார்கள் என பலர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











