சிபி ரூ. 12 லட்சம் பெட்டியை தூக்க ரியல் காரணம் இதுதானா? 3வது புரமோவால் வெளியான ரகசியம்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து ரூ. 12 லட்சம் பெட்டியுடன் ரன் ஆகி உள்ளார் சிபி புவன சந்திரன்.

Recommended Video

Bigg Boss வீட்டை விட்டு வெளியேறிய CIBY | Ciby Walkout with 12 Lakhs | Ciby, Amir, Bigg Boss 5 Tamil

ரூ. 11 லட்சம் பெட்டி வரும் போது அமீர் அதை எடுக்கப் போவதாக சொல்லி சிபியை பிராங்க் பண்ண நிலையில், ரூ. 12 லட்சம் வந்த உடன் சிபி அதை எடுத்துக் கொண்டு கிளம்பி உள்ளார்.

சிபியின் இந்த மூவை ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மற்றவர்களுக்கு இந்த கேமை சரியாக விளையாட தெரியவில்லை என்றும் கலாய்த்து வருகின்றனர்.

ரியல் ரன்னர் அப்

ரியல் ரன்னர் அப்

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் ஒரே ஒரு டைட்டில் வின்னர் தான். ரன்னர் அப் என்பது கமல் தன்னுடன் மேடையில் அழைத்துக் கொண்டு சென்று ஒரு கையை விட்டு மறு கையை உயர்த்தி ஏமாற்றுவதற்காக இருக்கும் பொம்மை அல்ல என்றும் பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு செல்பவர் தான் ரியல் ரன்னர் அப் என சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தாமரையிடம் கடைசியாக கேட்ட சிபி

தாமரையிடம் கடைசியாக கேட்ட சிபி

உங்களுக்கு வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள். நான் விட்டு விடுகிறேன். இல்லை என்றால் நான் எடுத்துக் கொண்டு போய் விடுவேன் என சிபி ஓப்பனாக சொல்லும் மூன்றாவது புரமோ தற்போது வெளியாகி உள்ளது. இன்னமும் தாமரை கேம் பற்றிய புரிதல் இல்லாமல் பெட்டியை எடுக்காமல் உள்ளாரே என அவரது ரசிகர்களே தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

பிராங்க் பண்ண அமீர்

பிராங்க் பண்ண அமீர்

ரூ. 11 லட்சம் வரும் போது சிபியிடம் தான் தான் பெட்டியை எடுத்துக் கொண்டு போவதாக சொல்லி கடைசியில் பிராங்க் பண்ணேன் சிபி என வெறுப்பேற்றி விட்டார். பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை யாரும் பெட்டியை எடுக்கப் போவதில்லை என்றும் இன்னமும் பெரிய தொகைக்காக சிலர் காத்திருக்கின்றனர் என நினைத்த சிபி சரியான முடிவுடன் தற்போது வெளியேறி உள்ளார்.

நிரூப் தான் காரணம்

நிரூப் தான் காரணம்

ராஜு ஜெயமோகனை நாமினேட் செய்யாமல் சிபியை நாமினேட் செய்த நிரூப் தனது நாமினேஷனை வீணடிக்க விரும்பவில்லை. எப்படி இருந்தாலும் இந்த வாரம் நீ தான் வெளியே போயிடுவ என சிபியின் கான்ஃபிடன்ஸை உடைத்ததால் தான் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து சிபி அதுவும் மற்றவர்கள் யாரும் இதுவரை எடுக்காத நிலையில் எடுத்துக் கொண்டு கிளம்பி உள்ளார் என ரசிகர்கள் மூன்றாவது புரமோவை பார்த்தும் சிபி செய்தது சரி தான் என பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X