கூட்டத்துல காணாம போனவங்க பட்டியல்.. நிச்சயம் இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கும் போல.. புரமோ 2!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் 12ம் நாளான இன்றைய 2வது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த இரு வாரங்களாக கதை சொல்லட்டுமா டாஸ்க் போட்டு போட்டியாளர்கள் பற்றிய அறிமுகத்திற்கே செலவு செய்த நிலையில், போட்டியாளர்களுக்குள் சண்டையை மூட்டி விடும் படலம் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு இன்று அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்மென்ட் ஜெயிலுக்குள் முதல் ஆளாக போக போறவங்க யார் என்பதை காணவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கொளுத்திப் போட்ட பிக் பாஸ்

கொளுத்திப் போட்ட பிக் பாஸ்

தனது கொளுத்திப் போடும் வேலையை இந்த சீசனில் கச்சிதமாக ஆரம்பித்துள்ளார் பிக் பாஸ். இன்று வெளியான முதல் புரமோவில் அபிஷேக் ராஜா கூட்டத்தில் காணாமல் போனவங்க பட்டியலை சக ஹவுஸ்மேட்கள் சொல்ல வேண்டும் என இட்ட கட்டளையை ஹவுஸ்மேட்களிடம் வாசித்துக் காட்ட பிரியங்கா பிக் பாஸ் கொளுத்திப் போட ஆரம்பித்துட்டார் என கலாய்த்தார்.

கூட்டத்தில் காணாமல் போனவர்கள்

கூட்டத்தில் காணாமல் போனவர்கள்

பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கூட்டத்தில் காணாமல் போனவர்கள் என இருவரது பெயர்களை கூறுவது தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரமோவில் காட்டப்பட்டுள்ளது. மதுமிதா, அபிநய், ஸ்ருதி, நடியா சங், இசை மற்றும் அக்‌ஷரா உள்ளிட்ட போட்டியாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இன்றைய எபிசோடில் மேலும், யாரெல்லாம் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெறுகின்றனர் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அம்மனாக இசைவாணி

அம்மனாக இசைவாணி

சரஸ்வதி சபதம் நாடகத்தையே இந்த முறையும் பிக் பாஸ் வீட்டில் அரங்கேற்ற போகின்றனரா என்கிற கேள்வி போட்டியாளர்கள் சிவன், விஷ்ணு, பிரம்மா, பார்வதி, லக்‌ஷ்மி, சரஸ்வதி கெட்டப்பில் இருப்பதை பார்த்ததுமே ரசிகர்களுக்கு தோன்றி விடுகிறது. அம்மனாக இசைவாணி கெட்டப் போட்டுள்ள நிலையில், அவர் வீட்டில் காணாமல் போய் விட்டார் என சக போட்டியாளர்கள் அவர் மீது குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

நியாயமான நாடியா

நியாயமான நாடியா

நாடியா சங்கிடம் நீங்க ரெண்டு பேரு சொல்லுங்களேன் என கேட்க, கூட்டத்தில் காணாமல் போனவர் என்றால் அது நான் தான் என தனது பெயரையே சொல்லி நியாயமான நடியா சங்காக ரசிகர்கள் மத்தியில் ஸ்கோர் செய்துள்ளார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா வெளியேற மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.

அக்‌ஷரா தான் டார்கெட்

அக்‌ஷரா தான் டார்கெட்

பிரியங்கா இம்முறையும் சிரித்துக் கொண்டே அக்‌ஷரா முன்பாகவே அக்‌ஷரா கூட்டத்தில் காணாமல் போய்விட்டார் என சொல்கிறார். பிக் பாஸ் கேமராக்கள் அதிகம் ஃபோகஸ் செய்வதையே அக்‌ஷராவைத் தான் என்பது பிரியங்காவுக்கு தெரியவில்லையா? அல்லது இருவருக்கும் இடையே முன் பகை ஏதாவது உள்ளதா? என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சம்பவம் இருக்கு

சம்பவம் இருக்கு

விஜயதசமி கொண்டாட்டத்தை எந்தவொரு போட்டியாளர்களும் ஜாலியாக எடுத்துக்கக் கூடாது என்பதற்காக இப்படியொரு பிரச்சனையை போட்டியாளர்கள் மத்தியில் பிக் பாஸ் கிளப்பி உள்ள நிலையில், நிச்சயம் இன்னைக்கு பிக் பாஸ் வீட்டில் பெரிய சம்பவம் இருக்கு என்றும் இதன் வெளிப்பாடு சனிக்கிழமை மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் நல்லாவே தெரியும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X